வீட்டில் இட்லி / தோசை மாவு தயாரிப்பது எப்படி?

வீட்டில் இட்லி / தோசை மாவு தயாரிப்பது எப்படி?

இட்லி எனப்படுவது ஒரு வகை சிற்றுண்டி. அதிகமாக இந்தியர்களால் உண்ணப்படும் உணவு வகைகளில் ஒன்று. பாரம்பரியமாக தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்டு வந்தாலும் தற்போது வட இந்தியாவிலும் தயாரிக்கப்படுகிறது. இட்லி மாவை அதிக அளவில் வீட்டில் தயாரித்து குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும். தேவைப்படும் போது உபயோகிக்கலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் பசி மற்றும் சோர்வாக இருக்கும்போது மிருதுவான இட்லி அல்லது மொறுமொறுப்பான தோசை தயாரிக்க மிகவும் சுலபமான ஒன்றாகும். நீங்கள் இந்த இட்லி மாவை கொண்டு பலவிதமான சிற்றுண்டிகளை தயாரிக்கலாம். அவற்றை கீழே குறிப்பிட்டுள்ளேன்.

நான் இங்கு அதிக அளவில் இட்லி/தோசை மாவு தயாரிக்கும் முறையை விவரித்துள்ளேன். நீங்கள் மாவை அரைத்து பெரிய பாக்ஸில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து கொண்டால 10 நாட்கள் வரை உபயோகிக்கலாம். இது காலையில் விரைவாக சிற்றுண்டி தயாரிக்க, இரவு உணவிற்கு மற்றும் மாலை நேரத்திற்கும் பெரிது உதவும்.

இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வீடியோ வழிமுறைகள்

சரியான பொருட்களை தேர்வு செய்வது எப்படி?

கிரைண்டர்/ மிக்ஸி/ பிளண்டர்

பாரம்பரியமாக இட்லி மாவை ஆட்டு கல்லில் கையால் அரைப்பார்கள். இதற்கு குறைந்தது 1-2 மணி நேரம் ஆகும். ஆனால் தற்போது எலக்ட்ரிக் வெட் கிரைண்டர் இந்த வேலையை செய்துவிடுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அரிசி, பருப்பை ஊற வைத்து கிரைண்டரில் போட்டு ஸ்விட்சை ஆன் செய்ய வேண்டியதுதான்.

அனேகமாக தென்னிந்தியர்கள் அனைவர் வீடுகளிலும் கிரைண்டர் இருக்கும். உலகின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களால் எல்லோராலும் கிரைண்டர் வாங்குவது சாத்தியமில்லாதது ஆகும். நீங்கள் இட்லி மாவை மிக்ஸி, கிரைண்டர் அல்லது புட் ப்ராஸஸர் ஏதாவது ஒன்றில் அரைத்து கொள்ளலாம். கிரைண்டரில் அரைத்து செய்வது போன்ற சுவையில் இல்லையென்றாலும் ஓரளவு நன்றாக இருக்கும். பிளண்டர் அல்லது புட் ப்ராஸசரில் அரைக்கும் போது சூடாவதால் மாவும் சூடாகும். இது மாவை அதிகமாக புளிக்க வைத்துவிடும். ஆனால் கிரைண்டரில் அரைக்கும் போது மாவில் காற்று புகுந்து லேசாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

அரிசி/உளுத்தம் பருப்பு

தென்னிந்தியாவில் இட்லி தயாரிக்க இட்லி அரிசியென்று தனியாக கிடைக்கும். நீங்கள் பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டையும் உபயோகித்து இட்லி மாவு தயாரிக்கலாம். நான் அமெரிக்காவில் உள்ளபோது நீளமான பச்சரிசி உபயோகித்து செய்வேன். நீங்கள் சிகப்பு அரிசி பாதியளவு சேர்த்தும் சத்தானதாக இட்லி தயாரிக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்னர் உளுத்தம் பருப்பு தோலுடன் இருக்கும். உளுந்தை ஊற வைத்து உள்ளங்கையில் தேய்த்து கழுவினால் தோல் தனியாக வரும். அது மிகவும் கடினமான வேலையாகும். ஆனால் தற்போது அனைவரும் அந்த முறையை மறந்தே விட்டார்கள். தற்போது எனது பாட்டியும் அந்த முறையை விட்டுவிட்டார்கள். இப்போது தோல் நீக்கிய உளுந்து பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கிறது. முழு உளுந்து, உடைத்த உளுந்து இரண்டும் கிடைக்கிறது. இதில் ஏதேனும் ஒன்றை உபயோகிக்கலாம். தரமான உளுந்தை உபயோகித்தால் மாவும் அதிகமாக கிடைக்கும், இட்லியும் சுவையாக இருக்கும். எனவே நல்ல தரமான அரிசி, உளுந்தை தேர்வு செய்து மாவு அரைக்க தயாராகுங்கள்.

இட்லி மாவு அரைத்து மிருதுவான இட்லி தயாரிப்பது எப்படி?

இட்லி மாவு தயாரிப்பது மிகவும் சுலபமானது. அரிசி, பருப்பை ஊற வைத்து அரைக்க வேண்டியது தான். ஆனால் புதிதாக செய்பவர்கள் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை விவரித்துள்ளேன், அதன்படி செய்தால் போதும்.

இட்லி /தோசை மாவு தயாரிக்க வழிமுறைகள்

Prep Time12 hours
Cook Time10 hours
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • உளுத்தம் பருப்பு – 1 கிண்ணம்
  • இட்லி அரிசி – 4 கிண்ணம் (சாதாரண அரிசி – பச்சரிசி அல்லது புழுங்கல் அரிச)ி
  • வெந்தயம் – 1 மேசைக்கரண்டி
  • உப்பு – 2 மேசைக்கரண்டி

Instructions

  • அரிசி, உளுந்தை தனித்தனியாக கழுவவும். நீங்கள் 3-4 முறை கழுவினால் தான் இட்லி வெள்ளையாக இருக்கும்.
    இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வழிமுறைகள்
  • கழுவிய பின்னர் தேவையான அளவு அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். நீங்கள் வெந்தயத்தை உளுத்தம் பருப்புடன் சேர்த்து ஊற வைக்கலாம். அல்லது தனியாக ஒரு கிண்ணத்திலும் ஊற வைக்கலாம்.
    இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வழிமுறைகள்
  • மூடி வைத்து 2 மணி நேரம் ஊற விடவும். இன்னும் சற்று அதிக நேரமும் ஊறவிடலாம். பாரம்பரியமாக ஆட்டுகல்லில் கையால் அரைக்கும் போது அதிக நேரம் ஊறவைக்க வேண்டும். தற்போது கிரைண்டரில் அரைக்க 2 மணி நேரம் ஊற வைத்தால் போதும்.
    இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வழிமுறைகள்
  • குறைந்தது 2 மணி நேரத்தில் நன்றாக ஊறி விடும். பருப்பு மிருதுவாகவும், பெரிதாகவும் இருக்கும். இப்போது அரைக்க தயாராக இருக்கும்.
    இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வழிமுறைகள்
  • கிரைண்டரை கழுவி நடுவில் உள்ள கல்லை பொருத்தவும். கிரைண்டரை ஓடவிட்டு ஊற வைத்து உளுத்தம் பருப்பு, வெந்தயம் இரண்டையும் சிறிது சிறிதாக சேர்க்கவும்.
    இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வழிமுறைகள்
  • ஊற வைத்த தண்ணீரை வைத்திருக்கவும். முறையாகமாவு அரைக்க தண்ணீரை தேவைப்படும் போது சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும். நீங்கள் 3-4 முறை 5-10 நிமிட இடை வெளியில் சேர்க்க வேண்டியது இருக்கும்.
    இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வழிமுறைகள்
  • உளுத்தம் பருப்பு லேசாகவும், மிருதுவாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். நல்ல தரமான உளுத்தம் பருப்பு அரைத்த பின்னர் 6-8 மடங்கு அதிகமாக மாவு கிடைக்கும். இது இட்லி மிருதுவாக இருக்க உதவும்.
  • 30 நிமிடங்களில் உளுந்து மாவு தயாராகிவிடும். கிரைண்டரை நிறுத்திவிட்டு மாவை பெரிய பாத்திரத்தில் எடுக்கவும்.
    இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வழிமுறைகள்
  • மறுபடியும் கிரைண்டரை ஓடவிடவும். கிரைண்டரை கழுவ வேண்டியதில்லை. தண்ணீரை வடித்துவிட்டு அரிசியை சிறிது சிறிதாக சேர்க்கவும். தண்ணீர குறைவாக சேர்க்கவும். உளுத்தம் பருப்பு அரைக்க சேர்த்த அளவை விட குறைவாக சேர்த்தால் போதும்.
    இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வழிமுறைகள்
  • அடுத்த 20-25 நிமிடங்களில் அரிசி மிருதுவாக ஆகும். ஆனால் இட்லி மிருதுவாக இருக்க மாவை இன்னும் சற்று நேரம் அரைக்க வேண்டும்.
    இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வழிமுறைகள்
  • இப்போது இரண்டு மாவையும் கலக்க வேண்டும். பாரம்பரிய முறையில் தயாரிப்பதில் உளுந்து மாவுடன் அரிசி மாவையும் ஒரே பாத்திரத்தில் எடுத்து உப்பு சேர்த்து கையால் நன்றாக கலந்து வைப்பார்கள். கையால் கரைப்பது மாவு புளிக்க உதவும் என்று கூறுவார்கள்.
  • எனது தாயார் வேறு ஓரு முறையில் செய்வார்கள். அந்த முறையை நான் கடைபிடிக்கிறேன். அரிசி மாவு மிருதுவான பின்னர், அரைத்த உளுந்து மாவை மீண்டும் கிரைண்டரில் போட்டு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் ஓடவிடவேண்டும். இது மாவு முழுவதும் நன்றாக கலக்க உதவும்.
    இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வழிமுறைகள்

இறுதியாக மாவை பெரிய பாத்திரத்தில் ஊற்றி புளிக்க விடவும்.

மாவை புளிக்க வைப்பது

  • மாவை பெரிய பாத்திரத்தில் வைக்க வேண்டும். ஏனெனில் புளித்த பின்னர் மாவு இரண்டு மடங்கு அதிகமாகும்.
இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வழிமுறைகள்
  • மூடி வைத்து சமையல் அறையில் வைக்கவும். புளிக்க 8-12 மணி நேரம் ஆகும். வெப்ப நிலை பொருத்து இது மாறும்.
இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வழிமுறைகள்
  • தென்னிந்தியாவில் வெயில் காலங்களில் 6 மணி நேரத்தில் புளித்துவிடும். ஆனால் மழை காலங்களில் அதிக நேரம் ஆகும்.
  • வெளி நாடுகளில் குளிர் அதிகமாக உள்ள இடங்களில் மாவை புளிக்க வைக்க நீங்கள் சற்று அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் மைக்ரோவேவ் அவனில் வைக்கலாம். ஆனால் ஸ்விட்ச் ஆன் செய்ய வேண்டாம். அல்லது கன்வெக்க்ஷன் அவனில் வைத்து லைட் மட்டும் ஆன் செய்யவும். இவ்வாறு செய்வதால் மிதமான சூடு கிடைத்து மாவு புளிக்க வசதியாகும். குளிர் பிரதேசங்களில் மாவில் உப்பு சேர்த்து வைக்க வேண்டாம். இது மாவு புளிப்பதில் தாமதத்தை உண்டாக்கும். நீங்கள் தயாரிக்கும் முன்னர் உப்பு சேர்த்து கொள்ளலாம். நான்அமெரிக்காவில் இருந்தபோது 2 மேசைக்கரண்டி வடித்த சாதத்தை சேர்த்து மாவு அரைப்பேன். இது மாவு புளிக்கவும், இட்லி மிருதுவாக இருக்கவும் உதவும்.
இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வழிமுறைகள்
  • இறுதியில் மாவு புளித்த பின்னர் பொங்கி இரண்டு மடங்காகிவிடும். நீங்கள் முகர்ந்து பார்த்தால் புளித்த வாசம் வரும். இப்போது நீங்கள் இட்லி தயாரிக்கலாம். இதில் குறிப்பிட்டுள்ள முறையில் நீங்கள் இட்லி தயாரிக்கலாம்.
இட்லி மாவு வீட்டில் தயாரிக்க வழிமுறைகள்

மாவை உபயோகிப்பது எப்படி?

  • நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இட்லி, தோசை தயாரிக்கலாம். இதே மாவில் கல் தோசை, ஊத்தப்பம், வெஜிடபிள் தோசை, மசாலா தோசை, மைசூர் மசாலா தோசை, கார குழிப்பணியாரம் அல்லது அரிசி டோக்ளா தயாரிக்கலாம். இவற்றை ஒரே நாளில் அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்தும் பயன்படுத்தலாம்.
  • நான் 2 கிண்ணம் இட்லி மாவுடன் 1/4 கிண்ணம் சிறு தானிய மாவுகளில் ராகி, ஓட்ஸ் இதில் ஏதேனும் ஒன்றை சேர்த்து சத்தான தோசை செய்வேன். ஆனால் இந்த மாவில் இட்லி சரியாக வராது.

இட்லி மாவு தயாரிக்க சரியான நேரம் எது?

மாவு தயாரிக்க குறிப்பிட்ட நேரம் எதுவும் உள்ளதா? இல்லை!! நீங்கள் உங்களுக்கு வசதியான நேரத்தில் அரைத்து கொள்ளலாம்.

நீங்கள் மதிய உணவிற்கு பின்னர் அரிசி, உளுந்தை ஊற வைக்கவும். மாலையில் நன்றாக ஊறி இருக்கும். அரைக்க தயாராக இருக்கும். அரைத்து கலந்து வைத்தால் காலையில் மாவு புளித்து சிற்றுண்டி தயாரிக்க சரியாக இருக்கும். எனது பாட்டி இவ்வாறு தயாரிப்பார்கள்.

நான் மற்றொரு முறையை கடைபிடிப்பேன். நான் அரிசி, பருப்பை கழுவி இரவு ஊற வைத்துவிடுவேன். காலையில் அரைக்க தயாராக இருக்கும். காலையில் முதல் வேலையாக கிரைண்டர் போட்டு விடுவேன். மற்ற சமையல் வேலைகள் செய்யும்போது மாவு அரைக்கும் வேலையும் முடிந்துவிடும். பின்னர் கலந்து புளிக்க வைத்து இரண்டு மடங்காக ஆன பின்னர் குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடுவேன். மதியம் அல்லது மாலைக்குள் புளித்துவிடும்.



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.