கோபி மஞ்சூரியன்
குழந்தைகளின் மிக விருப்பமான உணவு பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கோபி மஞ்சூரியன். உணவகங்களுக்கு சென்றால் முதலில் ஆர்டர் செய்வதும் இதுவே. பெரியவர்களும், இளம் வயதினரும் அதிகம் விரும்புவதால் நாம் வீட்டிலேயே தயாரித்தால் உடல் நலத்திற்கும் நல்லது. உணவகங்களில் பெரும்பாலும் கலர் சேர்ப்பதால் முடிந்தவரை நாம் வீட்டில் தயாரிப்பது நல்லது.
குளிர் காலங்களில் அதிக அளவில் காலிஃப்ளவர் மலிவாக கிடைக்கும். விரைவாகவும், சுவையாகவும் இருப்பதால் அனைவரும் விரும்பி உண்ணும்படி இருக்கும். பொருட்களும் அதிகம் தேவையில்லை. மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. முடிந்தவரை கலர் சேர்த்த உணவு வகைகளை கடையில் வாங்கி தருவதை குறைத்து நாமே வீட்டில் எளிதாக செய்யும் முறையை கற்று கொண்டால் குழந்தைகள் விரும்பும்போது நாமே தயாரித்து கொடுக்கலாம். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
கோபி மஞ்சூரியன் தயாரிப்புமுறை
கோபி மஞ்சூரியன்
Ingredients
பகுதி – 1
- காலிஃப்ளவர் – 1 (பெரியது)
- மைதா மாவு – 2 மேசைக்கரண்டி
- கார்ன் பிளவர் – 2 கிண்ணம்
- மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
- மிளகு தூள் – 1 தேக்கரண்டி
- உப்பு – 1 தேக்கரண்டி
- தண்ணீர் – தேவையான அளவு
பகுதி – 2
- வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)
- பூண்டு – 3-4 பற்கள் (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி – 1 அங்குலதுண்டு (பொடியாக நறுக்கியது)
- வண்ண மிளகாய் – தேவைபட்டால்
- பச்சை மிளகாய் – 1 அல்லது 2
- தக்காளி சாஸ் – 4 மேசைக்கரண்டி
- சில்லி சாஸ் – 1 மேசைக்கரண்டி
- சோயா சாஸ் – 3 தேக்கரண்டி
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
Instructions
- காலிஃப்ளவரை துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
- பகுதி 1 ல் குறிப்பிட்டுள்ள பொருட்களை கலந்து கொள்ளவும்.
- காலிஃப்ளவர் துண்டுகளை எண்ணெயில் பொரித்து அதிகப்படியான எண்ணெயை பேப்பர் டவளில் வடிய விடவும்.
- ஓரு நான்ஸ்டிக் வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி-பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வண்ண மிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறவும்.
- இறுதியாக பொரித்துவைத்த காலிஃப்ளவர் துண்டுகளை சேர்க்கவும்.
- நன்றாக கலந்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் அல்லது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.
- பிரைட் ரைஸ், புலாவ் அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.
குறிப்பு
- காலிஃப்ளவரை எண்ணெயில் பொரிப்பதற்கு பதிலாக நான்ஸ்டிக் பானில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பொரிக்கலாம். ஆனால் எண்ணெயில் பொரித்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
- சைனீஸ் ஃப்ளேவர் கிடைக்க சிறிதளவு அஜினோமோட்டோ சேர்க்கவும்.
- பொரித்த காலிஃப்ளவரை பரிமாறும்போது கலந்து பரிமாறினால் மொறுமொறுப்பாக இருக்கும்.