இந்திய சமையலுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள்
இது நான் எனது தோழிகளின் விருப்பத்திற்காக தயாரித்த ஒரு பட்டியல் ஆகும். மளிகை பொருட்களின் பட்டியல் இருந்தால் மிகவும் பொருட்கள் வாங்க வசதியாக இருக்கும். நான் கீழே கொடுத்துள்ளது, எனது குடும்பத்தில் இரண்டு பெரியவர்கள் இரண்டு குழந்தைகளுக்கு இந்த அளவு ஒரு மாதத்திற்கு போதுமானதாகும். நமது பெற்றோர் வெளியூரிலிருந்து வந்து ஒரு வாரம் தங்கியிருந்தாலும் இந்த அளவு போதுமானதாக இருக்கும்.
பெரியவர்கள் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கும் சரியாக இருக்கும். புதிதாக திருமணம் ஆனவர்கள் இதில் பாதியளவு வாங்கிக் கொள்ளலாம். விருந்தினர் அந்த மாதத்தில் வருவதாக இருந்தால் சற்று அதிகமாக வாங்கி கொள்ளலாம். அத்துடன் நாம் தென்னிந்தியர்கள் ஆதலால் நமது மதிய உணவில் அரிசி முக்கியமாக இடம்பெறும் ஒன்றாகும். காலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவிற்கு பல வகையான டிபன் வகைகள் கொடுத்துள்ளேன். அதற்கு ஏற்றார் போல இந்த பட்டியல் இருக்கும்.
நீங்கள் இதை பொதுவான பட்டியலாக வைத்து கொண்டு உங்கள் தேவைக்கு ஏற்றார் போல மாற்றி கொள்ளலாம். உதாரணமாக உங்கள் குடும்பத்தினர் சப்பாத்தி அதிகமாக சேர்த்து கொள்பவர்களாக இருந்தால் அரிசி அளவை குறைத்து கோதுமை மாவு வாங்கி கொள்ளலாம். நீங்கள் உப்புமா விரும்பாவிட்டால் சேமியா, ரவை மற்றும் அவல் போன்றவற்றை தவிர்த்து கொள்ளலாம். சில சமயங்களில் முதல் மாதத்தில் வாங்கிய மளிகை பொருட்கள் மீதம் இருக்கும். மீதமான பொருட்களே இந்த மாதத்திற்கு போதுமானது என நினைத்தால் ஒரு மாதத்திற்கு பொருட்கள் வாங்காமல் இருக்கலாம். நீங்கள் தான் உங்கள் சமையலறையின் தலைவர். அதனால் உங்கள் மனதிற்கு ஏற்றபடி திட்டமிட்டு கொள்ளலாம்.
இங்கு நான் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும், அவரவர் பயன்பாட்டிற்கு பட்டியலிட்டு கொள்ளும் வகையிலும் கொடுத்துள்ளேன். வாங்கி மகிழுங்கள்.
மாத மளிகை பொருட்களின் பட்டியல் வீடியோ
அரிசி & சிற்றுண்டி வகைகளுக்கு தேவையானவை
- புழுங்கல் அரிசி – 5 – 7 கிலோ ( வெள்ளை சாதம் )
- இட்லி அரிசி – 5 கிலோ ( இட்லி / தோசை , அடை மாவு மற்றும் பலவற்றிற்கு )
- பச்சரிசி – 2 கிலோ (ஆப்பம் , மற்றும் பொங்கல் )
- பாஸ்மதி அரிசி – 2 கிலோ ( பிரியாணி , புலாவ் )
- பிரவுன் அரிசி, சிகப்பரிசி, கறுப்பு அரிசி ( ஏதாவது ஒன்று ) – 1 கிலோ
- கோதுமை மாவு – 2 கிலோ
- மைதா – 1/2 கிலோ
- ரவை – 1/2 கிலோ ( உப்புமா, ரவை தோசை )
- ராகி மாவு – 1/ 2 கிலோ
- அரிசி மாவு – 1 கிலோ
- தானிய வகைகள் – ( தினை, குதிரை வாலி, கம்பு, ராகி ) – 1/ 2 கிலோ + 1/ 2 கிலோ ( ஏதாவது இரண்டு வகை )
- பாஸ்தா – 1/ 2 கிலோ ( ஒன்று அல்லது இரண்டு வடிவத்தில் உள்ளது )
- நூடுல்ஸ் – 1 பெரிய பாக்கெட் ( 4 அல்லது 6 கொண்டது )
- அவல் – 1 /2 கிலோ ( உப்புமாவிற்கு )
- ஜவ்வரிசி – 1 /2 கிலோ( பாயசம் அல்லது உப்புமாவிற்கு )
- கடலை மாவு – 1/ 4 கிலோ ( பஜ்ஜி அல்லது டோக்ளாவிற்கு )
- சேமியா – 1/ 2 கிலோ ( உப்புமா , பாயசம் )
- அரிசி சேவை – 1 /2 கிலோ
- உடைத்த கோதுமை ரவை ( சம்பா கோதுமை ) – 1 /2 கிலோ (உப்புமாவிற்கு )
பருப்பு வகைகள்
- உளுத்தம் பருப்பு – 2 கிலோ
- துவரம் பருப்பு – 1 கிலோ
- பாசி பருப்பு – 1 கிலோ
- கடலை பருப்பு – 1/ 2 கிலோ
- சுண்டல் கடலை – 1 /2 கிலோ
- காய்ந்த பச்சை பட்டாணி – 1 /2 கிலோ
- பச்சை பயறு அல்லது கறுப்பு சுண்டல் கடலை – 1 / 4 கிலோ
- முழு உளுந்து , முழு துவரை ,சோயா பீன்ஸ், டபுள் பீன்ஸ், மசூர் பருப்பு – 1/ 4 கிலோ( இதில் ஏதாவது இரண்டு வகை )
- பதப்படுத்திய பச்சை பட்டாணி – 1 பாக்கெட்
- பதப்படுத்திய சோளம் – 1 பாக்கெட்
எண்ணெய் வகைகள்
- சூரியகாந்தி எண்ணெய் அல்லது ஏதேனும் ஒரு வகை எண்ணெய் – 1 லிட்டர்
- ரைஸ் பிரான் அல்லது கடலை எண்ணெய் – 1 லிட்டர்
- நல்லெண்ணெய் – 1 / 2 லிட்டர் ( இட்லி மற்றும் தோசைக்கு)
- தேங்காய் எண்ணெய் – 1/ 2 லிட்டர் ( பாரம்பரிய தென்னிந்திய சமையலுக்கு )
- ஆலிவ் எண்ணெய் – 1/ 4 லிட்டர் ( வெளி நாட்டு உணவு வகைகள் மற்றும் பேக்கிங் )
- நெய் – 200 கிராம்
பானங்கள், மசாலா பொருட்கள், சுவையூட்டிகள்
- உப்பு – 1 கிலோ
- கல் உப்பு – 1 கிலோ
- வெல்லம் – 1 கிலோ
- பனை வெல்லம் – 1/ 4 கிலோ (அல்லது நாட்டு சர்க்கரை கூழ் வகைகளுக்கு)
- டீத்தூள் – 100 கிராம்
- காஃபி தூள் – 100 கிராம்
- சத்து பானம் – 1 பாக்கெட் (தேவைப்பட்டால் )
- சாக்லெட் சிரப் / கெரமல் சிரப் / ஸ்ட்ராபெர்ரி சிரப் – 1 பாட்டில்
- புளி – 1/ 4 கிலோ
- பெருங்காயம் – 1 பாக்ஸ்
- வர மிளகாய் – 1/ 4 கிலோ
- கடுகு – 100 கிராம்
- சீரகம் – 100 கிராம்
- பெருஞ்சீரகம் (சோம்பு) 100 கிராம்
- வெந்தயம் – 100 கிராம்
- மிளகு – 100 கிராம்
- கசகசா – 50 கிராம்
- எள் (வெள்ளை அல்லது கருப்பு ) – 50 கிராம்
- ஓமம் – 50 கிராம்
- சுக்கு (உலர்ந்த இஞ்சி ) – 50 கிராம்
- ஏலக்காய் – 25 கிராம்
- பட்டை – 25 கிராம்
- நட்சத்திர சோம்பு (ஸ்டார் அனிஸ்) – 1 சிறிய பாக்கெட்
- கிராம்பு – 1 சிறிய பாக்கெட்
- பிரியாணி இலை – 1 சிறிய பாக்கெட்
- பப்படம் அல்லது வடகம் – 1 அல்லது 2 பாக்கெட்
- ஊறுகாய் – 1 பாட்டில்
- இஞ்சி, பூண்டு விழுது – 1 பாக்கெட்
- மஞ்சள் தூள் – 100 கிராம்
- சாம்பார் தூள் – 100 கிராம்
- சிக்கன் மசாலா – 100 கிராம்
- வர மிளகாய் தூள் – 200 கிராம்
- கொத்தமல்லி தூள் – 200 கிராம்
- கரம் மசாலா பவுடர் – 200 கிராம்
- கருப்பு மிளகு தூள் – 50 கிராம்
- சீரகத்தூள் – 50 கிராம்
- இட்லி பொடி – 100 கிராம்
- பூண்டு பொடி, ரசப்பொடி , வத்தக்குழம்பு பேஸ்ட் – தேவைப்பட்டால்
- மற்ற மசாலா வகைகள் (சென்னா மசாலா, பாவ் பாஜி மசாலா, கோபி 65 மிக்ஸ் மற்றும் பல – தேவைப்பட்டால்)
- சிட்ரிக் ஆஸிட், நாவல் விதைகள், அஜினோமோட்டோ, உலர்ந்த இஞ்சி – தேவைப்பட்டால்
- சோயா சாஸ் – 1 பாட்டில்
- தக்காளி கெட்ச்அப் – 1 பாட்டில்
- சில்லி சாஸ் – 1 பாட்டில்
- வினிகர் – 1 பாட்டில்
- மயோனைஸ் – 1 பாட்டில்
- ஜாம் – 1 பாட்டில்
- சீஸ் ஸ்பெரெட் – 1 பாக்கெட்
- சீஸ் ஸ்லைஸ் – 1 பாக்கெட் (பர்கர், சாண்ட்விச் தயாரிக்க )
- சீஸ் பிளாக் – 1 பாக்கெட் (பீஸா, சாண்ட்விச் தயாரிக்க )
- தயிர் அல்லது சுவை தயிர் – தேவைப்பட்டால்
- வெண்ணெய் – 200 கிராம்
- பன்னீர் – 200 கிராம்
- பிரஷ் கிரீம் – 1 பாக்கெட்
- தேன் – 1 பாட்டில்
கொட்டைகள், விதைகள், உலர் பழங்கள் & பேக்கிங் பொருட்கள்
- முந்திரி – 50 கிராம்
- உலர் திராட்சை – 50 கிராம்
- பாதாம் – 50 கிராம்
- பேரீச்சம்பழம் – 100 கிராம்
- நிலக்கடலை – 100 கிராம்
- மற்ற வகை பருப்பு (வால்நட், பிஸ்தா ,மற்றவை ) – தேவையான அளவு
- மற்ற வகை உலர் பழங்கள் – (உலர் கூஸ்பெர்ரி, அத்திப்பழம் மற்றவை) – தேவையான அளவு
- ஈஸ்ட் – 1 பாக்ஸ் ( ஆப்பம் , பிரட் தயாரிக்க )
- பேக்கிங் சோடா – (ஸெரில் பாக்ஸ் – 2 ( காலை சிற்றுண்டிக்கு பதில் )
- பிரட் – 2 பாக்கெட் (சாண்ட்விச் ,ஸ்வீட் பிரட், பாவ் பன், பர்கர் பன், ஹாட்டாக் பன் ,பீஸா பேஸ் தயாரிக்க)
- சுவை தயிர் – தேவைப்பட்டால்
- சமையல் சோடா – 1 சிறிய பாக்கெட்
- பேக்கிங் பவுடர் – 1 சிறிய பாக்கெட்
- கோக்கோ பவுடர் – 1 சிறிய பாக்கெட்
- வெண்ணிலா எசென்ஸ் – 1 பாட்டில்
- கண்டென்ஸ்டு மில்க் – 1 டின்
திண்பண்டங்கள்
- பிஸ்கட் , கேக், குக்கீஸ் – தேவையான அளவு (நான் 8-10 பாக்கெட் வாங்குவேன்)
- பொரித்த பாக்கெட் திண்பண்டங்கள் – தேவையான அளவு (நான் 4-5 பாக்கெட் வாங்குவேன்)
- பாப்கார்ன் பாக்கெட் – 2
சுத்தம் செய்ய தேவையானவை
- பாத்திரம் கழுவும் சோப் அல்லது லிக்விட் – 500 கிராம்
- சலவை இயந்திரம் (வாஷிங் மெஷின்) சோப்பு – 1 கிலோ
- ப்ளீச் ( வெள்ளை துணிகளுக்கு) – 1 பாட்டில்
- இன்ஸ்டண்ட் ஸ்டார்ச் – தேவைப்பட்டால்
- நீலம், காலர் கிளீனர், துணி மென்மைபடுத்தும் லிக்விட் – தேவைப்பட்டால்
- துணி துவைக்கும் சோப்பு – 2 பார்கள்
- கை கழுவும் லிக்விட் – 1 பாட்டில்
- டாய்லெட் கிளீனர் – 1 பாட்டில்
- ஃப்ளோர் கிளீனர் – 1 பாட்டில்
- கிளாஸ் கிளீனர் – 1 பாட்டில்
- பொதுவான கிளீனர் (அல்லது சோப் ஆயில்) – 1 பாட்டில் (கிச்சன் சிம்னி, டைல்ஸ், சிங்க் சுத்தம் செய்ய)
- ரூம் ஸ்ப்ரே – 1 பாட்டில்
- குளியறைக்கு ஏர் ஃப்ரெஷ்னர் – 1 அல்லது 2
- ஹார்பிக் டாப்ளட் – 1 பாக்கெட்
- குப்பையிடும் பைகள் – 2 பாக்கெட்
- துடைப்பம் , துடைப்பான் (மாப்), சுத்தம் செய்ய பிரஷ்கள் – தேவைக்கேற்ப
- பூச்சி கட்டுப்படுத்த – தேவைக்கேற்ப (கொசுவர்த்தி லிக்விட், சாக்பீஸ் (எறும்பு, கரப்பான் ), நாப்தலின் பால்ஸ்)
சோப்பு மற்றும் இதர பொருட்கள்
- குளியல் சோப்பு – 5 பார்
- முகப்பவுடர் – 1 பாட்டில்
- வியர்வை போக்கி – (ஆண் மற்றும் பெண்)
- வாசனை திரவியம் – (ஆண் மற்றும் பெண்)
- ஷாம்பூ – 1 பாட்டில்
- கண்டிஷனர் – 1 பாட்டில்
- மாய்ஸ்சரைசர் அல்லது பாடி லோஷன் – 1 பாட்டில்
- சன் ஸ்கீரீன் லோஷன் – 1 பாட்டில்
- ஹேர் ஆயில் அல்லது ஜெல் – 1 பாட்டில்
- டூத் பேஸ்ட் – 1
- டூத் பிரஷ் – தேவைப்பட்டால்
- டங்க் கிளீனர் – தேவைப்பட்டால்
- ஷேவிங் கிரீம் – 1 பாக்ஸ்
- ஷேவிங் ரேசர் – 1 பாக்கெட்
- கைகழுவும் லிக்விட் – 1 பாட்டில்
- டெட்டால் – 1 பாட்டில்
- உடல் அல்லது சிகையை அழகுபடுத்த பொருட்கள் – தேவையானவை
- சானிடரி நாப்கின் – 1 பாக்கெட்
- டாய்லெட் பேப்பர் ரோல் – 4 அல்லது 6 (அல்லது தேவையான அளவு)
- கிச்சன் ரோல் – 1
- காட்டன் பால்ஸ், இயர் பட்ஸ் – தேவைப்பட்டால்
மற்ற டிஸ்போஸபில்ஸ் (தேவைப்பட்டால்)
- டிஷ்யூ பேப்பர் – 1 பாக்கெட்
- பேப்பர் பிளேட் – 1 பாக்கெட்
- பேப்பர் கப் – 1 பாக்கெட்
- களைந்துவிடும் (டிஸ்போஸபில்) ஸ்பூன் – 1 பாக்கெட்
- அலுமினியம் ஃபாயில் – 1 ரோல்
- ஜிப்லாக் கவர் – 1 பாக்கெட்
- டூத்பிக் – 1 பாக்கெட்
காய்கறிகள் (ஒரு வாரத்திற்கு தேவையானவை)
- வெங்காயம் – 2 கிலோ
- தக்காளி – 2 கிலோ
- சின்ன வெங்காயம் – 1 கிலோ
- பூண்டு – 1/ 2 கிலோ
- இஞ்சி – 1/ 2 கிலோ
- பச்சை மிளகாய் – 100 கிராம்
- உருளைகிழங்கு – 1 கிலோ
- எலுமிச்சை – 3-5
- கொத்தமல்லி தழை – 1 கட்டு
- புதினா – 1 கட்டு
- கருவேப்பிலை – 1 கட்டு
- தேங்காய் -2
- கேரட் – 1/ 2 கிலோ
- மற்ற காய்கறிகள் – ஏதேனும் 4 அல்லது 5 வகைகள் ( 1/ 2 கிலோ வீதம் )
- பழங்கள் – ஏதேனும் 3 அல்லது 4 வகைகள் (1 கிலோ வீதம் )
- முட்டை – 12
- மீன் /கடல் உணவு – 2 கிலோ
- கோழி / இறைச்சி – 1 கிலோ
பிற பொருட்கள்
- பாட்டரிகள் – தேவைப்பட்டால்
- பல்பு வகைகள் – தேவைப்பட்டால்
- கார் கிளீனர் – தேவைப்பட்டால்