பலாப்பழம் தேர்வு செய்து நறுக்கும் முறை
பலாப்பழம் இனிப்பான சுவையுள்ள பழம். தென்னிந்தியாவில் மா, பலா, வாழை பொதுவாக உண்ணப்படும் பழவகைகளாகும். இதை முக்கனிகள் என்று அழைப்பார்கள். இந்தியாவில் உள்ள மக்கள் இயற்கையிலேயே இனிப்பு சுவைகொண்ட பழவகைகள் உண்பதை விரும்புவார்கள். இது கடவுளின் படைப்பில் நமக்கு கிடைத்த வரமாகும்.
பலாப்பழத்தை நறுக்கியவுடன் உண்டாலும், இதில் பல வகையான இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. பருவகாலங்களில் மரம் முழுவதும் பழங்கள் நிறைந்து காணப்படும். நிறைய வீடுகளின் பின்புறத்தில் பலாமரம் வைத்திருப்பார்கள். பொதுவாக எல்லோராலும் இதை உண்ணமுடியாது. எனது பாட்டி பலாப்பழத்தை பதப்படுத்தி வருடம் முழுவதும் கெடாமல் வைத்திருப்பார்கள். வருடம் முழுவதும் பதப்படுத்திய பழத்தில் இருந்து நிறைய விதமான சமையலை செய்வார்கள். சக்க பிரதமன், சக்க அடை, சக்க அப்பம் மற்றும் பல வகைகள்.
பலாப்பழத்தை எப்படி தேர்வு செய்வது?
பலாப்பழம் வாங்கும்போது அதன் நிறத்தை முதலில் பார்த்துவாங்க வேண்டும். பச்சை நிறமும் மஞ்சள் நிறமும் கலந்து பிரவுன் நிறம் அங்கங்கே காணப்பட்டால், அடர் பச்சை நிறம் கொண்டதைவிட பழம்சுவை அதிகமானதாக இருக்கும். பழுத்தபழம் மணம் அதிகமாக வீசும். விரலால் தட்டினால் உள்ளே ஒன்றுமில்லாதது போன்ற சத்தம் வரும். மேலே உள்ள முட்கள் நெருக்கமாக இல்லாமல் பரந்து காணப்படும். கையால் அழுத்தினால் மிகவும் கெட்டியாக இருக்காது. அதேசமயம் மிகவும் மிருதுவாக இருந்தால் பழம் முத்தலாக உள்ளது என்று அர்த்தம். உங்களால் கையால் அழுத்தக்கூடிய அளவில் இருக்கவேண்டும்.
பலாப்பழம் நறுக்கும் முறை வீடியோ படிமுறைகள்
பலாப்பழத்தை எப்படி நறுக்குவது?
பலாப்பழம் முழுவதும் பழுத்திருந்தால் அரக்கு குறைவாக இருக்கும். பொதுவாக அரக்கு குறைவாகவும் மிகவும் பிசுபிசுப்பாகவும் இருக்கலாம். உங்களிடம் கையுறை (கிளவுஸ்) இருந்தால் பலாப்பழத்தை வெட்டும் முன்பு அணிந்துகொள்ளலாம். மற்றும், நறுக்கும் முன்னர் கத்தியில் எண்ணெய் தடவிகொண்டால் நல்லது.
எனது சொந்த ஊரில் உள்ளவர்கள் கையுறை (கிளவுஸ்) அணியமாட்டார்கள். எனவே அம்முறையையே இங்கு நான் விளக்குகிறேன். கீழே கொடுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி பலாப்பழத்தை நறுக்குக.
- முதலில் கீழே ஒரு பிளாஸ்டிக் ஷீட் அல்லது பேப்பர் விரித்துகொள்ளவும். சுத்தம் செய்ய எளிதாக இருக்கும்.
- உள்ளங்கையில் தேங்காய் எண்ணெய் தடவிகொள்ளவும். கத்தியிலும் தடவவும். இதற்கு மரக்கிளைகள்,தேங்காய் வெட்டபயன்படுத்தும் கத்தியை உபயோகிக்கவேண்டும். சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியையும் உபயோகிக்கலாம்.
- முழுபழத்தையும் இரண்டாக வெட்டவும்.
- பேப்பர் டவலால் அதில் உள்ள பாலை துடைத்து எடுக்கவும். பால் குறைவாக இருந்தால் நல்லசுவையுள்ளதாக இருக்கும்.
- பாதியாக நறுக்கியதை மீண்டும் பாதியாக நறுக்கவும். பொதுவாக ஒரு பலாப்பழத்தை நான்கு பகுதியாக வெட்டவேண்டும்.
- நடுவில் உள்ள தண்டுபகுதியை கூரான கத்தியால் வெட்டி நீக்கிவிடவும். இதன்பின்னர் பழத்தை தனியாக எடுக்கவும்.
- மஞ்சள் நிறத்தில் சுளை இருக்கும். இதை சுற்றிலும் வெள்ளை நிறத்தில் நார்போல இருக்கும் சுளைகளை எடுத்தபின்னர் இதை பிரித்து எரிந்துவிடலாம். மஞ்சள் சுளை நாரின் இடையில் தான் இருக்கும். பழத்தின் நடுவில் கொட்டை இருக்கும். அதை நீக்கிவிட்டு பழத்தை சுவைக்கலாம். கொட்டையை வேறு சமையலுக்கு பயன்படுத்தலாம். அல்லது காயவைத்து வைத்துகொள்ளலாம்.
- சுளைகளை தனியாக பிரித்து எடுத்தபின்னர் குளிர்சாதன பெட்டியில் வைத்து ஒருவாரம் வரை வைத்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திகொள்ளலாம். பழத்தை முழுவதும் ஒரே தடவையில் பிரித்து சுளைகளை எடுத்துவிடலாம்.
- இறுதியாக நான் உங்களுக்கு ஒன்று குறிப்பிடவேண்டும். பழத்தை நறுக்கியபின்னர் கத்தியையும், கைகளையும் எப்படி சுத்தம் செய்வது என்பதே. அடுப்பின் மேலே தீயில் சில விநாடிகள் கத்தியை காட்டவேண்டும், பின்னர் கத்தியை சுத்தமான துணி அல்லது பேப்பரால் துடைக்கவேண்டும்.
- கைகள் முழுவதும் தேங்காய் எண்ணெய் தடவி கொண்டு சாதாரணமாக கைகள் கழுவுவது போல சோப்பு போட்டு கழுவினால் விரல்களில் உள்ள பிசுபிசுப்பு நீங்கிவிடும்.