உருளைக்கிழங்கு புலாவ்
உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்தமான காய்கறிகளில் ஒன்றாகும். முக்கியமாக குழந்தைகளின் விருப்பமான காயாகும். இதை எந்த வகையில் எப்படி செய்தாலும் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். வீட்டில் காய்கறிகள் இல்லாதபோது உருளைக்கிழங்கை வைத்து இந்த புலாவை செய்து லன்ச் பாக்ஸ் கட்டவும் எளிதானதாகும். திடீர் விருந்தினர் வருகையின் போதும் அவசரத்திற்கு கை கொடுக்கும் சுவையான உணவாகும். வடித்த சாதம் இருந்தால் நொடியில் செய்து விருந்தினரை மகிழ்விக்கலாம். நீங்களும் செய்து பாருங்கள்.
உருளைக்கிழங்கு புலாவ்
Ingredients
- அரிசி – 2 கப் (160 மிகி எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் கப்)
- வெங்காயம் – 1 1/2 (நறுக்கியது)
- உருளைக்கிழங்கு - 5 (சிறியது, சிறிய துண்டுகளாக நறுக்கியது)
- இஞ்சி – 1.5 அங்குலம் (துருவியது)
- சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
- சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
- கரம் மசாலா- 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் -3
- எலுமிச்சை சாறு – 1 1/2 எலுமிச்சம்பழம் பிழிந்தது
- கொத்தமல்லி – ஒரு கையலவு
- கருவேப்பிலை - 2-3 கொத்து
Instructions
- சாதத்தை வடித்து தனியாக வைக்கவும்.
- வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி சீரகம் வெடிக்கவிடவும்.
- வெங்காயம், பச்சை மிளகாய் , இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்க்கவும்.
- நறுக்கிய உருளைக்கிழங்கு சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து மூடி வேகவிடவும்.
- உருளைக்கிழங்கு வெந்தபின்னர், வடித்த சாதத்தை கலந்து சீரகத்தூள் சேர்க்கவும்.
- உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.
குறிப்பு
- வடித்த சாதத்திற்கு பதிலாக அவல் சேர்த்து அவல் உப்புமா செய்யலாம். புதினா சட்னியுடன் காலை அவசரத்திற்கு தயாரிக்கலாம். இரவு டின்னருக்கும் பரிமாறலாம்.
- வறுத்த நிலக்கடலையையும் சேர்த்தால் மொறு மொறுப்பு கிடைக்கும்.