ராஜஸ்தான் கார மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ராஜஸ்தான் மாநிலத்தின் மிகவும் பிரசித்தமான சிற்றுண்டி வகைகளில் ஒன்றாகும். இது பொதுவாக வட இந்தியாவில் எல்லா இடங்களிலும் கிடைக்கும். தென்னிந்தியாவில் மிளகாய் பஜ்ஜி உள்ளே எதுவும் வைக்காமல் மாவில் தோய்த்து பொரித்தெடுப்பார்கள். இந்த முறையில் பெரிய மிளகாயில் உள்ளே உருளை கிழங்கு கலவை நிரப்பி கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுப்பதாகும். ஏற்கனவே இதை சுவைத்தவர்கள் இதை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். இது ஒரு சிற்றுண்டியாக இருந்தாலும் வயிறு நிரம்பிவிடும். இது சில நேரங்களில் பிரட் சாண்ட்விச் ஆகவும் பரிமாறப்படுகிறது.
கார மிளகாய் பஜ்ஜி தயாரிப்பு முறை
ராஜஸ்தான் கார மிளகாய் பஜ்ஜி
Ingredients
- பஜ்ஜி மிளகாய் – 5-6 (நீளமான பஜ்ஜி மிளகாய்)
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
மிளகாய் உள்ளே வைக்க
- உருளை கிழங்கு – 2
- உப்பு – 1/2 தேக்கரண்டி
- ஆம்சூர் பவுடர் – 1/ 4 தேக்கரண்டி (அல்லது 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு)
- வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி தழை – 1 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
- சீரகம் – 1/ 4 தேக்கரண்டி
மாவு தயாரிக்க
- கடலை பருப்பு – 1 கிண்ணம்
- சோள மாவு (கார்ன் ஃப்ளவர் அல்லது அரிசி மாவு) – 1 மேசைக்கரண்டி
- உப்பு – 1/ 2 தேக்கரண்டி
- வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- பேக்கிங் சோடா (அல்லது சமையல் சோடா) – ஒரு சிட்டிகை
- பெருங்காயம் – 2 சிட்டிகை
- தண்ணீர் – தேவையான அளவு 1/ 2கிண்ணம்
Instructions
- மிளகாயை கழுவி, நீள வாக்கில் கீறி வைக்கவும்.
- உருளை கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து வைக்கவும்.
- உள்ளே வைக்க குறிப்பிட்டுள்ளவற்றை கலந்து வைக்கவும்.
- மாவை கலக்கவும் – (கடலை மாவு, உப்பு, வர மிளகாய் தூள், பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும்).
- தண்ணீர் சிறிது சிறிதளவாக சேர்த்து கட்டியில்லாமல் கெட்டியாக கலக்கவும்.
- எண்ணெய் சூடாகும் நேரத்தில் உள்ளே வைக்க கலந்து வைத்ததை நிரப்பி கொள்ளலாம்.
- ஒரு மிளகாயை எடுத்து உருளை கிழங்கு கலவையை நிரப்பவும்.
- நிரப்பிய ஒவ்வொரு மிளகாயையும் மாவு கலவையில் முழுவதும் மாவு கலவை படுமாறு காம்பை பிடித்து தோய்த்து கொள்ளவும்.
- மிதமான தீயில் மெதுவாக போட்டு, பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
- பொன்னிறமான பஜ்ஜியை பேப்பர் டவளில் போட்டு அதிகப்படியான எண்ணெயை வடிக்கவும். சூடாக பரிமாறவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- சூடான மிளகாய் பஜ்ஜியை மாலை நேர சிற்றுண்டியாக தக்காளி கெட்சப், பச்சை சட்னி, புளி சட்னியுடன் பரிமாறலாம்.
- இரண்டு பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்து இடையில் வைத்து சாண்ட்விச் போன்றும் பரிமாறலாம்.