வெல்ல கொழுக்கட்டை

வெல்ல கொழுக்கட்டை

கொழுக்கட்டை (இந்தியர்களின் இனிப்பு வகைகளில் ஒன்றான மோதகம், குடுமு) தென்னிந்தியர்களின் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். இது ஆவியில் வைத்து வேக வைக்கும் ஒரு உணவு வகையை சேர்ந்தது. விநாயகர் சதுர்த்தி மற்றும் வரலக்ஷ்மி நோன்பு சமயங்களில் தயாரிக்கப்படுவதாகும். எல்லோராலும் விரும்பப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் தயாரிக்கலாம். எனக்கு திருமணம் ஆன ஆரம்ப நாட்களில் எனது மாமியார் தேங்காயை சிறிது அரைத்து தயாரிப்பார்கள். உருண்டை எளிதாக பிடிக்க வரும்.

கொழுக்கட்டை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு காரமாக அல்லது இனிப்பாக தயாரிக்கலாம். அரிசி மாவு பாதியளவு வேக வைத்து கொள்ள வேண்டும். பின் அதை கிண்ணம் போல செய்து அதனுள் பூரணத்தை நிரப்பி மூடி ஆவியில் வேக வைக்க வேண்டும்.

பொதுவாக இனிப்பு கொழுக்கட்டையினுள் வைக்கப்படும் பூரணம் வெல்லம், தேங்காய் சேர்த்ததாக இருக்கும். தமிழில் தேங்காய் என்றும் மலையாளத்தில் தேங்கா என்றும் இந்தியில் நாரியல் என்றும் கூறுவார்கள். தேங்காயுடன் வெல்லம் சேர்த்து உள்ளே வைப்பார்கள். இந்த கொழுக்கட்டை பல விதமாக அழைக்கப்படுகிறது. தேங்காய் கொழுக்கட்டை அல்லது வெல்ல கொழுக்கட்டை என்றழைக்கபடும். இது மிகவும் சுவையாகவும் உடலுக்கு சத்தானதாகவும் உள்ளது. ஆவியில் வேக வைப்பதால் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் அனைவருக்கும் மிகவும் ஏற்றது.

இப்போது தேங்காய், வெல்லம் சேர்த்த வெல்ல கொழுக்கட்டை தயாரிப்பு முறையை காண்போம்.

வெல்ல கொழுக்கட்டை தயாரிக்கும்முறை

வெல்ல கொழுக்கட்டை

Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

உள்ளே வைக்க தேவையான பொருட்கள்

  • துருவிய தேங்காய் (பாதி அரைத்தது) – 1 கிண்ணம்
  • வெல்லம் – 1/2 கிண்ணம்
  • ஏலக்காய் – 4-5 பொடித்தது
  • நெய் – 1/2 தேக்கரண்டி

மேல்மாவு தயாரிக்க தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு – 1 கிண்ணம்
  • தண்ணீர் – 1.5 கிண்ணம்
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  • உப்பு – 1/4 தேக்கரண்டி

Instructions

உள்ளே வைக்க செய்முறை

  • ஒரு வாணலியில் எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில் வைத்து ஒட்டாமல் வரும்வரை கிளறவும்.
  • ஆறிய பின்னர் உங்களுக்கு விருப்பமான அளவில் (பெரிய அல்லது சிறிய) உருண்டைகளாக உருட்டி வைக்கவும். சுமார் 25 உருண்டைகள் வரும்.

மேல்மாவு செய்முறை

  • அரிசி மாவில் சாதாரண தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
  • ஒரு வாணலியில் இதை போட்டு என்ணெய், உப்பு சேர்க்கவும்.
  • அடுப்பில் குறைந்த தீயில் வைத்து கிளறவும்.
  • கைவிடாமல் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் பந்து போல சுருண்டு வரும்.
  • அந்த மாவை ஒரு தட்டில் மாற்றி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  • கையில் எண்ணெய் தடவி கொண்டு மாவை நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக்கவும்.
  • ஒரு உருண்டையை எடுத்து கையில் வைத்து விரலால் தட்டி கிண்ணம் போன்று செய்யவும்.
  • தயாரித்து வைத்த தேங்காய் பூரணத்தை 1 ஸ்பூன் அளவு உள்ளே வைக்கவும். கிண்ணம் போல உள்ள மாவை மூடவும். உருண்டையாகவோ அல்லது படத்தில் உள்ளவாறு செய்து கொள்ளவும்.
  • செய்து வைத்த கொழுக்கட்டைகளை ஆவியில் 5-7 நிமிடங்கள் இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமரில் வேக வைக்கவும். வெந்த பின்னர் மூடியை திறந்து ஆறவைத்து பின்னர் கொழுக்கட்டைகளை எடுக்கவும். (மோதகம்)

வெல்ல கொழுக்கட்டை தயாரிக்க விரிவான படிமுறைகள்

எல்லா பொருட்களையும் ஒரு வாணலியில் போட்டு குறைந்த தீயில் அடுப்பில் வைக்கவும். வெல்லம் உருக ஆரம்பிக்கும்.

வெல்ல கொழுக்கட்டை தயாரிக்கும்முறை
வெல்ல கொழுக்கட்டை தயாரிக்கும்முறை

எல்லாம் ஒன்று சேர்ந்து வரும்வரை அடுப்பில் வைத்து கிளறவும். பின்னர் ஆறவிடவும்.

வெல்ல கொழுக்கட்டை தயாரிக்கும்முறை

கொழுக்கட்டை மாவு எடுத்து கொள்ளவும். கடையில் வாங்கியது அல்லது வீட்டில் தயாரித்தது.

வெல்ல கொழுக்கட்டை தயாரிக்கும்முறை

அரிசி மாவை சாதாரண தண்ணீர் சேர்த்துகட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.

வெல்ல கொழுக்கட்டை தயாரிக்கும்முறை
வெல்ல கொழுக்கட்டை தயாரிக்கும்முறை

கலந்த மாவை ஒரு வாணலியில் போட்டு எண்ணெய், உப்பு சேர்க்கவும்.

வெல்ல கொழுக்கட்டை தயாரிக்கும்முறை

அடுப்பில் குறைந்த தீயில் வைக்கவும். சில நிமிடங்களில் கெட்டியாக தொடங்கும்.

வெல்ல கொழுக்கட்டை தயாரிக்கும்முறை

கைவிடாமல் கிளறவும். பந்து போல உருண்டு வாணலியில் ஒட்டாமல் வரும்.

வெல்ல கொழுக்கட்டை தயாரிக்கும்முறை

இதை ஒரு தட்டில் மாற்றி மூடி வைக்கவும். கையில் எண்ணெய் தடவி கொண்டு சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

வெல்ல கொழுக்கட்டை தயாரிக்கும்முறை

ஒரு உருண்டையை எடுத்து கிண்ணம் போல செய்யவும். நடுவில் தயாரித்து வைத்த தேங்காய் பூரணத்தை வைத்து மீதமுள்ள மாவால் மூடவும்.

வெல்ல கொழுக்கட்டை தயாரிக்கும்முறை

ஆவியில் வைத்து 5-7 நிமிடங்கள் இட்லி பாத்திரம் அல்லது ஸ்டீமர் அல்லது ஏதாவது ஒரு பாத்திரத்தில் மூடி வைத்து வேக விடவும்.

வெல்ல கொழுக்கட்டை தயாரிக்கும்முறை

வெந்த பின்னர் 5-10 நிமிடங்கள் ஆற விடவும். பின்னர் கொழுக்கட்டைகளை வெளியில் எடுக்கவும்.

வெல்ல கொழுக்கட்டை தயாரிக்கும்முறை

சூடாக இருக்கும் போதே பரிமாறவும்.

வெல்ல கொழுக்கட்டை


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.