கோழி வறுவல் (கே.எஃப்.சி முறையில்)

கோழி வறுவல் (கே.எஃப்.சி முறையில்)

உலகலவில் துரித வகை உணவகங்களில் தற்போது மிகவும் அதிகமாக பிரபலமாகி வருவது கேஎஃப்சி ஆகும். இது முதலில் அமெரிக்காவில் ஆரம்பிக்கபட்டது. இங்கு வறுத்த சிக்கன் மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும், மிகுந்த சுவையும் கொண்டதாக கிடைக்கிறது. மெதுவாக மற்ற நாடுகளுக்கும் இது பரவி வழியில் இந்தியாவிற்குள்ளும் வந்துள்ளது. தற்போது இது இந்தியர்களின் உணவு பட்டியலில் புதிய இடத்தை பிடித்துள்ளது. நான் அமெரிக்காவிலும் இதை சுவைத்துள்ளேன், இந்தியாவிலும் சுவைத்துள்ளேன். அமெரிக்காவில் சிக்கன் துண்டுகள் மென்மையாக மற்றும் ஜுஸியாக இருக்கும். ஏதோ சில காரணங்களால் அது போன்ற சுவையில் இங்கு இல்லை. ஆனால் இங்குள்ளவர்களின் சுவைக்கேற்ப தயாரிக்கப்பட்டாலும் அந்த சுவை இங்கு இல்லாமல் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன்.

வீட்டில் தயாரிப்பதில் அந்த முழுமையான சுவை கிடைக்காவிட்டாலும் ஏறக்குறைய அதே அளவு சுவை வரும்படி இது இருக்கும். உணவகங்களுக்கு போக முடியாதவர்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் அளவு இருக்கும். நான் நேரம் இருக்கும்போது முடிந்த அளவு அதே சுவை கிடைக்க சிக்கன் துண்டுகளை ஒரு பெரிய பாத்திரத்தில் உப்பு கலந்த தண்ணீரில் முழுவதும் மூழ்கும்படி போட்டு 4 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் இருக்கும்படி குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிடுவேன். இந்த சிக்கன் வறுவல் தயாரிக்க அம்முறையை பின்பற்றினால் நன்றாக இருக்கும். உங்களுக்கு நேரம் இல்லாவிட்டால் இதை செய்வதை தவிர்த்து விடலாம். ஆனால் சற்று மிருது தன்மையை இழக்கக்கூடும். இப்போது தயாரிப்பு முறையை காண்போம்.

கோழி வறுவல் கேஎஃப்சி சுவையில் தயாரிக்கும் முறை

கோழி வறுவல்

Prep Time20 minutes
Cook Time20 minutes
Total Time40 minutes
Course: Appetizer, Side Dish
Cuisine: American
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • சமையல் எண்ணெய் – 5-6 கிண்ணம்
  • உப்பு – 1 தேக்கரண்டி
  • மிளகு தூள் – 1 தேக்கரண்டி
  • கோழி கறி (தோல் நீக்கியது) – 2 (துண்டுகளாக நறுக்கியது)

கலக்க தேவையானவை – 1

  • மைதா மாவு – 1/ 2 கிண்ணம்

கலக்க தேவையானவை- 2

  • முட்டை – 2 (அடித்தது)
  • பால் – 1 கிண்ணம்
  • சோயா சாஸ் – 1/ 2 தேக்கரண்டி
  • நார் சிக்கன் புல்லியன் – 1 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தழை – 1 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு – 2 பெரிய பற்கள் (நசுக்கியது)

கலக்க தேவையானவை – 3

  • மைதா மாவு – 1 கிண்ணம்
  • பிரட் தூள் (அல்லது ஓட்ஸ்) – 3/ 4 கிண்ணம்
  • உப்பு – 1/ 2 தேக்கரண்டி
  • பூண்டு பொடி – 1 / 2 தேக்கரண்டி
  • வெங்காயப்பொடி – 1/ 4 தேக்கரண்டி
  • வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • கருப்பு மிளகு தூள் – 2 தேக்கரண்டி

Instructions

  • கோழி கறியை கழுவி தண்ணீர் வடித்து உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
  • கலக்க தேவையானவற்றை தனித்தனியாக கலந்து வைக்கவும்.
  • வாண்லியில் எண்ணெய் சூடாக்கி கொள்ளவும். (சிக்கன் பொரிப்பதற்கு)
  • சிக்கன் துண்டை முதல் கலவையில் பிரட்டி அடுத்து முட்டை சேர்த்த கலவையில் பிரட்டி அடுத்து பிரட் தூளில் பிரட்டவும்.
  • இதை காய வைத்த எண்ணெயில் மிதமான சூட்டில் வைத்து கருகிவிடாமல் பொரிக்கவும்.
  • எல்லா பக்கமும் ஒன்று போல வெந்து பொன்னிறமாக பொரிக்கவும்.
  • பேப்பர் டவலில் போட்டு உடனே ஏதேனும் ஒரு சாஸுடன் பரிமாறவும்
கோழி வறுவல் (கே.எஃப்.சி முறையில்)

கோழி வறுவல் கேஎஃப்சி சுவையில் தயாரிக்க விரிவான படிமுறைகள்

சிக்கனை கழுவி தண்ணீர் வடியவிட்வும். நான் இதற்கு சிக்கன் கால் பகுதி மற்றும் தொடைபகுதிகளை சேர்ப்பேன். சிக்கனை கீறிவிடுவது நன்றாக இருக்கும். ஆனால் அது உங்கள் விருப்பம்.

கோழி வறுவல் கேஎஃப்சி சுவையில் தயாரிக்கும் முறை

சிக்கனில் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

கோழி வறுவல் கேஎஃப்சி சுவையில் தயாரிக்கும் முறை

கலக்க கொடுத்துள்ளவற்றை தனித்தனியாக கலந்து வைக்கவும்.

கோழி வறுவல் கேஎஃப்சி சுவையில் தயாரிக்கும் முறை

முதலில் மாவு கலவையில் பிரட்டவும். இதற்கு நான் வலது கையை பயன்படுதுவேன். அடுத்து இரண்டாவது தட்டிற்கு மாற்றவும்.

கோழி வறுவல் கேஎஃப்சி சுவையில் தயாரிக்கும் முறை

முட்டை கலவையில் பிரட்டவும். நான் இதற்கு இடது கையை பயன்படுத்துவேன். முட்டை கலவை நன்றாக பிடித்த பின்னர் அடுத்த கலவைக்கு மாற்றவும்.

கோழி வறுவல் கேஎஃப்சி சுவையில் தயாரிக்கும் முறை

மீண்டும் வலது கையால் பிரட் தூளில் பிரட்டவும். இம்முறையில் செய்வது உலர்ந்த மாவில் பிரட்டுவது தனியாகவும் முட்டை கலவையில் பிரட்டியது தனியாகவும் செய்வது போல இருக்கும்.

கோழி வறுவல் கேஎஃப்சி சுவையில் தயாரிக்கும் முறை

எல்லா துண்டுகளையும் இதே முறையில் தயார் செய்து பொரிக்கும் முன்பு வைத்துகொள்ளவும்.

கோழி வறுவல் கேஎஃப்சி சுவையில் தயாரிக்கும் முறை

ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கொள்ளவும். மெதுவாக 2-3 சிக்கன் துண்டுகளை வாணலின் அளவுக்கு தகுந்தாற் போல போடவும். ஒரு புறம் பொன்னிறமான பின்னர் அடுத்த பக்கம் திருப்பிவிட்டு பொரித்து எடுக்கவும்.

கோழி வறுவல் கேஎஃப்சி சுவையில் தயாரிக்கும் முறை

இரண்டு பக்கமும் நன்றாக வெந்த பின்னர் எடுக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து பொரிக்க வேண்டும். கால் பகுதி கறி வேக 8-10 நிமிடங்களும், தொடை பகுதியாக இருந்தால் 12-15 நிமிடங்களும் ஆகும்.

கோழி வறுவல் கேஎஃப்சி சுவையில் தயாரிக்கும் முறை

பொரித்த சிக்கன் துண்டுகளை ஒரு தட்டில் பேப்பர் டவல் போட்டு அதில் வைக்கவும். அதிகப்படியான எண்ணெய் வடிந்துவிடும். சூடாக பரிமாறவும்.

கோழி வறுவல் (கே.எஃப்.சி முறையில்)

குறிப்பு

  • சிக்கன் நன்றாக மசால் ஊற வேண்டுமானால் சிக்கன் துண்டுகளை உப்பு கலந்த தண்ணீரில் 4-5 மணி நேரம் ஊற வைத்து பின்னர் கலந்த பொருட்களில் பிரட்டி தயாரிக்க வேண்டும்.
  • சிக்கன் சாதாரண வெப்பநிலையில் இருப்பது அவசியம். குளிர் சாதனபெட்டியில் இருந்து எடுத்து செய்யும்போது வேக அதிக நேரம் ஆகும். அதுமட்டுமல்லாமல் உள் பகுதி வேகும் முன்பு வெளிபுறம் விரைவில் சிவந்துவிடும்.
  • மற்றொரு முறை சிக்கனை எல்லா பகுதிகளையும் முடித்து 350 டிகிரி வெப்பனிலையில் 35-40 நிமிடங்கள் மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுக்கலாம். இதுவும் நல்ல சுவையுடன் இருக்கும்.

கேஎஃப்சி வறுத்த சிக்கன் பரிமாற பரிந்துரைப்பது

  • பிரென்ச் பிரை அல்லது வெங்காயம் வட்டமாக நறுக்கியதுடன் தக்காளி சாஸ் வைத்து மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறலாம்.
  • சாலட் அல்லது அகர்டின், பேக்ட் பொட்டேட்டோவுடனும் பரிமாறலாம்.
  • கலந்த வகை சாதத்துடனும் இதை பரிமாறலாம்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.