வீட்டுமுறையில் தயாரிக்கும் கொத்தமல்லி தூள்
உங்களுடன் பகிர்ந்துகொண்ட வீட்டுமுறையில் தயாரித்த வரமிளகாய் தூள் போன்று கொத்தமல்லி தூள் தயாரிக்கும் முறையை பகிர்கிறேன். இந்தியாவில் அதிகமாக சமையலில் வர மிளகாய் தூளும், கொத்தமல்லி தூளும் பயன்படுத்தபடுகிறது. அந்த மசாலா கலவை சேர்த்தால் தனி சுவை கிடைக்கும்.
வீட்டுமுறையில் தயாரிப்பதால் சுத்தமாகவும் சுவை கூடுதலாகவும், நீண்ட நாட்கள் வைத்திருக்கவும் முடியும். வீட்டில் தயாரித்து உபயோகித்தவர்கள் கடைகளில் வாங்கும்போது அதன் வித்தியாசத்தை அறிவார்கள். இதில் சற்றும் சந்தேகமே இல்லை. எனக்கு உறுதியாக தெரியும் கடைகளில் வாங்குவதில் சுவை நன்றாக இருப்பதில்லை. இதனால் சமையலின் சுவை அனைத்தும் வீணாகிவிடுகிறது.
வீட்டுமுறையில் தயாரிக்கும் கொத்தமல்லி தூள் தயாரிக்க 2 முறைகள் ஆகும் – வெய்யிலில் காயவைப்பது அல்லது வறுத்து அரைப்பது. நீங்கள் வெய்யில் பிரதேசத்தில் இருந்தால் கொத்தமல்லியை தட்டிலோ அல்லது ஓரு துணியிலோ பரத்தி வெய்யிலில் நன்றாக காய வைக்கவும். இன்னொருமுறை வறுத்து அரைப்பது. இங்கு நான் பகிர்ந்துள்ளது இரண்டாவது முறையாகும். நல்ல தரமான கொத்தமல்லி விதைகளை வாங்கிகொள்ளவும்.
வீட்டில் கொத்தமல்லி தூள் தயாரிக்கும் வீடியோ வழிமுறைகள்
கொத்தமல்லி தூள் செய்முறை
கொத்தமல்லி தூள்
Ingredients
- கொத்தமல்லி விதைகள் – ½ கிலோ
Instructions
- நல்ல தரமான கொத்தமல்லி விதைகள் வாங்கி அதில் கல் மற்றும் வேறு பொருட்கள் கலந்துள்ளதா என்று பார்த்து சுத்தம் செய்துகொள்ளவும்.
- அடிகனமான ஒரு கடாயில் கொத்தமல்லி சேர்த்து அதனுடன் கருவேப்பிலை சேர்க்கவும்.
- கைவிடாமல் 5 நிமிடங்கள் வறுக்கவும். கொத்தமல்லியும், கருவேப்பிலையும் நன்றாக வறுத்தபின்னர் மொறுமொறுப்பாகிவிடும். கையில் எடுத்து நசுக்கினால் உடையும். இதுவே சரியான பக்குவம்.
- வறுத்த கொத்தமல்லியை அரைப்பதற்கு முன்னர் ஆறவிடவும். நான் அருகில் உள்ள அரவை மில்லில் கொடுத்து அரைத்துகொள்வேன். அரவை மில் இல்லாதவர்கள் மிக்ஸியில் சிறிது சிறிதாக பிரித்து அரைத்துகொள்ளவும்.
- அரைத்தவுடன் ஒரு பேப்பரில் பரத்தி ஆறவிடவும். ஒரு மணிநேரம் கழித்து காற்றுபுகாத பாட்டிலில் போட்டுவைக்கவும்.