மெது வடை

மெது வடை

மெது வடை அல்லது உளுந்து வடை அல்லது உளுத்தம் பருப்பு வடை எனப்படும் வடை, இட்லி, தோசை ஆகிய மூன்று வகையான பதார்த்தங்கள் எங்கள் நாட்டின் பிரசித்தமான உணவாகும். இவை தென்னகத்தின் சமையல்களில் முக்கியமானவையாகும். மெது வடை டோனட்ஸ் போன்றதாகும். வெளியில் மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும்.

தமிழகத்தில் திருமண விழா, பண்டிகை நாட்கள், பூஜை நாட்கள் போன்றவற்றில் வடைக்கு முக்கியமான இடமுண்டு. மெது வடை மாலை நேர சிற்றுண்டியாக காஃபி அல்லது டீயுடன் பரிமாறலாம். தென்னிந்தியாவின் காலை உணவுகளான இட்லி, பொங்கல், தோசை இவற்றுடன் சாம்பார், சட்னியுடன் பரிமாறப்படுகிறது. இது தென்னிந்திய சமையலில் சுவையான ஒன்றாகும்.

மெது வடை செய்முறை

மெது வடை

Prep Time40 minutes
Cook Time20 minutes
Total Time1 hour
Course: Snack
Cuisine: Indian
Servings: 4 People
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • உடைத்த உளுந்து / உளுத்தம் பருப்பு – 1 கிண்ணம்
  • இஞ்சி – 1 அங்குலம் (துருவியது)
  • பச்சை மிளகாய் அல்லது வர மிளகாய் -3-4 (பொடியாக நறுக்கியது)
  • பொடித்த கருப்பு மிளகு – 1/ 2 தேக்கரண்டி
  • பெருங்காயம் – ஒரு சிட்டிகை
  • கருவேப்பிலை – 1- 2 கொத்து (பொடியாக நறுக்கியது)
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
  • உப்பு – ருசிக்கேற்ப
  • தண்ணீர் – அரைக்க சிறிதளவு (1/4 கிண்ணம்)

விருப்பபட்டால் சேர்க்க தேவையானவை

  • வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
  • கொத்தமல்லி – ஓரு கையளவு (நறுக்கியது)
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • ஏதேனும் ஒரு வகை காய் – 1/2 கிண்ணம்
  • தேங்காய் துண்டுகள்

Instructions

  • உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் அல்லது 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • தண்ணீரை வடித்துவிட்டு உளுந்தை கிரைண்டர் அல்லது மிக்ஸி அல்லது பிளண்டரில் சிறிதளவு (மிகவும் குறைவாக) தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
    மெது வடை செய்முறை
  • அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு, துருவிய இஞ்சி, பச்சை அல்லது வர மிளகாய், பொடித்த மிளகு, பெருங்காயம், நறுக்கிய கருவேப்பிலை சேர்க்கவும்.
    மெது வடை செய்முறை
  • விருப்பபட்டால் சேர்க்க கொடுத்துள்ளவற்றை சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
    மெது வடை செய்முறை
  • இந்த சமயத்தில் வடை பொரிக்க தேவையான எண்ணெயை சூடாக்கவும்.
  • வடை தட்டுவதற்கு கையை ஈரமாக்கி கொண்டு சிறிதளவு மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டவும். கையில் தட்டுவதற்கு பதில் பாலிதின் பேப்பர் பயன்படுத்தலாம்.
    மெது வடை செய்முறை
  • தட்டியபின்னர் விரலால் மாவின் நடுவில் ஒரு ஓட்டை போடவும்.
    மெது வடை செய்முறை
  • மெதுவாக தட்டிய வடையை சூடான எண்ணெயில் போடவும். நடுவில் ஓட்டை போடுவதால் வடை உள்ளும், புறமும் நன்றாக வெந்துவிடும். வடைகளை மிதமான தீயில் பொரிக்க வேண்டும்.
    மெது வடை செய்முறை
  • ஒருபுறம் சிவந்த பின்னர் அடுத்த பக்கம் திருப்பிவிடவும்.
  • இரண்டு பக்கமும் பொன்னிறமான பின்னர் வெளியில் எடுத்து எண்ணெய் வடியவிட்டு டிஷ்யூ பேப்பரில் போட்டால் அதிகப்படியான எண்ணெய் வடிந்துவிடும்.

குறிப்பு

  • வடை செய்வதின் ரகசியம் மாவு அரைப்பதில் தான் உள்ளது. தண்ணீர் மிகவும் குறைந்த அளவில் சேர்க்க வேண்டும். மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால் அரிசி மாவு சேர்த்து சரியான பதத்திற்கு கொண்டுவரலாம்.
  • மாவை அரைத்தவுடன் வடை தயாரிக்க வேண்டும். அதிக நேரம் வைத்திருந்தால் மாவு புளித்து நீர்த்துவிடும்.

பரிமாற பரிந்துரைப்பது

  • சூடான மெது வடையை தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறலாம்.
  • தென்னிந்திய காலை உணவுகளான இட்லி, பொங்கலுடன் மெது வடையை பரிமாறலாம்.
மெது வடை

வேறுபாடாக பரிந்துரைப்பது

  • நீங்கள் மாவுடன் வெவ்வேறு காய்கறிகளை சேர்த்து முட்டைகோஸ் வடை, கீரை வடை, கேரட் வடை, பிரக்கோலி வடை போன்றவற்றை செய்யலாம்.
  • மீதமான வடைகளை கொண்டு தயிர் வடை, சாம்பார் வடை, ரசம் வடை செய்யலாம்.
  • டயட்டில் இருப்பவர்கள் எண்ணெயில் பொரிக்காமல் குழிப்பணியாரக்கல்லில் ஊற்றலாம். இந்த உளுந்து குழிப்பணியாரம் பொரித்த வடை போலவே இருக்கும் ஆனால் எண்ணெய் குறைவாக இருக்கும்.
  • மைசூர் போண்டா: இதுவும் பிரபலமான ஒரு வகை சிற்றுண்டி கர்நாடகாவினரால் செய்யப்படுவதாகும். இது மிகவும் சுலபமாக செய்யக்கூடியதாகும். தேங்காய் துண்டுகளை வடை மாவுடன் கலந்து மாவை உருண்டையாக்கி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். மிக சுலபமாக செய்யகூடியது. வடை போல தட்டாமல் செய்வதால் சுலபமாக செய்துவிடலாம் ஆனால் வடை போல மொறுமொறுப்பாக இருக்கும்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.