பச்சை தேங்காய் சட்னி
தென்னிந்திய சமையலறையில் மிக அடிப்படையான ஒரு சட்னி தேங்காய் சட்னி ஆகும். இது மிகவும் சுலபமாக செய்ய கூடியது. தேங்காய் சட்னி செய்முறையில் நிறைய வகைகள் உண்டு. அவற்றில் ஒரு செய்முறையை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். பச்சை தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி தேங்காய் சட்னி என்றும் இதை சொல்லலாம்.
இதை செய்யும் போது பச்சை கொத்தமல்லியை சேர்த்து அரைக்க வேண்டும். இதன் பச்சை நிறம் பார்ப்பதற்கும் அழகானது. கொத்தமல்லியின் சுவை மற்றும் அதன் மணம் மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் உகந்தது, இரத்த சோகையை தடுக்கும். இதை அடிக்கடி நம் சமையலில் சேர்ப்பது நல்லது.
பச்சை தேங்காய் சட்னி தயாரிப்பதற்கான வீடியோ வழிமுறைகள்
தயாரிப்புமுறை
பச்சை தேங்காய் சட்னி
Equipment
- mixer or blender
Ingredients
சட்னிக்கு தேவையான பொருட்கள்:
- துருவிய தேங்காய் – புதிதாக உடைத்த
- வறுத்த கடலை பருப்பு அல்லது பொட்டு கடலை – 3-4 தேக்கரண்டி
- பச்சை கொத்தமல்லி தழை – 1/2 கொத்து 3/4 கப்
- பச்சை மிளகாய் – 3 சுவைக்கேற்ப
- இஞ்சி – 1 அங்குலம்
- உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 1 தேக்கரண்டி
- கடுகு – ¼ தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி விரும்பினால்
- கருவேப்பிலை – 1 கீற்று
- வரமிளகாய் – 2 உடைத்தது
Instructions
- தேவையான பொருட்களில் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.
- அரைக்கும் போது இளஞ்சூடான நீரில் சட்னியை அரைக்கவும்.
- சட்னி கெட்டியாக வேண்டுமானால் தண்ணீர் மிக குறைவாக சேர்த்து அரைக்கவும் அல்லது ½ டம்ளர் தண்ணீர் சேர்த்தும் அரைக்கலாம்.
- கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு,1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை,வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
உதவிக் குறிப்புகள்
- எனக்கு கொத்தமல்லி தழையின் சுவையும்,வாசனையும் மிகவும் பிடிக்கும்.ஆதலால் நான் தேங்காய் சட்னியில் ஒரு கொத்து கொத்தமல்லி தழை சேர்த்து அரைப்பது வழக்கம்.உங்களுக்கு விருப்பமானால், 1/2 கொத்து அல்லது அதற்கு குறைவாகவோ சேர்த்து அரைத்து கொள்ளலாம்.
- தண்ணீர் சேர்க்காமல் முதலில் ஒரு நிமிடம் மிக்சியை ஓட்டவும்.
- அரைக்கும் போது இளஞ்சூடான நீரில் சட்னியை அரைக்கவும்.
- குடிக்கும் தண்ணீரில் தான் சட்னியை அரைக்க வேண்டும். ஏனெனில் நாம் சட்னியை அரைத்த பின் அப்படியே சாப்பிடுவோம்.
பரிமாற பரிந்துரைப்பது
- சுவையான பச்சை தேங்காய் சட்னியை இட்லி, தோசை, வடை, பஜ்ஜியுடன் பரிமாறலாம்.
- சாண்ட்விட்ச் செய்யும் போது ரொட்டியின் ஒரு பக்கத்தில் தடவலாம்.