கம்பு கூழ்

கம்பு கூழ்

கம்பு எனப்படுவது சிறு தானிய வகையில் ஒன்றாகும். மிகவும் சத்து நிறைந்தது. கம்பு அதிகமாக 5, 6 தலைமுறைகளுக்கு முன்னர் நமது நாட்டில் பயன்படுத்துப்பட்டு வந்தது. ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்ட்ர மாநிலங்களில் பக்ரி எனப்படும் உணவு வகை கம்பு மாவில் தயாரிக்கப்படுகிறது. தமிழ் நாட்டில் கம்பு சாதம், கம்பு கூழ், கம்பு அடை, கம்பு களி ஆகியவை காலை நேர உணவாக உண்ணப்படுகிறது.

முந்தைய தலைமுறையில் இது ஏழைகளின் உணவாக கருதப்பட்டது. ஒரு பெரிய சொம்பு கம்பு கூழ் விவசாயியின் பல மணி நேர பசியை தாங்ககூடிய ஒரு சத்து நிறைந்த உணவாகும். வெயிலில் நாள் முழுவதும் வேலை செய்தாலும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். கம்பில் அதிக அளவு இரும்பு சத்து, கால்சியம், விட்டமின் பி-காம்ப்ளக்ஸ் உள்ளது. தற்போது உடல் நலத்தில் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதால் இதன் பயனை அறிந்து அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதனால் கம்பு கூழ் சத்தான உணவில் முக்கிய இடத்தில் உள்ளது.

கம்பு கூழ் தயாரிப்பு முறை

கம்பு கூழ்

Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • கம்பு – 1/2 கிண்ணம்
  • தண்ணீர் – 5 கிண்ணம்
  • மோர் – 3/4 கிண்ணம்
  • உப்பு – 1/2 தேக்கரண்டி

மேலே தூவ

  • சாம்பார் வெங்காயம் – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 1

Instructions

  • கம்பை கழுவி 1/2 கிண்ணம் தண்ணீரில் 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • மிக்சியில் ஒன்றிரண்டாக உடைத்து கொள்ளவும். நீங்கள் கடையில் கிடைக்கும் கம்பு மாவிலும் கூழ் தயாரிக்கலாம். ஆனால் நான் முழு தானியத்தில் செய்வதையே விரும்புவேன். இறுதியில் இதன் சுவை நன்றாக இருக்கும்.
    கம்பு கூழ் தயாரிப்பு முறை
  • மீதமுள்ள 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து கம்பை வேக வைக்கவும். நீங்கள் குக்கர் உபயோகித்தும் தயாரிக்கலாம். பாத்திரத்திலும் செய்யலாம். பாத்திரத்தில் வேக 1/2 மணி நேரம் வரை ஆகும். இதுவே கம்பு சோறு அல்லது கம்பு சாதம், இதை மதிய உணவாக ஏதேனும் குழம்பு அல்லது ஊறுகாயுடன் உண்ணலாம். நான் எப்போதும் இரவு உணவிற்கே தயாரிப்பேன். மீதமுள்ள கம்பு சாதத்தை அடுத்த நாள் காலையில் கரைத்து கூழாக உண்போம்.
    கம்பு சாதம்
  • மீதமுள்ள கம்பு சாதத்தை ஆற விடவும். ஆறிய பின்னர் எலுமிச்சை விட சற்று பெரிய அளவில் உருணடைகளாக செய்து குடிக்கும் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு வைக்கவும்.
    கம்பு கூழ் தயாரிப்பு முறை
  • இது தண்ணீரில் இரவு முழுவதும் அல்லது குறைந்தது 2 மணி நேரமாவது இருக்க வேண்டும். சற்று புளித்தால் தான் கூடுதல் சுவையுடன் இருக்கும்.
  • நீங்கள் சாப்பிட தயாராகும்போது அந்த உருண்டையை தண்ணீரில் கரைத்து கடைந்த மோர் மற்றும் உப்பு போடவும். கம்பங்ககூழ் பரிமாற தயார்.
  • நீங்கள் இந்த கஞ்சி அல்லது கூழை நறுக்கிய சாம்பார் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயுடன் பரிமாறலாம்.

பரிமாற பரிந்துரைப்பது

  • ஏதேனும் வடாம், மோர் மிளகாய், சிறிதளவு ஊறுகாயுடன் பரிமாறலாம்.

குறிப்பு

  • நீங்கள் கூழ் தயாரிக்க புளிக்கும் வரை காத்திருக்க தேவையில்லை. ஆறிய உடனே தயாரித்து கொள்ளலாம்.
  • நீங்கள் இதே தயாரிப்பு முறையில் கடையில் கிடைக்கும் கம்பு மாவில் கம்பு கூழ் தயாரிக்கலாம்.
கம்பு கூழ்


உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.