நான்கு அரிசி அடை

நான்கு அரிசி அடை

பச்சரிசி மாவு அடை என்பது அனைவரும் அறிந்த ஒரு பாரம்பரிய உணவு ஆகும். இதை போல் ரொட்டி என்று தமிழகத்திலும் இலங்கையிலும் கூறுவார்கள். சிறு வயதில் எனது பாட்டி வீட்டில் அரிசி அடை உண்ட நினைவுகள் இன்னும் உள்ளது. அவர்கள் அதில் காரம், இனிப்பு என வித்தியாசமான சுவையில் செய்து தருவார்கள். நானும் எனது உறவினர்களும் விடுமுறைக்கு செல்லும்போது சுவைத்து மகிழ்வோம். பெரும்பாலும் காலை சிற்றுண்டிக்கு அல்லது மாலை விளையாட்டு நேரத்திற்கு பின்னர் இதை உண்பதால் அந்நாள் முழுவதும் விளையாடிய களைப்பு நீங்கி வயிறு நிறைந்துவிடும்.

நான் இன்று இந்த அடையை நாங்கு விதமான அரிசி மாவு – பச்சரிசி, சிவப்பு அரிசி, கறுப்பு அரிசி மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசி சேர்த்து அரைத்த மாவில் தயாரிப்பதை விவரிக்க போகிறேன். இது கூடுதல் சத்து நிறைந்ததாகும். நீங்கள் இந்த அரிசி வகைகளை பல்பொருள் அங்காடிகளில் வாங்கலாம். இதை நீங்கள் தேங்காய் துவையல் அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறலாம்.

நான்கு அரிசி அடை செய்ய வீடியோ வழிமுறைகள்

செய்முறை

நான்கு அரிசி அடை

Prep Time15 minutes
Cook Time30 minutes
Course: Breakfast
Cuisine: Indian
Servings: 4
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • பச்சரிசி – 1 கிண்ணம்
  • கலந்த அரிசி மாவு – 1 கிண்ணம் (நான்கு வகை அரிசி சேர்ந்தது – செய்முறை கீழே கொடுத்துள்ளேன்.)
  • வெங்காயம் – 2-3 (பொடியாக நறுக்கியது)
  • துருவிய தேங்காய் – 1/2 கிண்ணம்
  • இஞ்சி – 1/ 2 அங்குல துண்டு (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
  • கருவேப்பிலை – 2 கொத்து (பொடியாக நறுக்கியது)
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் / நெய் – அடை தயாரிக்க தேவையான அளவு
  • மிதமான சூடுசெய்த தண்ணீர் – 1.5 கிண்ணம் (மாவு தயாரிக்க)

Instructions

  • ஒரு வாணலியில் நெய் சூடாக்கி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைக்கவும். இது உங்கள் விருப்பம் வதக்காமலும் இவற்றை சேர்த்து கொள்ளலாம்.
  • ஒரு பாத்திரத்தில் நான்கு வகை அரிசி மாவு, பச்சரிசி மாவு, வதக்கிய பொருட்கள், உப்பு, கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
  • சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவைவிட மிருதுவாக இருக்க வேண்டும்.
  • பிசைந்த மாவை 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைக்கவும். எலுமிச்சை அளவு மாவை எடுத்து கொள்ளவும்.
  • ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி மாவை அதில் வைத்து கையால் 4-6 விட்டம் வரும் அளவு தட்டவும். பழக்கம் இருந்தால் நேரடியாக தோசை கல்லில் தட்டலாம்.
  • மெதுவாக தட்டிய அடையை கல்லில் போடவும்.
  • அடையை சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும். நடுவில் ஒரு துளை செய்து நடுவிலும் எண்ணெய் ஊற்றலாம். இது அடைக்கு மேலும் மொறுமொறுப்பை கொடுக்கும்.
  • மிதமான தீயில் வைத்து இருபக்கமும் வேக விடவும். மூடி வைத்து செய்தால் விரைவாக வேகும். சூடாக பரிமாறவும்.

நான்கு வகை அரிசி மாவு தயாரிக்கும் முறை

ஒவ்வொரு வகை அரிசியிலும் 1/2 கிண்ணம் – பச்சரிசி, சிகப்பரிசி, கறுப்பரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி எடுத்து கொள்ளவும். நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து விட்டு சுத்தமான துணியில் காயவிடவும். நன்றாக காய்ந்த பின்னர் அரைத்து, சலித்து, வறுத்து ஆற வைக்கவும். இப்போது நான்கு வகை அரிசி மாவு தயார். காற்றுபுகாத பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும். இது 2-3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

நான்கு அரிசி அடை தயாரிக்க விரிவான படிமுறைகள்

ஒரு வாணலியில் நெய் சூடாக்கி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி அடுப்பை அணைக்கவும்.

நான்கு அரிசி அடை

ஒரு பாத்திரத்தில் நான்கு வகை அரிசி மாவு, பச்சரிசி மாவு வதக்கிய பொருட்கள், உப்பு, கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

நான்கு அரிசி அடை

அனைத்தையும் நன்றாக கலக்கவும்.

நான்கு அரிசி அடை

மிதமான சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

நான்கு அரிசி அடை

ஒரு எலுமிச்சை அளவு மாவு எடுத்து வாழை இலை அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி 4-6 அங்குல விட்டத்திற்கு கையால் தட்டவும்.

நான்கு அரிசி அடை

தோசை கல்லை மிதமான தீயில் வைத்து மெதுவாக தட்டிய அடையை கல்லில் போடவும். அடையை சுற்றி எண்ணெய் ஊற்றவும். நடுவில் துளை உண்டாக்கி அதிலும் 2-3 சொட்டு எண்ணெய் ஊற்றலாம். இது அடை மேலும் மொறுமொறுப்பாக இருக்க உதவும்.

நான்கு அரிசி அடை

மிதமான தீயில் வைத்து இரு பக்கமும் நன்றாக வேகவிடவும். பிரவுன் புள்ளிகள் வந்து சிவக்கும் வரைவிடவும்.

நான்கு அரிசி அடை

குறிப்பு

கூடுதல் சத்து சேர பொடியாக நறுக்கிய முருங்கை இலைகள் அல்லது கீரை, முட்டைகோஸ், வெங்காயத்தாள், குடமிளகாய் அல்லது துருவிய கேரட் சேர்க்கலாம்.

அரிசி அடை பரிமாற பரிந்துரைப்பது

  • மிகுந்த சுவையுடன் இருப்பதால் தனியாக பரிமாறலாம்.
  • கார சட்னி, தேங்காய் துவையல், தக்காளி சட்னி, புதினா சட்னி அல்லது ஏதேனும் ஊறுகாயுடனும் பரிமாறலாம்.
நான்கு அரிசி அடை


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.