மசாலா தோசை

மசாலா தோசை

மசாலா தோசை உடுப்பியில் இருந்து வந்த ஒரு பாரம்பரிய உணவாகும். இந்த தோசையில் வேகவைத்த உருளைக் கிழங்கு மசாலாவை தோசையின் நடுவில் வைத்திருப்பார்கள். இந்த மசாலாவை காகிதம் போன்ற மெல்லிய தோசைக்கு நடுவில் வைத்து சுற்றி பின் சட்னி, சாம்பார் உடன் பரிமாறுவார்கள். மொறு மொறு வென்று இருக்கும் சுவையான மசாலா தோசை, சட்னியில் தொட்டு எடுத்து பிறகு சூடான சாம்பாரில் நனைத்து எடுத்து அதன் முழுமையான ருசியை அனுபவித்து சாப்பிட்டு மகிழலாம். அதன் சுவை மற்றும் மணங்களின் கலவை மிக அருமையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு மசாலா தோசை தென்னிந்திய வகைகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள உணவகங்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள இந்திய உணவகங்களில் கூட பரிமாறப்படுகிறது. தனிப்பட்ட முறையில், உணவகங்களுக்குச் செல்லும் போது, நான் சாப்பிடுவதற்கு விரும்பும் முதல் விஷயம் மசாலா தோசை. இப்போதெல்லாம் குழந்தைகள் வளர்ந்தவுடன், நான் அடிக்கடி வீட்டில் இதை செய்கிறேன். நான் பெரும்பாலும் வார இறுதிகளில் சில கூடுதல் நேரம் இருக்கும் போது மசாலா தோசை செய்வேன். காளான் தோசை, காலிஃபிளவர் தோசை, பட்டாணி மசாலா தோசை, பன்னீர் மசாலா தோசை, கோழி மசாலா தோசை, வெங்காயம் மசாலா தோசை (வறுத்த வெங்காயம்), சோயா மசாலா தோசை, மைசூர் மசாலா தோசை (கார சட்னி நடுவில் இருக்கும்), இவ்வாறு மசாலா தோசையில் பல வேறுபாடுகள் உள்ளன.

உருளைக்கிழங்கு மசாலா செய்வது மிகவும் அடிப்படையான மற்றும் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நான் இன்று உருளைக்கிழங்கு நிரப்புதல் மூலம் மசாலா தோசை செய்முறையை பகிர்ந்து கொள்ள போகிறேன். இந்த வார இறுதியில் இதை முயற்சி செய்து பாருங்கள்.

மசாலா தோசை செய்முறை

மசாலா தோசை

Prep Time10 minutes
Cook Time50 minutes
Total Time1 hour
Course: Breakfast
Cuisine: Indian
Servings: 4 people
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

உருளைக்கிழங்கு மசாலா செய்ய தேவையான பொருட்கள்

  • எண்ணெய் – தேவையான அளவு
  • உருளைக்கிழங்கு – 3 அல்லது 4
  • வெங்காயம் – 2 (பொடியாக வெட்டப்பட்டது)
  • இஞ்சி – 1/2 ” துண்டுகள் (பொடியாக வெட்டப்பட்டது)
  • பச்சை மிளகாய் – 4 (பொடியாக வெட்டப்பட்டது)
  • கறிவேப்பிலை இலைகள் – 1 சரம்
  • கொத்தமல்லி இலைகள் – கையளவு
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • சீரகம் – 1/2 தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
  • கடலைப் பருப்பு – 1/2 தேக்கரண்டி
  • பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • பச்சை பட்டாணி, கேரட் – 1/4 கப் (விரும்பினால்)

தோசை செய்ய தேவையான பொருட்கள்

  • தோசை மாவு- தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

Instructions

உருளைக்கிழங்கு மசாலா செய்முறை

  • உருளைக்கிழங்கை குக்கரில் தனியாக வேக வைத்து மசிக்கவும்.
  • வாணலில் எண்ணெய் காய்ந்த பின், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளிக்கவும்.
  • விரும்பினால் சில முந்திரிபருப்புகளை சேர்க்கலாம்.
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் வெங்காயம் சேர்க்கவும்.
  • வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்
  • மஞ்சள் தூள் சிறிது சேர்க்கவும். ½ கப் தண்ணீர் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்க்கவும். பின்னர் கொதிக்க விடவும்.
  • வேக வைத்த உருளைக்கிழங்கை மசிக்கவும் (மற்றும் பச்சை பட்டாணி அல்லது வெட்டப்பட்ட கேரட் விரும்பினால்) சேர்க்கவும்.
  • அனைத்து ஈரப்பதமும் போகும் வரை சுமார் 5 நிமிடங்கள் சமைக்கவும்.
  • நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.

தோசை செய்முறை

  • தோசை கல் சூடான பின் ஒரு கரண்டி தோசை மாவு எடுத்து தோசை கல் நடுவில் ஊற்றவும். பின்னர் மாவை வட்ட வடிவில் தேய்க்கவும்.
  • தோசை மேல் எண்ணெய்/ நெய்/ வெண்ணெய் சில துளிகள் ஊற்றவும்.
  • கீழ் பக்கம் வெந்தவுடன் உருளைக்கிழங்கு மசாலாவை நடுவில் வைக்கவும்.
  • உருளைக்கிழங்கு மசாலாவை, தோசை வைத்து மூடவும் (படத்தில் உள்ளது போல).
  • சூடான சாம்பார் உடன் பரிமாறவும்.

மசாலா தோசை தேவையான பொருட்கள்

விரிவான படிமுறைகள்

வாணலில் எண்ணெய் காய்ந்த பின், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

மசாலா தோசை செய்முறை

கடுகு வெடித்த பின்னர் உளுத்தம் பருப்பு , கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும். சில முந்திரி துண்டுகளை சேர்த்து வதக்கவும் (விரும்பினால்).

மசாலா தோசை செய்முறை

பின்னர் பெருங்காயம், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், மிக பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.

மசாலா தோசை செய்முறை

மஞ்சள் தூள் சேர்க்கவும் அரை கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

மசாலா தோசை செய்முறை

தண்ணீர் சுண்டிய பின்னர் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

மசாலா தோசை செய்முறை

இப்போது உருளைக்கிழங்கு மசாலா தயார்.

மசாலா தோசை செய்முறை

தற்போது தோசையை தயார் செய்யும் முறை பார்க்கலாம். முதலில் சாதாரண தோசை செய்வது போல செய்யவும்.

மசாலா தோசை செய்முறை

தோசை மேல் எண்ணெய்/ நெய்/ வெண்ணெய் சில துளிகள் ஊற்றவும். தோசை வெந்த பின், தோசையில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும். உடனே உருளைக்கிழங்கு மசாலாவை ஒரு கரண்டி அளவு தோசை நடுவில் வைக்கவும்.

மசாலா தோசை செய்முறை

தோசையை ஒரு பக்கமாக மூடவும். (படத்தை பார்க்கவும்)

மசாலா தோசை செய்முறை

பின்னர் அடுத்த பக்கத்தை மூடவும்

மசாலா தோசை செய்முறை

ஒரு நிமிடம் வைத்து பின் தோசை கரண்டியால் தோசையை எடுக்கவும்.

பரிமாறும் விதம்

  • சூடான தோசையை சட்னி மற்றும் சம்பார் வைத்து பரிமாறவும்.

மசாலா தோசை



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.