வீட்டில் தயாரிக்கும் தயிர்

வீட்டில் தயாரிக்கும் தயிர்

கர்ட் அல்லது தகி (ஹிந்தி) அல்லது தயிர் (தமிழ் ) அல்லது மொசுறு (தெலுங்கு) இந்தியர்களின் வீடுகளில் பயன்படுத்தப்படும் பொதுவான ஒன்றாகும். இங்குள்ள மக்கள் தயிரை நிறைய வகைகளில் உபயோகிப்பார்கள். பரோட்டாவுடன், காரமான பிரியாணி, மற்றும் புலாவ் வகைகளுடனும் தயிர் சாட், தயிர் பல்லா என்று பல வகைகளில் பரிமாறப்படுகிறது. மிக பிரபலமான அவியல், மோர்குழம்பு, ரவா இட்லி, காண்ட்வி மற்றும் ஸ்ரிகண்ட் தயாரிக்க முக்கியமாக தயிர் தேவைப்படுகிறது.

தயிர் பொதுவாக சுவையும், ருசியும் உள்ளதாக இருந்தாலும் இது அதிக ஊட்டசத்து நிறைந்தது. இதில் எளிதில் கிடைக்கும் புரோபயோடிக் பாக்டீரியா உள்ளதால் அதிகமான சத்துள்ளது. இதில் உள்ள பாக்டீரியா நாம் உண்ணும் மற்ற உணவுகளையும் எளிதில் ஜீரணமாவதற்கும் உதவுகிறது. நாம் காரமான உணவுடன் தயிர் சேர்த்து உண்ணும் போது தயிர் காரத்தை குறைத்து சமன் செய்கிறது. தயிர் சேர்த்து கொள்வதால் இரத்த அழுத்தம் குறையவும், கொழுப்பு சத்து குறையவும் பயன்படுகிறது. தயிர் உண்பதால் பாலில் உள்ளது போன்று தயிரிலும் பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் உள்ளதால் நமது பற்களுக்கும், எலும்புகளுக்கும் உறுதி கிடைக்கும். இதனுடன் மேலும் மிக பயன் அளிப்பது எடை குறையவும், பதட்டம் குறையவும் உதவுகிறது.

பழங்காலத்திலும் ஏன் தற்போது கூட அதிகமான வீடுகளில் தயிரை வீட்டிலேயே தயாரித்து உபயோகிக்கின்றனர். தவிர்க்க முடியாத சமயம் கடையில் வாங்கி கொள்ளலாம். ஆனால் தற்போது நிறைய இளம் வயதினர் கடைகளில் வாங்கி உபயோகிக்கிறார்கள். ஆனால் கெடாமல் இருக்க அதை பதப்படுதுவதால் அதில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைப்பதில்லை. தயிரை சுலபமாக தினமும் நாம் வீட்டிலேயே தயாரித்து கொள்ளலாம்.

வீட்டில் தயிர் தயாரிக்கும் முறை

Prep Time5 minutes
Total Time14 minutes
Course: condiments
Cuisine: Indian
Servings: 4 People
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • பால் – 1/2 லிட்டர் (2 கிண்ணம்) (நீங்கள் எந்த பாலை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்)
  • தயிர் – 4 தேக்கரண்டி (கடையில் வாங்கிய தயிரையும் பயன்படுத்தலாம்)

Instructions

  • பாலை காய்ச்சிகொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைக்கவும்.
  • கை பொறுக்கும் சூடு இருக்கும் வரை ஆற வைத்து தயிர் சேர்க்கவும். தயிர் கடையில் வாங்கியதாக இருந்தாலும் சேர்க்கலாம்.
  • மூடி வைத்து வெதுவெதுப்பான இடத்தில் 5-6 மணி நேரம் தயிர் ஆகும் வரை வைக்கவும்.

வீட்டில் தயிர் தயாரிக்கும் விரிவான வழி முறைகள்

பாலை பால் குக்கர் அல்லது பாத்திரத்தில் காய்ச்சவும். தயிர் கெட்டியாக வேண்டுமானால் கொழுப்பு சத்து அதிகம் உள்ள பால் தேவை. கொழுப்பு சத்து குறைவாக உள்ள பாலை உபயோகித்தால் தயிர் அவ்வளவு கெட்டியாக இருக்காது.

வீட்டில் தயிர் தயாரிக்கும் முறை

அடுப்பை குறைத்து 10 நிமிடங்கள் வைக்கவும். இவ்வாறு வைப்பதால் பாலில் உள்ள தண்ணீர் சற்று குறைந்து தயிர் கெட்டியாக கிடைக்கும். அடிக்கடி கிளறிவிடவும்.

வீட்டில் தயிர் தயாரிக்கும் முறை

அடுப்பை அணைத்து பாலை வேறு மூடியுடன் உள்ள பாத்திரத்திற்கு மாற்றவும். பாலை நன்றாக ஆறவிடவும். கையால் தொட்டு பார்க்கலாம் அல்லது பாத்திரத்தை வெளியில் தொட்டாலும் ஆறியதை தெரிந்துகொள்ளலாம்.

பாலில் தயிர் சேர்க்கவும். உங்களிடம் தயிர் ஏற்கனவே இருந்தால் 1 தேக்கரண்டி தயிர் சேர்க்கலாம். இல்லையெனில் உங்கள் அருகில் உள்ள நண்பர்களிடம் வாங்கி கொள்ளலாம். பல்பொருள் அங்காடிகளில் தயிர் கிடைக்கும்.

தயிர் சேர்த்தபின்னர் ஒரு ஸ்பூனால் நன்றாக கலந்துவிடவும். இவ்வாறு கலப்பதால் தயிர் நன்றாக இருக்கும்.

வீட்டில் தயிர் தயாரிக்கும் முறை

இதை ஓரே இடத்தில் 5-6 மணி நேரம் வைக்கவும். குளிர் அதிகமாக் இருந்தால் மைக்ரோவேவ் அவனில் வைக்கலாம். எனது அத்தை குளிர் அதிகமாக இருந்தால் ஹாட்பாக்ஸில் வைத்து வெதுவெதுப்பாக இருக்கும்படி செய்வார்கள். அதனால் நமக்கு விரைவாக தயிர் தயாராகும். கம்பளியில் பாத்திரத்தை சுற்றி வைத்தும் கொள்ளலாம்.

வீட்டில் தயிர் தயாரிக்கும் முறை

பால் நன்றாக கெட்டியான தயிரான பின்னர் குளிர்சாதனபெட்டியில் வைத்து ஒரு வாரத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம். 3-4 நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்தினால் புளிப்பாகிவிடும்.

வீட்டில் தயிர் தயாரிக்கும் முறை
வீட்டில் தயிர் தயாரிக்கும் முறை

குறிப்பு

ஒரு வாரத்திற்கு மேல் வைத்து பயன்படுத்தினால் பிரீசரில் வைக்கவும் அல்லது புதிய பாலை 3 நாட்களுக்கு ஒருமுறை தயிரில் சேர்த்து கொள்ளவும்.

தயிர் பரிமாற பரிந்துரைப்பது

  • தயிர் வெள்ளை சாதத்துடன் ஊறுகாய் வைத்து பரிமாறலாம்.
  • தயிருடன் சர்க்கரை, அல்லது உப்பு சேர்த்து உண்பது மிகவும் சத்தானதாகும். நறுக்கிய பழங்கள், உலர் பருப்புகள் சேர்த்தும் உண்ணலாம்.
  • தயிர் பச்சடி, லஸ்ஸி, மசாலா மோர், மோர் குழம்பு மற்றும் பலவிதத்தில் தயிரை பயன்படுத்தலாம்.


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.