தயிர் கோழி (தயிர் சிக்கன்)
சிக்கன் தயிர் சேர்த்து சமைக்கும்பொழுது ஒரு வகை தனி சுவையுடன் இருக்கும். தயிரின் கிரீம் உள்ள தன்மையால் கிரேவி சுவையுடன் இருக்கும். தயிர், கருப்பு மிளகு தூள், கருவேப்பிலை சேர்வதால் சிக்கனில் தனி மணமும் சுவையும் கிடைக்கிறது.
எனது கணவர் திருமணத்திற்கு முன்னர் தனியாக இருக்கும்பொழுது சிக்கன் அடிக்கடி சமைப்பதுண்டு. எளிதாக செய்யக்கூடிய ஓரு வகை ஆனால் இறுதியில் சுவையுடன் இருக்கும். இந்த தயிர் கோழி அடிக்கடி சமையலில் இடம்பெரும் என்பார். எனது கணவரின் நண்பர் பல வருடங்கள் கடந்தபின்னர் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். இது உங்களுக்கு தயிர் கோழி செய்து பார்க்க தோன்ற வைக்கும். தயிர் சிக்கன் வெள்ளை சாதம், பிரியாணி, புலாவ் அல்லது ரொட்டி வகைகளுடன் பரிமாற ஏற்றது.
தயிர் கோழி செய்முறை
தயிர் கோழி (தயிர் சிக்கன்)
Ingredients
- கோழி இறைச்சி – 1 கிலோ
- தயிர் – 1 கிண்ணம் (கடைந்தது)
- வெங்காயம் – 1 பெரியது அல்லது 2 சிறியது (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய் – 1 அல்லது 2
- பொடித்த கரம் மசாலா – 1 பட்டை, 1 பிரியாணி இலை, 3 கிராம்பு
- சீரகம் – 1/ 2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/ 4 தேக்கரண்டி
- வர மிள்காய தூள் – 1 தேக்கரண்டி (அல்லது ருசிக்கேற்ப)
- மிளகு தூள் – 1 மேசைக்கரண்டி
- கரம் மசாலா பொடி – 1 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- கொத்தமல்லி தழை – 1/ 4 கட்டு (பொடியாக நறுக்கியது)
- கருவேப்பிலை - அலங்கரிக்க
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
Instructions
- கோழி இறைச்சியை தயிருடன் உப்பு மற்றும் மசாலா பொருட்களுடன் கலந்து வைக்கவும். ( வர மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகு தூள்)
- வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடித்த மசாலா பொடி, சீரகம் போடவும்.
- வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி , பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
- கலந்து வைத்த சிக்கனை சேர்த்து வேகவிடவும். தண்ணியாக வேண்டுமென்றால் தண்ணீர் சேர்க்கவும்.
- மூடிவைத்து 10-15 நிமிடங்கள் வேகவிடவும் இடையில் கிளறிவிடவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும். தயிர் சிக்கன் பரிமாற தயார்.
தயிர் கோழி தயாரிக்க விரிவான படிமுறைகள்
சிக்கனுடன் தயிர், உப்பு, வர மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி பொடித்த கரம் மசாலா, சீரகம் சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். குழம்பு (கிரேவி) அதிகமாக வேண்டுமென்றால் 2 தக்காளி அரைத்து சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். நான் தக்காளி சேர்க்கவில்லை.
கலந்து வைத்த சிக்கனை சேர்த்து அனைத்தையும் கொதிக்கவிடவும். மூடி வைத்து10-15 நிமிடங்கள் வேகவிடவும். இடையில் கிளறிவிடவும். ருசி சரிபார்த்து உப்பு தேவைப்பட்டால் சேர்க்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும். அடுப்பை அணைத்துவிடவும். சுவையான தயிர் சிக்கன் தயார்.
பரிமாற பரிந்துரைப்பது
- சூடான தயிர் கோழியை வெள்ளை சாதம், பிரியாணி, புலாவ், ரொட்டி வகைகளுடன் பரிமாறலாம்.