கோழி – 1 கிலோ(சுத்தம் செய்து நடுத்தர துண்டுகளாக்கியது)
முந்திரி – 5-7(தண்ணீரில் ஊற வைத்தது)
கெட்டியான முதல் தேங்காய் பால் – 1/ 2 கிண்ணம்
தண்ணியான இரண்டாம் தேங்காய் பால் – 1.5 கிண்ணம்
உப்பு – தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
வெங்காயம் – 3(நடுத்தரமான அளவு நறுக்கியது)
இஞ்சி – 2 அங்குலம்(நறுக்கியது)
பூண்டு – 1(நறுக்கியது)
தக்காளி – 2 சிறியது(நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1 / 4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/ 2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/ 2 தேக்கரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள
தேங்காய் எண்ணெய் – மேசைக்கரண்டி
கடுகு – 1/ 2 தேக்கரண்டி
சாம்பார் வெங்காயம் – 5 அல்லது 1/ 4 பெரிய வெங்காயம்(நறுக்கியது)
வர மிளகாய் -3
கருவேப்பிலை – 1 கொத்து
Instructions
அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கவும். பெருஞ்சீரகம், நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து அரை நிமிடம் கழித்து வெங்காயம் சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
தக்காளி, மஞ்சள் தூள், வர மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மிளகு தூள் சேர்க்கவும். சில நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடவும். ஆறவிடவும்.
ஆறிய பின்னர் மிக்ஸி அல்லது பிளனடரில் சிறிது தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துகொள்ளவும். இப்போது மசாலா தயார். இதை தனியாக வைக்கவும்.
அதே வாணலியில் அல்லது வேறு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றவும். சிக்கன் துண்டுகளை சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும். இப்படி வறுப்பது சிக்கன் வெந்த பின்னர் தனி சுவையை கொடுக்கும்.
அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு, இரண்டாவது தேங்காய் பால் சேர்க்கவும். (தேங்காய் பால் தயாரிக்கும் முறையை காணவும்)
மூடிவைத்து 10-12 நிமிடங்கள் அல்லது சிக்கன் வேகும் வரை வைக்கவும்.
ஊறவைத்த முந்திரியை கெட்டியான தேங்காய் பாலுடன் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதை சிக்கனுடன் சேர்க்கவும். அடுப்பை குறைத்து 5-7 நிமிடங்கள் வைக்கவும். குழம்பு கெட்டியாகி விடும்.
தாளிப்பதற்கு சிறிய வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடிக்கவிடவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். வர மிளகாய் கருவேப்பிலை சேர்த்து அட்ப்பை அணைக்கவும்.
தாளித்ததை குழம்பின் மேல் ஊற்றவும். பரிமாறும் வரை மூடிவைக்கவும். அதன் தனி மணம் கிடைக்கும். சுவையான சிக்கன் குழம்பு பரிமாற தயார்.