சேமியா உப்புமா

சேமியா உப்புமா

உப்புமா ஒரு மிகச்சிறந்த சிற்றுண்டி வகையில் ஒன்று, ஏனெனில் இதை மிக எளிதாக அதுவும் 15 நிமிடங்களில் தயாரித்துவிடலாம். பாரம்பரியமாக உப்புமா ரவையில் தயாரிக்கப்படும். ஆனால் தற்போது அதிகமான வகைகளில் தயாரிக்கப்படுகிறது. சேமியா உப்புமா, ராகி சேமியா உப்புமா, உடைத்த கோதுமைரவை உப்புமா, அரிசி உப்புமா என பல வகைகளில் தயாரிக்கலாம். சேமியா உப்புமா குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பார்கள் ஏனெனில் இது நூடுல்ஸ் போன்று இருப்பதால். இதை காலை சிற்றுண்டி, இரவு உணவு அல்லது மாலை நேர சிற்றுண்டி என எப்போது வேண்டுமானாலும் தயாரித்து உண்ணலாம்.

இன்று நான் தென்னிந்தியாவில் பொதுவாக தயாரிக்கப்படும் சேமியா உப்புமா தயாரிப்பு முறையை பகிர்ந்து கொள்கிறேன். இதில் வேறு வகைகளான எலுமிச்சை சேமியா, தேங்காய் சேமியா, காய்கறி சேமியா தயாரிப்பு முறைகளை பின்னர் பகிர்ந்துகொள்கிறேன்.

சேமியா உப்புமா தயாரிப்பு முறை

சேமியா உப்புமா

Course: Breakfast, Snack
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • சேமியா (வெர்மிசெல்லி பாஸ்தா) – 1.5 கிண்ணம்
  • தண்ணீர் – 1 3/4 கிண்ணம்
  • வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
  • உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

  • எண்ணெய் / நெய் – 2 தேக்கரண்டி
  • வர மிளகாய் – 2
  • கடுகு – 1/4 தேக்கரண்டி
  • கடலை பருப்பு – 1/4 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
  • முந்திரி பருப்பு – 1 மேசைக்கரண்டி
  • கருவேப்பிலை – 1 கொத்து

Instructions

  • சேமியாவை ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். நீங்கள் வறுத்த சேமியா கடைகளில் கிடைப்பதை வாங்கி கொண்டால் நேரமும் மிச்சமாகும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் அல்லது நெய் சூடாக்கி கடுகு வெடிக்கவிடவும். அடுத்து கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரி பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரைவிடவும்.
  • நறுக்கிய வெங்காயம் சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்.
  • மேலே குறிப்பிட்டுள்ள அளவு தண்ணீரை சேர்க்கவும். உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • தண்ணீர் கொதித்த பின்னர் வறுத்த சேமியாவை சேர்த்து நன்றாக கலந்து விடவும். அடுப்பை குறைத்து வைத்து மூடிவைத்து 5 நிமிடங்கள் தண்ணீர் வற்றும்வரை வைக்கவும்.
  • அடுப்பை அனைத்து ஒரு ஸ்பூன் அல்லது ஃபோர்க்கால் மெதுவாக கிளறிவிடவும். தேங்காய் சட்னி அல்லது ஏதேனும் ஒரு வகை சட்னி அல்லது ஊறுகாயுடன் பரிமாறவும்.

வேறுபாடாக பரிந்துரைப்பது

  • வெங்காயம் வதக்கிய பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து இதேமுறையில் சேமியா உப்புமா தயாரிக்கவும். இந்த தேங்காய் சேமியா உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.
  • மற்றொரு வகை புளிப்பு சுவையுடன் உள்ள பச்சை மாங்காய் சேமியா உப்புமா. துருவிய பச்சை மாங்காயை வெங்காயம் வதக்கிய பின்னர் சேர்த்து இதே முறையில் தயாரிக்கவும்.
  • இதில் மற்றொரு வகை எலுமிச்சை சேமியா. இதைதயாரிக்க சேமியா உப்புமா தயாரித்த பின்னர் அதன் மேல் 1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும். சேமியா தயாரிக்கும் போது ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் தண்ணீரில் சேர்த்தால் எடுப்பான கலரில் இருக்கும்.
  • சத்து நிறைந்த உப்புமா தயாரிக்க வேண்டுமானால் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து சேமியாவுடன் தயாரிக்கலாம். இது சேமியா பிரியாணி எனப்படும்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.