இட்லி

இட்லி

இட்லி தமிழகத்திலும், இலங்கையிலும் பிரதான உணவாகும். தென்னிந்தியாவில் அனைவருக்கும் மிகவும் ஏற்ற உணவாகும். தென்னகத்தின் உணவு வகைகளில் மிகவும் பிரசித்தமான ஒன்றாகும். பெரும்பாலும் இந்தியாவில் அனைவராலும் விரும்பபடுகிறது.

இட்லி இரண்டு முறைகளில் தயாரிக்கப்படுகிறது. புழுங்கலரிசியில் தமிழ் நாடு, கேரளாவிலும் தயாரிக்கப்படுகிறது. உடைத்த அரிசியில் ஆந்திரபிரதேசம் மற்றும் கர்நாடகாவில் தயாரிக்கப்படுகிறது. நான் இங்கு புழுங்கலரிசியில் தயாரிக்கும் முறையை பகிர்கிறேன்.

மிருதுவான உணவான இட்லி தயாரிக்க அரிசி மற்றும் கருப்பு உளுந்து சேர்த்து அரைத்து, மாவை புளிக்கவைத்து இதற்கென உள்ள பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைப்பதாகும். இதை திருமணவிழாக்களிலும், மற்ற விஷேஷங்களிலும் சாம்பார், மெது வடை, சட்னி அல்லது இட்லி மிளகாய் பொடியுடன் பரிமாறப்படுகிறது. இட்லி அசைவ குழம்பு வகைகளுடன் உண்டாலும் சுவையாக இருக்கும். சிக்கன் குழம்பு, முட்டை குழம்பு, வெஜிடபிள் குருமாவுடன் உண்ணலாம். மிருதுவாக இருப்பதால் 6 மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆவியில் வேகவைப்பதால் சத்துள்ளதாகவும் எளிதில் ஜீரணமாகவும் உதவுகிறது. அதனால் பொதுவாக உடல் நலமில்லாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.

பொதுவாக இட்லி அதெற்கென உள்ள தட்டில் மாவை ஊற்றி இட்லி குக்கர் அல்லது பிரஷர் குக்கரில் வைத்து ஆவியில் வேகவைக்கப்படும். தற்போது இட்லி தட்டுகள் பல அளவுகளிலும், பல வடிவங்களிலும் கிடைக்கின்றன். எலக்ட்ரிக் இட்லி குக்கர், மைக்ரோவேவ் இட்லி ஸ்டாண்ட், நான்ஸ்டிக் ஸ்டவ் டாப் இட்லி ஸ்டாண்ட், மினி இட்லி மற்றும் பல. நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்து வாங்கிகொள்ளலாம். உங்களிடம் இட்லி குக்கர் இல்லாவிட்டால் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் டம்ளரை உபயோகிக்கலாம்.

மிருதுவான இட்லி தயாரிக்க வீடியோ வழிமுறைகள்

மிருதுவான இட்லி தயாரிக்கும் முறை

இட்லி

Prep Time1 hour 30 minutes
Cook Time10 minutes
Total Time1 hour 40 minutes
Course: Breakfast
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • இட்லி அரிசி – 1 ¾ கிண்ணம்
  • கருப்பு உளுந்து -1/2கிண்ணம்
  • வெந்தயம் – 1 தேக்கரண்டி
  • உப்பு – 1 மேசைக்கரண்டி

Instructions

  • அரிசியை கழுவி ஒரு பாத்திரத்தில் ஊற வைக்கவும். கருப்பு உளுந்தை கழுவி வெந்தயம் சேர்த்து தனியாக ஊறவைக்கவும். இரண்டையும் 5-6 மணிநேரம் ஊறவைக்கவும். 
  • தண்ணீரை வடிகட்டி உளுந்தை நைசாக கிரைண்டர் அல்லது மிக்ஸியில் அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிகொள்ளவும்.
  • அடுத்து அரிசியை நைசாக அரைத்துகொள்ளவும். அரைத்த மாவை உளுந்து மாவுடன் சேர்த்து எடுத்துகொள்ளவும்.
  • உப்பு சேர்த்து மாவை நன்றாக கலந்து வைக்கவும்.
  • மாவை 7-12 மணிநேரம் இரண்டு மடங்காகும்வரை புளிக்கவைக்கவும்.
  • இட்லி தயாரிக்க 1 கிண்ணம் தண்ணீரை இட்லிகுக்கர் அல்லது பிரஷர் குக்கரில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
  • இட்லி தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி மாவை ஊற்றவும். குழியில் புளித்தமாவை முக்கால் பாகம் ஊற்றவும்.
  • தட்டை இட்லி குக்கரில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.

மிருதுவான இட்லி தயாரிக்க விரிவான படிமுறைகள்

அரிசி கருப்பு உளுந்தை கழுவி தனிதனியாக ஊறவைக்கவும். 6 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். வெந்தயத்தை உளுந்துடன் ஊறவிடவும்.

இட்லி செய்முறை

உளுந்தில் உள்ள தண்ணீரை வடித்துவிட்டு நைசாக அரைக்கவும். மிக்ஸி அல்லது கிரைண்டரை பயன்படுத்தி அரைக்கவும். சிறிதளவு மாவை கையில் எடுத்து பார்த்தால் நைஸாக இருப்பதை தெரிந்துகொள்ளலாம்.

இட்லி செய்முறை

அடுத்து அரிசியை நைசாக அரைக்கவும். அரிசி சற்று கொரகொரப்பாக இருந்தால் போதுமானதாகும். உளுந்து மாவுடன் உப்பு சேர்த்து அரிசிமாவையும் கலந்து கொள்ளவும்.
அரைத்தமாவை குறைந்தது 7 மணிநேரம் மாவு இரண்டு மடங்காகும் வரை புளிக்கவிடவும். 7-12 மணிநேரம் வரைபுளிக்க வேண்டும்.

இட்லி செய்முறை இட்லி செய்முறை

இட்லி தாயாரிக்க இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றவேண்டும். பாரம்பரியமாக இட்லி தயாரிக்க வெள்ளை துணியை நனைத்து பிழிந்துவிட்டு இட்லி தட்டின் மேல் விரித்து மாவை ஊற்றி செய்வார்கள். நான் சிறிதளவு நல்லெண்ணெய் தடவுவேன். நீங்கள் நான்ஸ்டிக் இட்லி தட்டை உபயோகிப்பதாக இருந்தால் எண்ணெய் தடவ வேண்டியதில்லை. குழியில் முழுவதும் மாவை ஊற்றாமல் சற்று குறைவாக ஊற்ற வேண்டும். வெந்துவரும்போது சரியாக இருக்கும். மினி இட்லி தட்டு இருந்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கு ஸ்பூனால் மாவை ஊற்றினால் பொதுமானதாகும்.

 

இட்லி செய்முறை இட்லி செய்முறை

ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிடவும். பெரிதாகி மிருதுவாகும் வரை வேகவிடவும். நீங்கள் இட்லியை ஒரு கத்தி அல்லது பல்குத்தும் குச்சியால் உள்ளே விட்டு எடுத்தால் அதில் மாவு எதுவும் ஒட்டாமல் இருந்தால் இட்லி தயார். மாவு சிறிதளவு ஒட்டினால் மேலும் சில நிமிடங்கள் வேகவிடவும்.

இட்லி செய்முறை இட்லி செய்முறை

அடுப்பை அணைத்து 5 நிமிடங்கள் விடவும். பின்னர் ஒரு ஸ்பூனை தண்ணீரில் நனைத்து இட்லியை இட்லிதட்டிலிருந்து எடுக்கவும். ஹாட்பாக்சில் எடுத்துவைத்து சாப்பிடும்பொழுது சூடாக பரிமாறவும்.

இட்லி செய்முறை இட்லி செய்முறை

இட்லி

வேறுவிதமாக பரிந்துரைப்பது ( இட்லி மேக்கர் இல்லாமல் இட்லி தயாரிப்பது)

  • இட்லி தட்டுக்கு பதிலாக டம்ளர் உப்யோகித்து டம்ளர் இட்லி அல்லது கிளாஸ் இட்லி தயாரிக்கலாம். இதை நான் தனியாக பதிவிடுகிறேன். இதுவும் இட்லி போன்ற சுவையில் இருக்கும் ஆனால் வடிவத்தில் மட்டுமே டம்ளர் போல இருக்கும்.
  • தற்போது மைக்ரோவேவ் இட்லி தயாரிக்க ஸ்டீமர் உள்ளது. அதில் 2 தட்டுகள் உள்ளன . ஒரு தட்டில் 4 குழிகள் உண்டு. இதிலும் மைக்ரோ இட்லி தயாரிக்க தட்டுகள் கிடைக்கின்றன. மைக்ரோ கிண்ணத்தில் ¼ கிண்ணம் தண்ணீர் ஊற்றவும். தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றவும். மூடியால் மூடி மைக்ரோவேவ் ஹையில் 2-4 நிமிடங்கள் வைக்கவும். எனது மைக்ரோவேவ் 900வாட் அதில் 4 நிமிடத்தில் 8 இட்லியும், 2 நிமிடத்தில் 4 இட்லியும் தயாரிக்கலாம். நீங்கள் உங்கள் மைக்ரோவேவ் அவனில் வைத்து பார்த்து நேரத்தை சரிபார்த்துகொள்ளவும். கத்தியால் குத்தி பார்த்து வெந்துள்ளதா என்று பார்க்கவும். மாவு ஒட்டாமல் இருந்தால் வெந்தது போதும். மாவு சிறிது ஒட்டினால் மேலும் சில நிமிடங்கள் வேகவிடவும்.

பரிமாற பரிந்துரைப்பது

  • இட்லி சூடான சாம்பார், தேங்காய் சட்னி மற்றும் வடையுடன் பரிமாறலாம்.
  • இட்லி வேறு எதனுடனும் உண்ணலாம். சிக்கன் குழம்பு, வடகறி, தக்காளி குழம்பு அல்லது வேறு எந்த வகையான குழம்புடனும் பரிமாறலாம்.
  • இதை வேறு வகை சட்னியுடனும் பரிமாறலாம். எனக்கு விருப்பமானது கேரட் சட்னி. நீங்கள் உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு சட்னியுடன் பரிமாருங்கள்.
  • இதில் பாரம்பரியமாக இட்லியுடன் பரிமாறுவது இட்லிபொடியாகும். இட்லிபொடியை நெய் அல்லது நல்லெண்ணெயயுடன் மிருதுவான இட்லியை சுவைப்பது ஆனந்தமே.
  • மீதமான இட்லியை கொண்டு சாம்பார் இட்லி, தயிர் இட்லி, பொரித்த இட்லி, மசாலா இட்லி, சில்லி இட்லி, இட்லி உப்புமா போன்றவற்றை தயாரிக்கலாம்.

இட்லி



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.