பீட்ரூட் சட்னி
தென்னிந்தியாவில் பல காய்கள் கொண்டு சட்னி செய்வது வழக்கம். பீட்ரூட்டை சட்னியாக செய்து உண்பதால் உடலுக்கு நல்லது. நம் உடலில் இரத்தம் விருத்தியாகும். இட்லி, தோசை, சூடான சாதம், சப்பாத்தி ஆகியவற்றோடு பீட்ரூட் சட்னியைப் பரிமாறலாம்.
எனக்கு பீட்ரூட் அதிகம் பிடிக்காது.அதில் உள்ள இனிப்பு சுவை நிறைய உணவோடு சேராது.அதை பருப்பு,தேங்காய் உடன் சேர்த்து சமைத்தால் சுவை அதிகமாகும். இந்த சட்னியில் வறுத்த பருப்பு,பூண்டு, துருவிய தேங்காய் சேர்த்து சமைப்பதால் சுவை அபாரமாக இருக்கும். இந்த காயை பிடிக்காதவர்கள் கூட இந்த சட்னியை விரும்பி உண்பார்கள். இந்த சட்னியை உங்கள் இல்லங்களில் செய்து உண்டு மகிழ ஊக்குவிக்கிறேன். சூடான சாதத்தில் இதை சேர்த்து உண்பது எனக்கு பிடிக்கும்.
பீட்ரூட் சட்னி செய்ய வீடியோ வழிமுறைகள்
பீட்ரூட் சட்னி செய்முறை
பீட்ரூட் சட்னி
Servings: 4 people
Ingredients
- பீட்ரூட் -1 நடுத்தர அளவில்
- பெரிய வெங்காயம் – 3
- பூண்டு – 2
- துருவிய தேங்காய் – 4 தேக்கரண்டி
- புளி – கோலிகுண்டு அளவு
- உப்பு -தேவைகேற்ப
வறுத்து அரைக்க:
- கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி – 1 தேக்கரண்டி
- வரமிளகாய் – 5
தாளிக்க தேவையானவை:
- எண்ணெய் – 1 தேக்கரண்டி
- கடுகு – 1/4 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கீற்று
- பெருங்காயம் – 1 சிட்டிகை
Instructions
- பீட்ரூட்டை நன்றாக கழுவி,தோல் நீக்கி,வெட்டவும்.
- கடாயில் வெங்காயம், பூண்டு, புளி, வெட்டிய பீட்ரூட், தேங்காய் சேர்த்து 5-10 நிமிடங்கள் வதக்கவும்.
- அடுப்பை நிறுத்தி,வதக்கியவற்றை நன்றாக ஆறவிடவும்.
- வேறு ஒரு கடாயில், வறுத்து அரைக்க வேண்டியவை என்று மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எண்ணெய் ஊற்றாமல் வறுக்கவும்.பின்னர் நன்றாக ஆறவிடவும்.
- வறுத்தவற்றை மிக்சியில் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.
- வறுத்த பீட்ரூட் மற்றும் அந்த கடாயில் உள்ளவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
- அரைக்க தேவையான அளவு குடிநீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- பரிமாறும் கிண்ணத்திற்கு சட்னியை மாற்றிவிடவும்.
- பின்னர் தாளிக்கவும்.தாளித்தவற்றை சட்னியின் மேல் சேர்த்து கலக்கவும்.
- பீட்ரூட் சட்னி பரிமாற தயார்.