பாகற்காய் வறுவல்
பாகற்காய் சிலருக்கு மிகவும் பிடித்த காய் ஆனால் சிலருக்கு பிடிக்காத காயாக இருக்கும். பிடித்தவர்கள் அடிக்கடி சமைப்பார்கள். நான் இரண்டாவது வகையை சேர்ந்ததால் பாகற்காய் உண்பதை எப்போதும் விரும்பமாட்டேன். எனது மாமனாருக்கு சர்க்கரை நோய் இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்துகொள்ள விரும்புவார். பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபடுத்துகிறது. மற்ற பல நோய்களுக்கும் இதை உண்பது நல்லது. நீங்கள் பாகற்காயை விரும்புவராக இருந்தாலும் சரி, விரும்பாதவராக இருந்தாலும் இதை செய்து பாருங்கள். நன்றாக வறுப்பதால் கசப்பு தன்மை பெரிய அளவில் தெரியாது.
பாகற்காய் வறுவல் தயாரிப்பு முறை
பாகற்காய் வறுவல்
Ingredients
- பாகற்காய் – 2 (வட்டமான துண்டுகளாக நறுக்கியது)
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- சோள மாவு / கார்ன் பிளவர் – 1 தேக்கரண்டி (அல்லது கடலைமாவு அல்லது அரிசி மாவு)
- எண்ணெய் – 1/2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
Instructions
- பாகற்காயின் மேல் உப்பை தூவி கலந்துவிட்டு அரை மணிநேரம் வைக்கவும்.
- கையால் பிழிந்து அதில் உள்ள தண்ணீரை எடுத்தால் பாகற்காயின் கசப்பு தன்மை நன்றாக குறைந்துவிடும்.
- உங்களுக்கு கசப்பு தன்மை பற்றி பிரச்னை இல்லையெனில் இதை தவிர்த்துவிடலாம். பாகற்காயுடன் சோள மாவு (கார்ன் பிளவர்), மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். (உப்பு சேர்க்க வேண்டியதில்லை முதலில் கலந்துவைத்ததில் உள்ள உப்பு போதும்)
- முழுவதுமாக எண்ணெயில் பொரித்து எடுக்கலாம். அல்லது நான்ஸ்டிக் வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து வறுக்கலாம். மொறுமொறுப்பாக வறுக்க வேண்டும்.
பாகற்காய் வறுவல் பரிமாற பரிந்துரைப்பது
- மொறுமொறுப்பான பாகற்காயை சாதம், குழம்பு அல்லது ரசத்துடன் பரிமாறலாம்.