சக்கரை பொங்கல்
சக்கரை பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவாகும். பொங்கல் பண்டிகையின் போதும், வீடு கிரகப்பிரவேசத்தின் போதும் இது செய்யப்படுகிறது. வீட்டிற்கு வரும் புது விருந்தினருக்கும் இந்த பொங்கல் செய்யலாம்.
சக்கரை பொங்கல் செய்முறை
சக்கரை பொங்கல்
Ingredients
- பச்சரிசி – 1 டம்ளர்
- பாசி பருப்பு – ½ டம்ளர்
- வெல்லம் – 1.5 டம்ளர் (உடைத்தது)
- நெய்– ¼ டம்ளர்
- தண்ணீர் – 4 டம்ளர் (அரிசி, பருப்பு வேக வைக்க) (அல்லது 2 டம்ளர் தண்ணீர்+ 2 டம்ளர் பால்/ தேங்காய் பால் சேர்க்கலாம்)
- ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி
- தண்ணீர் – 1 டம்ளர் (வெல்லப்பாகு செய்ய)
- குங்குமப்பூ – 1 சிட்டிகை (விரும்பினால் சேர்க்கலாம்)
- முந்திரி, உலர் திராட்சை, பாதாம், சிறிய தேங்காய் துண்டுகள் - 1/4 டம்ளர் (உங்கள் விருப்பதிற்கேற்ப / எது வீட்டில் உள்ளதோ)
Instructions
- குக்கரில் பாசி பருப்பு சேர்த்து எண்ணெய் ஊற்றாமல் 5 நிமிடங்கள் வறுக்கவும்.
- அரிசியை நன்றாக கழுவி குக்கரில் சேர்த்து, 4 டம்ளர் தண்ணீர் (விரும்பினால் பால் சேர்த்து), நெய் சேர்க்கவும்.
- குக்கரில் 3-4 விசில் விட்டு (அரிசி, பருப்பு நன்றாக மசியும் வரை) வேகவிடவும். இதை கனமான அடிப்பாகம் உள்ள பாத்திரத்திலும், பானையிலும் செய்யலாம்)
- அரிசி வேகும் நேரத்தில், வாணலில் 1 மேசைக்கரண்டி நெய்விட்டு முந்திரி, பாதாம் பருப்பு பொன்னிறமாக வறுக்கவும். உலர் திராட்சையை கடைசியாக சூட்டில் சேர்க்கவும்.
- கனமான அடிப்பாகம் உள்ள பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லப்பாகு காய்ச்சி (வெல்லம் கரைந்து தண்ணீர் பதம் மாறி சிறிது கெட்டியாகும்) வடிகட்டவும். வெல்லம் சுத்தமாக இருந்தால் வடிகட்ட வேண்டாம்.
- குக்கரை திறந்த பின் காய்ச்சிய வெல்லப்பாகை ஊற்றி கலக்கவும். சூட்டோடு நன்றாக கலந்தால் அரிசி, பருப்பு மசியும். தண்ணீராக இருந்தால் அடுப்பை குறைத்து சிறிது கெட்டியாகும் வரை வைக்கவும்.
- தாளித்தவற்றை அரிசி, பருப்புடன் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான சக்கரை பொங்கல் தயார்.
- விரும்பினால் குங்குமப்பூ சேர்க்கலாம்.
- சக்கரை பொங்கல் ஆறினால் மேலும் கெட்டியாகும்.
பரிமாற பரிந்துரைப்பது
- சக்கரை பொங்கல் மாலை சிற்றுண்டியாகவொ, மதிய உணவு சாப்பிடும் முன்னரோ, மதிய உணவாகவோ பரிமாறலாம்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
- பச்சரிசிக்கு பதில் சாமை, குதிரைவாலி, தினை போன்ற சிறுதானியத்தில் சக்கரை பொங்கல் செய்தால் சுவையாகவும், சத்தாகவும் இருக்கும்.