பிரக்கோலி மஞ்சூரியன்

பிரக்கோலி மஞ்சூரியன்

பிரக்கோலி மஞ்சூரியன், காலிஃப்ளவர் மஞ்சூரியன் போன்று ருசியானது, சத்தானது. அதேபோன்ற சுவையில் இருப்பதால் அனைவரும் விரும்பி உண்கின்றனர். இது தற்போது இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. சீசன் சமயங்களில் காலிஃப்ளவர் விலை மலிவாக கிடைக்கும். ஆனால் பிரக்கோலி அதிக அளவில் கிடைப்பதில்லை. பழமுதிர் நிலையங்கலில் மட்டுமே கிடைக்கிறது. தற்போது காய்கறி சந்தைகளிலும் அதிகம் கிடைக்கிறது. மக்களும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். ருசியும் சற்று வித்தியாசமாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். செய்முறையும் எளிதானதாகும். ஒரு புது வகையான ருசியில் செய்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். நீங்களும் செய்து பாருங்கள்.

பிரக்கோலி மஞ்சூரியன் செய்முறை

பிரக்கோலி மஞ்சூரியன்

Course: Side Dish
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

பகுதி - 1

  • பிரக்கோலி – 1 பூ (துண்டுகள்)
  • மைதா மாவு – 2 மேசைக்கரண்டி
  • சோள மாவு – 1.5 கிண்ணம் (அல்லது தேவையான அளவு)
  • வர மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி
  • மிளகு தூள் -1 தேக்கரண்டி
  • உப்பு -1 தேக்கரண்டி
  • தண்ணீர் – 1.5 கிண்ணம் (கெட்டியான மாவு கரைக்க தேவையான அளவு)

பகுதி - 2

  • பூண்டு - 3-4 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி - 1 அங்குலம் (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி சாஸ் – 3 மேசைக்கரண்டி
  • சில்லி சாஸ் - 1-2 மேசைக்கரண்டி
  • சோயா சாஸ் - 3 மேசைக்கரண்டி
  • அஜினோமோட்டோ – 1 தேக்கரண்டி
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

Instructions

  • பகுதி 1ல் குறிப்பிட்டுள்ள பொருட்களில் பிரக்கோலியை தவிர அனைத்தையும் பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்துகொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். இது மாவில் கட்டியில்லாமல் தடுக்கும்.
  • பிரக்கோலி துண்டுகளை மாவுடன் நன்றாக கலந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதிகப்படியான் எண்ணெயை பேப்பர் டவலில் ஒற்றி எடுக்கவும்.
  • நான்ஸ்டிக் கடாயில் சிறிதளவு எண்ணெயை சூடாக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்துக்கொள்ளவும். (நீங்கள் விரும்பினால் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், குட மிளகாய் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்).
  • தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், அஜினோமோட்டோ சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
  • இறுதியாக பொரித்துவைத்த பிரக்கோலி துண்டுகளை கலந்து கொள்ளவும்.
  • நறுக்கிய வெங்காயம் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

பரிமாற பரிந்துரைப்பது

  • சூடான பிர்க்கோலி மஞ்சூரியனை பிரைட் ரைஸ், புலாவ், நூடுல்ஸ், ரொட்டி வகைகளுடனும் பரிமாறலாம்.

குறிப்பு

  • பிரக்கோலியை பொரித்து தனியாக வைத்துக்கொண்டால் பரிமாறும்போது சாஸ் சேர்த்து கலந்து கொள்ளலாம். இது பிரக்கோலி மொறு மொறுப்பாக இருக்க உதவும்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.