வீட்டு முறையில் தயாரித்த வரமிளகாய் தூள்

வீட்டு முறையில் தயாரித்த வரமிளகாய் தூள்

சிகப்பு மிளகாய் தூள் இந்திய சமையல் அறையில் பிரதான பொடியாகும். 80% உணவு பதார்த்தங்களுக்கு மிளகாய் தூள் உபயோகிக்கபடுகிறது. மற்ற நாட்டு மக்களை விட இந்தியர்கள் காரத்தை அதிகம் விரும்புகிறோம் என்பது உலகம் அறிந்தது. மிளகாய் தூள் உணவில் காரத்தை சேர்க்கிறது. மற்ற மசாலா பொடிகளுடன் மிளகாய் தூள் சேர்க்கும் போது சமையலில் சுவை கிடைக்கிறது.

மூன்று வகையான மிளகாய் கடைகளில் கிடைக்கும். மூன்றுக்கும் வெவ்வேறான நிறமும், காரத்தன்மையும் உண்டு. இந்தியாவில் கிடைப்பது குண்டு மிளகாய், நீள மிளகாய், காஷ்மீர் சிகப்பு மிளகாய் ஆகியவை ஆகும். இதை தவிர மேற்கத்திய நாடுகளில் பாப்ரிக்கா, கேயின் மிளகு போன்றவை கிடைக்கும். பாப்ரிக்காவில் காரம் குறைவாக தான் இருக்கும். கேயின் மிளகு மிகவும் காரமாக இருக்கும். நம் இந்தியாவில் கிடைக்கும் மிளகாய் காரம் கேயின் மிளகில் கிடைக்கும்.

குறிப்பு

மூன்று வகையான மிளகாய் கடைகளில் கிடைக்கும் – குண்டு மிளகாய், நீள மிளகாய், காஷ்மீர் சிகப்பு மிளகாய். இந்த வகை மிளகாய்களில் ஏதாவது ஒரு வகையை தேர்ந்து எடுத்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு மிளகாய்க்கும் தனி காரம் உண்டு. காஷ்மீர் மிளகாய் குறைந்த அளவு காரமும் நல்ல சிகப்பு நிறமும் கொண்டது. இந்த வகை மிளகாய் நல்ல நிறமும் துரிதமாக செய்யும் சமையலில் உபயோகிக்கலாம். குண்டு மிளகாய் அதிக காரமும், நீள மிளகாய் இரண்டுக்கும் இடைப்பட்ட காரம் கொண்டது. நான் இரண்டு வகையான மிளகாய் தூள் செய்வது வழக்கம். குண்டுமிளகாய் காரம் அதிகம் கொண்டதும் மற்றொன்று காஷ்மீரி மிளகாய் நிறத்துக்கும். நான் இரண்டு வகைகளும் ஒவ்வொன்றும் ½ கிலோ வீதம் அரைத்தால் மூன்று மாதங்களுக்கு போதுமானதாக இருக்கும்.

மிளகாய் தூள் செய்முறை

மிளகாய் தூள் செய்ய வழிமுறைகள்

வீட்டு முறையில் தயாரித்த வரமிளகாய் தூள்

Prep Time2 hours
Total Time2 hours
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • காய வைத்த வர மிளகாய் -1/2 கிலோ

Instructions

  • தேவையான அளவு மிளகாய் எடுத்து கொள்ளவும். குண்டு மிளகாய் ½ கிலோ காஷ்மீரி மிளகாய் 1/2 கிலோ தனித்தனியாக எடுத்து கொள்ளவும்.
    மிளகாய் தூள் செய்முறை
  • ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் அல்லது காட்டன் துணியில் மிளகாயை பரப்பி 2 மணி நேரம் வெய்யிலில் காய வைக்கவும்.
    மிளகாய் தூள் செய்முறை
  • 2 மணி நேரத்துக்கு பிறகு மொறு மொறுப்பாகவும் உடையும் அளவும் காய்ந்து அரைக்க தயாராக இருக்கும்.
  • உங்களுக்கு முடிந்தால் மிளகாயின் காம்பை நீக்கலாம். நான் காம்புடன் அரைத்துக் கொள்வேன். நான் அருகில் உள்ள மில்லில் அரைத்துக் கொள்வேன். வெளி நாட்டில் இருப்பவர்கள் மிக்சியில் சிறிதளவு அரைத்துக் கொள்ளலாம். அரைக்கும் போது முகத்துக்கு மாஸ்க் அணிந்து கொண்டால் தும்மலை தவிர்க்கலாம்.
  • அரைத்த பின்னர் சூடாக இருக்கும். ஒரு பேப்பரில் பரப்பி ½ மணி நேரம் ஆற விடவும்.
    மிளகாய் தூள் செய்முறை
  • சூடு நன்றாக ஆறிய பின்னர் ஒரு காற்று புகாத பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும். ஒரு வருடம் வரை உபயோகிக்கலாம். சிறிய பெருங்காய துண்டு அல்லது உப்பை மிளகாய் தூளின் மேல் தூவி வைத்தால் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும்.

வீட்டு முறையில் தயாரித்த வரமிளகாய் தூள் செய்ய வீடியோ வழிமுறைகள்



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.