இட்லி அரிசி – 4 கிண்ணம்(சாதாரண அரிசி – பச்சரிசி அல்லது புழுங்கல் அரிச)ி
வெந்தயம் – 1 மேசைக்கரண்டி
உப்பு – 2 மேசைக்கரண்டி
Instructions
அரிசி, உளுந்தை தனித்தனியாக கழுவவும். நீங்கள் 3-4 முறை கழுவினால் தான் இட்லி வெள்ளையாக இருக்கும்.
கழுவிய பின்னர் தேவையான அளவு அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். நீங்கள் வெந்தயத்தை உளுத்தம் பருப்புடன் சேர்த்து ஊற வைக்கலாம். அல்லது தனியாக ஒரு கிண்ணத்திலும் ஊற வைக்கலாம்.
மூடி வைத்து 2 மணி நேரம் ஊற விடவும். இன்னும் சற்று அதிக நேரமும் ஊறவிடலாம். பாரம்பரியமாக ஆட்டுகல்லில் கையால் அரைக்கும் போது அதிக நேரம் ஊறவைக்க வேண்டும். தற்போது கிரைண்டரில் அரைக்க 2 மணி நேரம் ஊற வைத்தால் போதும்.
குறைந்தது 2 மணி நேரத்தில் நன்றாக ஊறி விடும். பருப்பு மிருதுவாகவும், பெரிதாகவும் இருக்கும். இப்போது அரைக்க தயாராக இருக்கும்.
கிரைண்டரை கழுவி நடுவில் உள்ள கல்லை பொருத்தவும். கிரைண்டரை ஓடவிட்டு ஊற வைத்து உளுத்தம் பருப்பு, வெந்தயம் இரண்டையும் சிறிது சிறிதாக சேர்க்கவும்.
ஊற வைத்த தண்ணீரை வைத்திருக்கவும். முறையாகமாவு அரைக்க தண்ணீரை தேவைப்படும் போது சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும். நீங்கள் 3-4 முறை 5-10 நிமிட இடை வெளியில் சேர்க்க வேண்டியது இருக்கும்.
உளுத்தம் பருப்பு லேசாகவும், மிருதுவாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். நல்ல தரமான உளுத்தம் பருப்பு அரைத்த பின்னர் 6-8 மடங்கு அதிகமாக மாவு கிடைக்கும். இது இட்லி மிருதுவாக இருக்க உதவும்.
30 நிமிடங்களில் உளுந்து மாவு தயாராகிவிடும். கிரைண்டரை நிறுத்திவிட்டு மாவை பெரிய பாத்திரத்தில் எடுக்கவும்.
மறுபடியும் கிரைண்டரை ஓடவிடவும். கிரைண்டரை கழுவ வேண்டியதில்லை. தண்ணீரை வடித்துவிட்டு அரிசியை சிறிது சிறிதாக சேர்க்கவும். தண்ணீர குறைவாக சேர்க்கவும். உளுத்தம் பருப்பு அரைக்க சேர்த்த அளவை விட குறைவாக சேர்த்தால் போதும்.
அடுத்த 20-25 நிமிடங்களில் அரிசி மிருதுவாக ஆகும். ஆனால் இட்லி மிருதுவாக இருக்க மாவை இன்னும் சற்று நேரம் அரைக்க வேண்டும்.
இப்போது இரண்டு மாவையும் கலக்க வேண்டும். பாரம்பரிய முறையில் தயாரிப்பதில் உளுந்து மாவுடன் அரிசி மாவையும் ஒரே பாத்திரத்தில் எடுத்து உப்பு சேர்த்து கையால் நன்றாக கலந்து வைப்பார்கள். கையால் கரைப்பது மாவு புளிக்க உதவும் என்று கூறுவார்கள்.
எனது தாயார் வேறு ஓரு முறையில் செய்வார்கள். அந்த முறையை நான் கடைபிடிக்கிறேன். அரிசி மாவு மிருதுவான பின்னர், அரைத்த உளுந்து மாவை மீண்டும் கிரைண்டரில் போட்டு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் ஓடவிடவேண்டும். இது மாவு முழுவதும் நன்றாக கலக்க உதவும்.