மோரு கூட்டான்
மோரு கூட்டான் எனப்படுவது வீட்டில் காய்கறிகள் இல்லாதபோதும் தயிர் அதிகமாக இருக்கும்போதும் உடனடியாக தயாரிக்க கூடிய எளிய ஒரு வகை குழம்பாகும்.
அமிழ்தினும் இனிய தமிழ் இலக்கியம் மற்றும் சமையல் குறிப்புகள்
மோரு கூட்டான் எனப்படுவது வீட்டில் காய்கறிகள் இல்லாதபோதும் தயிர் அதிகமாக இருக்கும்போதும் உடனடியாக தயாரிக்க கூடிய எளிய ஒரு வகை குழம்பாகும்.
இந்த காலிஃபிளவர் குழம்பு தயிர் கோபி என்றும் அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் இதை ரொட்டி மற்றும் சாதத்துடன் பரிமாறுவர். காலிஃபிளவர் தயிர் மற்றும் மசாலா சேர்த்து சுவையான விதத்தில் சமைக்கப்படுகிறது.
கொஜ்ஜூ என்பது புளி,தக்காளி, பொதுவாக கிடைக்கும் காய்கறிகளை கொண்டு மசாலா பொருட்கள் அரைத்து, தேங்காய் (அரைத்தது) சேர்த்து செய்யப்படுவதாகும். இங்கு கோடுக்கப்பட்டிருக்கும் குடமிளகாய் கொஜ்ஜூ வை சமைத்து உண்டு மகிழுங்கள்.
செட்டி நாடு வெள்ளை குருமா தென்னிந்திய உணவகங்களில் மிகவும் பிரசித்தமானது. இது பல விதமான சுவைகளில் தயாரிக்கப்படுகிறது. அதில் ஓரு முறையான சுரைக்காய் குருமா செய்முறையை பார்ப்போம்.
மோர் குழம்பு என்பது தாளித்த மோருடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யும் ஒரு குழம்பு வகையாகும். நான் மஞ்சள் தூளுக்கு பதிலாக பச்சை மஞ்சள் சேர்த்து அதனுடன் இஞ்சிக்கு பதிலாக மாங்காய் இஞ்சி சேர்த்து செய்துள்ளேன்.
காலிஃபளவர் குருமா குளிர் காலத்தில் அடிக்கடி செய்யப்படுவது ஆகும். சீசன் நேரமாக இருப்பதால் காலிஃபளவர் அதிகமாகவும் விலையும் குறைவாகவும் கிடைக்கும். இது நான் காலிஃபளவர் குருமா சமைக்கும் முறை.
கேரளா கடலை கறி அல்லது கடலை குழம்பு என்பது கருப்பு கடலை மற்றும் தேங்காய் சேர்த்து செய்யும் சுவையான குழம்பு ஆகும். இது பாரம்பரியமாக கேரளாவில் புட்டுடன் பரிமாறப்படும் குழம்பாகும்.
பாகற்காய் பிட்லை பிராமணர்களின் விருப்ப உணவில் ஒன்றாகும். பாகற்காய் துவர்ப்பு அதிகமாக கொண்டதால், இதுபோன்று பிட்லை செய்தால் துவர்ப்பு தன்மை குறைவாக தெரியும்.
பாகற்காய் தீயல் என்பது கேரளாவின் பாரம்பரிய உணவாகும். பாகற்காய் துண்டுகளுடன் புளி, வறுத்த அரைத்த தேங்காய் விழுது சேர்த்து செய்யும் ஒரு குழம்பாகும்.
பருப்பு ரசம் அல்லது தால் ரசம் என்பது தமிழ் நாட்டில் செய்யப்படும் ஒரு வகையான ரசமாகும். தமிழர்கள் இதற்கு துவரம் பருப்பை உபயோகிப்பார்கள்.
சென்னா மசாலா, வட இந்தியாவில் பிரபலமான உணவு வகையாகும். தென்னிந்தியாவில் சப்பாத்தி, பூரி வகைகளுடன் விரும்பி உண்ணப்படுகிறது.
பூண்டு வெங்காயம் குழம்பு பொதுவாக தமிழர்கள் வீடுகளில் அடிக்கடி செய்யும் மிகவும் பிரசித்தமான குழம்பு வகைகளில் ஒன்றாகும். இதை வெந்தயக்குழம்பு என்று கூறுவார்கள். இதற்கு சுட்ட அப்பளம் சேர்த்து சாதத்துடன் பரிமாறுவார்கள்.