ஆப்பம்
ஆப்பம் அல்லது அப்பம் கேரளாவில் மிகவும் பிரசித்தமான காலை உணவாகும். இது தமிழகத்திலும், இலங்கையிலும் செய்யப்படுகிறது. ஆப்பம் மிருதுவாக அரிசி மற்றும் தேங்காய் சேர்த்த மாவில் தயாரிக்கப்படுகிறது. இதை பாலப்பம் என்பார்கள். முன்னர் மாவு புளிக்க கள் சேர்த்து செய்வார்கள். அதை கள்ளப்பம் என்பார்கள். தற்போது ஈஸ்ட் பயன்படுத்தபடுகிறது. ஈஸ்ட் கிடைக்காவிடில் சமையல் சோடா (ஆப்ப சோடா) மாவில் கலந்து செய்யலாம்.
இதில் இன்னொரு வகை ஆப்பம் உண்டு வெள்ளையப்பம், இதே சுவையில்உள்ளது. பாலப்பம் மாவு தண்ணீர் சற்று அதிகம் சேர்த்து ஆப்பசட்டியில் செய்யப்படுவது. வெள்ளப்பம் என்பது மாவு சற்று கெட்டியாக வைத்து சாதாரண கல்லில் ஊற்றுவது.
ஆப்பம்
Ingredients
- பச்சரிசி – 2 கிண்ணம்
- துருவிய தேங்காய் – ¾ கிண்ணம்
- அவல் (அல்லது வேகவைத்த சாதம்) – ஒரு கையளவு
- ஈஸ்ட் – 1 தேக்கரண்டி
- சர்க்கரை – 2-3 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
Instructions
- அரிசியை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- துருவிய தேங்காயுடன் வடித்த சாதத்தை சேர்த்து மிக்ஸியில் மிருதுவாக அரைத்து கொள்ளவும்.
- இதனுடன் ஊறவைத்த அரிசி சேர்த்து அரைக்கவும். மாவு நைசாக இருக்க வேண்டும்.
- அரைத்த மாவுடன் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மாவை இரவு முழுவதும் புளிக்க விடவும். மாவு புளித்தபின்னர் ஈஸ்ட் சேர்ப்பதால் இரண்டு மடங்காகிவிடும்.
- இப்போது ஆப்பகல்லில் மாவை ஊற்றி சிறிது எண்ணெய் சேர்க்கவும். சாதாரண கல்லிலும் சுடலாம். ஆப்பகல்லில் ஊற்றுவதாக இருந்தால் மாவை ஊற்றி கல்லின் கைப்பிடியை பிடித்து வட்டமாக சுற்றவேண்டும். சிலருக்கு நடுவில் தடிமனாக மிருதுவாக இருப்பதை விரும்புவார்கள். இதற்கு சற்று அதிகமாக மாவு ஊற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மெல்லியதாக வரும்.
- மூடிவைத்து 2 நிமிடங்கள் வேகவிடவும். உங்களுக்கு ஓரங்கள் சிவந்து மொறுமொறுப்பாக வேண்டுமானால் மேலும் 2 நிமிடங்கள் வேகவிடவும்.
குறிப்பு
- உங்களுக்கு ஈஸ்டின் மணம் விரும்பாவிட்டால், ஒரு சிட்டிகை பேக்கிங்சோடா போட்டுகொள்ளலாம். மாவில் 30 நிமிடங்கள் முன்னர் போட்டு கலந்துகொள்ளவும்.
வேறுபாடாக பரிந்துரைப்பது
- கோதுமை ஆப்பமும் செய்யலாம். கோதுமை மாவுடன் உப்பு, சர்க்கரை, தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கலந்து புளிக்கவைத்து இதே முறையில் தயாரிக்கலாம்.
- ஆப்பம் செய்யும்போது முட்டையை நடுவில் உடைத்து ஊற்றி செய்தால் முட்டை ஆப்பம் தயார்.
பரிமாற பரிந்துரைப்பது
- ஆப்பம் இனிப்பான தேங்காய் பாலுடனும், ஸ்டூ, கடலை குழம்பு அல்லது ஏதேனும் ஒரு வகை குருமாவுடன் பரிமாறலாம்.