பச்சை மிளகாய் அல்லது வர மிளகாய் -3-4(பொடியாக நறுக்கியது)
பொடித்த கருப்பு மிளகு – 1/ 2 தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கருவேப்பிலை – 1- 2 கொத்து(பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு - ருசிக்கேற்ப
தண்ணீர் – அரைக்க சிறிதளவு(1/4 கிண்ணம்)
விருப்பபட்டால் சேர்க்க தேவையானவை
வெங்காயம் – 1/2(நறுக்கியது)
கொத்தமல்லி – ஓரு கையளவு(நறுக்கியது)
சீரகம் – 1/2 தேக்கரண்டி
ஏதேனும் ஒரு வகை காய் – 1/2 கிண்ணம்
தேங்காய் துண்டுகள்
Instructions
உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் அல்லது 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
தண்ணீரை வடித்துவிட்டு உளுந்தை கிரைண்டர் அல்லது மிக்ஸி அல்லது பிளண்டரில் சிறிதளவு (மிகவும் குறைவாக) தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த மாவை ஒரு கிண்ணத்தில் மாற்றி தேவையான அளவு உப்பு, துருவிய இஞ்சி, பச்சை அல்லது வர மிளகாய், பொடித்த மிளகு, பெருங்காயம், நறுக்கிய கருவேப்பிலை சேர்க்கவும்.
விருப்பபட்டால் சேர்க்க கொடுத்துள்ளவற்றை சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த சமயத்தில் வடை பொரிக்க தேவையான எண்ணெயை சூடாக்கவும்.
வடை தட்டுவதற்கு கையை ஈரமாக்கி கொண்டு சிறிதளவு மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டவும். கையில் தட்டுவதற்கு பதில் பாலிதின் பேப்பர் பயன்படுத்தலாம்.
தட்டியபின்னர் விரலால் மாவின் நடுவில் ஒரு ஓட்டை போடவும்.
மெதுவாக தட்டிய வடையை சூடான எண்ணெயில் போடவும். நடுவில் ஓட்டை போடுவதால் வடை உள்ளும், புறமும் நன்றாக வெந்துவிடும். வடைகளை மிதமான தீயில் பொரிக்க வேண்டும்.
ஒருபுறம் சிவந்த பின்னர் அடுத்த பக்கம் திருப்பிவிடவும்.
இரண்டு பக்கமும் பொன்னிறமான பின்னர் வெளியில் எடுத்து எண்ணெய் வடியவிட்டு டிஷ்யூ பேப்பரில் போட்டால் அதிகப்படியான எண்ணெய் வடிந்துவிடும்.