மலபார் கோழி குழம்பு

மலபார் கோழி குழம்பு

மலபார் கோழி குழம்பு கேரளாவின் பிரசித்தமான உணவு வகைகளில் ஒன்றாகும். நாங்கள் சிக்கனில் விதவிதமான குழம்பு வகைகளை தயாரிப்பதை விரும்புவோம். நாங்கள் 10-20 விதங்களில் செய்வோம். இந்த குழம்பு கெட்டியான அரைத்த விழுதுடன் முந்திரி, தேங்காய் பால் சேர்ந்திருக்கும். இதில் தென்னகத்தின் மணமும் கலந்திருக்கும். ஆப்பம் அல்லது பரோட்டாவுடன் உண்டு மகிழுங்கள். நிச்சயம் விரலில் உள்ளதையும் சுவைக்கும்படி இருக்கும்.

மலபார் முஸ்லிம்களின் சமையல் மிகவும் பிரசித்தமானது. நான் மலபார் சமையல் வகைகளை அடுத்துவரும் நாட்களில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்த குழம்பு மிகவும் சுவையாகவும் கொழுப்பு சத்து நிறைந்ததாகவும் இருக்கும். ஆனால் முடிவில் அடித்துகொள்ள முடியாத அளவு சுவையுடன் இருக்கும். அதனால் எப்போதாவது ஒரு முறை இது போன்ற சுவையான குழம்பு செய்வதில் தவறில்லை. முக்கியமாக வீட்டிற்கு விருந்தினர் வரும்போது சமைக்கலாம். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

மலபார் கோழி குழம்பு செய்முறை

மலபார் சிக்கன் குழம்பு

Prep Time20 minutes
Cook Time30 minutes
Total Time50 minutes
Course: Side Dish
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

தேவையான பொருட்கள்

  • கோழி – 1 கிலோ (சுத்தம் செய்து நடுத்தர துண்டுகளாக்கியது)
  • முந்திரி – 5-7 (தண்ணீரில் ஊற வைத்தது)
  • கெட்டியான முதல் தேங்காய் பால் – 1/ 2 கிண்ணம்
  • தண்ணியான இரண்டாம் தேங்காய் பால் – 1.5 கிண்ணம்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  • வெங்காயம் – 3 (நடுத்தரமான அளவு நறுக்கியது)
  • இஞ்சி – 2 அங்குலம் (நறுக்கியது)
  • பூண்டு – 1 (நறுக்கியது)
  • தக்காளி – 2 சிறியது (நறுக்கியது)
  • மஞ்சள் தூள் – 1 / 4 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1/ 2 தேக்கரண்டி
  • பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
  • மிளகு தூள் – 1/ 2 தேக்கரண்டி

தாளிக்க தேவையான பொருட்கள

  • தேங்காய் எண்ணெய் – மேசைக்கரண்டி
  • கடுகு – 1/ 2 தேக்கரண்டி
  • சாம்பார் வெங்காயம் – 5 அல்லது 1/ 4 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
  • வர மிளகாய் -3
  • கருவேப்பிலை – 1 கொத்து

Instructions

  • அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கவும். பெருஞ்சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து அரை நிமிடம் கழித்து வெங்காயம் சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • தக்காளி, மஞ்சள் தூள், வர மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மிளகு தூள் சேர்க்கவும். சில நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடவும். ஆறவிடவும்.
  • ஆறிய பின்னர் மிக்ஸி அல்லது பிளனடரில் சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துகொள்ளவும். இப்போது மசாலா தயார். இதை தனியாக வைக்கவும்.
  • அதே வாணலியில் அல்லது வேறு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றவும். சிக்கன் துண்டுகளை சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும். இப்படி வறுப்பது சிக்கன் வெந்த பின்னர் தனி சுவையை கொடுக்கும்.
  • அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு, இரண்டாவது தேங்காய் பால் சேர்க்கவும். (தேங்காய் பால் தயாரிக்கும் முறையை காணவும்)
  • மூடிவைத்து 10-12 நிமிடங்கள் அல்லது சிக்கன் வேகும் வரை வைக்கவும்.
  • ஊறவைத்த முந்திரியை கெட்டியான தேங்காய் பாலுடன் சேர்த்து அரைக்கவும்.
  • அரைத்த விழுதை சிக்கனுடன் சேர்க்கவும். அடுப்பை குறைத்து 5-7 நிமிடங்கள் வைக்கவும். குழம்பு கெட்டியாகி விடும்.
  • அடுப்பை அணைத்து குழம்பை பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
  • தாளிப்பதற்கு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடிக்கவிடவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். வர மிளகாய் கருவேப்பிலை சேர்த்து அட்ப்பை அணைக்கவும்.
  • தாளித்ததை குழம்பின் மேல் ஊற்றவும். பரிமாறும் வரை மூடிவைக்கவும். அதன் தனி மணம் கிடைக்கும். சுவையான சிக்கன் குழம்பு பரிமாற தயார்.

மலபார் சிக்கன் குழம்பு

மலபார் கோழி குழம்பு தயாரிக்க விரிவான படிமுறைகள்

ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி பெருஞ்சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்க்கவும். சில நிமிடம் கழித்து நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அடுத்து தக்காளி மற்றும் பொடி வகைகளை சேர்க்கவும். 5 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்துவிடவும்.

ஆறிய பின்னர் சிறிதளவு த்ண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துகொள்ளவும். இப்போது மசாலா தயார்.

மலபார் சிக்கன் குழம்பு செய்முறை

ஓரு வாண்லியில் எண்ணெய் சூடாக்கி கோழி (சிக்கன்) துண்டுகளை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். இவ்வாறு செய்வது சிக்கன் வெந்தபின்னர் தனிசுவையை கொடுக்கும்.

மலபார் சிக்கன் குழம்பு செய்முறை

அரைத்த மசாலா, உப்பு, இரண்டாம் தேங்காய் பால் சேர்க்கவும். தேங்காய் பால் தேவையான அளவு குழம்பை கொடுத்துவிடும் எனவே தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

மலபார் சிக்கன் குழம்பு செய்முறை

மூடிவைத்து 10-12 நிமிடங்கள் வேகவிடவும்.

மலபார் சிக்கன் குழம்பு செய்முறை

சிக்கன் வேகும் நேரத்தில் ஊறவைத்த முந்திரியை கெட்டியான தேங்காய் பாலுடன் சேர்த்து அரைத்துகொள்ளவும்.

மலபார் சிக்கன் குழம்பு செய்முறை

அரைத்து விழுதை சிக்கனுடன் சேர்த்து, அடுப்பை குறைத்து 5-7 நிமிடங்கள் வேகவிடவும். குழம்பு கெட்டியாகிவிடும்.

மலபார் சிக்கன் குழம்பு செய்முறை

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் சூடாக்கி, கடுகு வெடிக்கவிடவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். வர மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும்.

மலபார் சிக்கன் குழம்பு செய்முறை

தாளித்ததை குழம்பில் சேர்க்கவும். சுவையான மலபார் குழம்பு பரிமாற தயார்.

மலபார் சிக்கன் குழம்பு செய்முறை

சிக்கன் குழம்பு பரிமாற பரிந்துரைப்பது

  • தேங்காய் பால் சேர்த்த சிக்கன் குழம்பு காரம் சற்று குறைவாக நல்ல சுவையுடன் இருக்கும்.
  • இட்லி, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பத்ரி மற்றும் மலபார் பரோட்டவுடன் பரிமாறலாம்.

மலபார் சிக்கன் குழம்பு



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.