எங்களைப் பற்றி

என் பெயர் டாலியா சாம்; தென்னிந்தியாவிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவள்; கணினி அறிவியலில் ஆராய்ச்சிப் பட்டம் (Ph D) பெற்றவர்; செம்மொழி தமிழின் தீஞ்சுவையைக் ‘கைமண்ணளவு’ கற்றறிந்தவள். புதிய சமையல் பரிசோதனைகள் என் சமீபத்தைய பேரார்வம். உங்களுக்கு எனது முதல் மற்றும் பிரபலமான வலைத்தளத்தைப் (simpleindianrecipes.com) பற்றி தெரிந்திருக்கலாம்.

தமிழ் அமிழ்தின் சிறு துளிகளை இளையதலைமுறைக்குத் தெரிவிக்கவும், simpleindianrecipes.com இன் தமிழ் பயனர்களின் கோரிக்கை காரணமாகவும், நான் இந்த தமிழ் வலைத்தளத்தை (தமிழ்அமிழ்து.com) ஆரம்பித்திருக்கிறேன். இந்த வலைத்தளம் எங்கள் குடும்ப அங்கத்தினர்களாலும், தமிழ் ஆர்வம் மிகுந்த நண்பர்களாலும் பராமரிக்கப்படும். சங்கத் தமிழ் மணமும் அறுசுவைச் சமையல் வாசனையும் கமழும் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழ் இலக்கியத்தின் ஆழங்கள், அகலங்கள், அவை பற்றிய எண்ணச்சிதறல்கள், சமையல், சமையல் எண்ணங்கள், எளிமையான குறிப்புகள், கருத்துகள் அல்லது வேறு எந்த ஆலோசனைகளையும் முடிந்த அளவுக்கு பகிர்ந்து கொள்ள உங்களையும் ஊக்குவிக்கிறேன். அது உங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்யவும், இந்த தமிழ் வலைத்தளம் வளரவும் உதவும். கருத்துரைப் பிரிவைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம். அல்லது contact-us வலைப்பக்கத்தில் இருந்து மின்னஞ்சல் அனுப்பலாம்.

உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

அன்புடன்,
டாலியா சாம்.