மலபார் பரோட்டா
பரோட்டா கேரளாவிலும், தமிழ் நாட்டிலும் மிகவும் சுவையான பிரபலமான உணவு. இது தெருவோர கடைகளிலும், பெரிய உணவு விடுதிகளிலும் விற்கப்படுகிறது. பரோட்டா மாஸ்ட்ர்களால் (பரோட்டா தயாரிப்பவர்களை இப்படி அழைப்பர்) இது தயாரிக்கும்போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அவர்கள் இதை மிக வேகமாகவும், துல்லியமாகவும் தயாரிப்பது வியப்பாக இருக்கும்.
பரோட்டா மைதாமாவில் தயாரிக்கப்படுகிறது. இந்த மாவு மிருதுவாகவும், கொழுப்பு சத்தும் சேர்ந்ததாகும். தெருவோர கடைகளில் வனஸ்பதி (டால்டா ) எனப்படும் கொழுப்பு பொருள் சேர்க்கப்படுகிறது. இது பரோட்டா மிருதுவாக இருக்க உதவுகிறது. ஆனால் இது உடல்நலத்திற்கு கெடுதலானது. நீங்கள் வீட்டில் ஆரோக்கியமான முறையில் வாசனை சேர்க்காத எண்ணெய் அல்லது நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து தயாரிக்கலாம். சிலர் முட்டை சேர்த்து தயாரிப்பார்கள். அதில் சிறிதளவு கொழுப்பு சேரும். மாவின் மேல் எண்ணெய் தடவி வைப்பார்கள். ஒவ்வொரு படிக்கும் (ஸ்டெப்) இடையில் நேரம்விட்டு தான் அடுத்த படி (ஸ்டெப்) செய்யவேண்டும். அப்பொழுதுதான் மிருதுவாகவும், மாவு வளைந்து கொடுத்து தயாரிக்க எளிதாக இருக்கும். இது மிக முக்கியமான ஸ்டெப் ஆகும், தவிர்க்கமுடியாததாகும். கடைகளில் மாவை மதியமே தயாரித்து மேலே எண்ணெய் தடவி எண்ணெய் தடவிய பாத்திரத்தில் மாலை வரை வைத்திருப்பார்கள். மாவின்மேல் எண்ணெய் சேர்த்து ஈரமான துணியால் மூடி வைப்பார்கள்.
ஒரு முறை மாவைபிசைந்து வைத்தபின்னர் சிறு உருண்டைகளாக்கி மீண்டும் சிறிது நேரம் வைப்பர். இதற்கு பின்னர் வீச்சு (கையால் மாவை வீசி மிருதுவாக்குதல்) தொடங்கும். இந்தமுறையில் மாவு கையால் இழுக்கப்பட்டு இதற்காக பிரத்தியேகமாக உள்ள பரோட்டா மேசையில் அடித்துபிசைவார்கள். இந்தமுறையில் மாவை மேசைமீது வீசி பிசைவதால் மாவு விரிந்துகொடுத்து பேப்பர் போல மெல்லியதாகும். இதன்மூலம் மேசைமீது அடித்துபிசைவதை பார்த்தால் தயாரிப்பு முறையை தெரிந்துகொள்ளலாம். இதற்கு சற்று பழக்கம் தேவை இதனால்தான் பரோட்டா மாஸ்டர் என்று பரோட்டா தயாரிப்பவர்களை அழைக்கிறார்கள். எனக்கும் இதை தயாரிப்பதில் அவ்வளவு பழக்கம் கிடையாது. எனது உதவியாள் ஒருவருக்கு ஓரளவு அதேமுறையில் தயாரிக்கதெரியும். என்னை போல புதிதாக தயாரிப்பவர்கள் சப்பாத்தி கட்டையை பயன்படுத்தலாம்.
ஒருமுறை மாவை மெல்லிய பேப்பர் போல இழுத்து பிசைந்தபின்னர் இரண்டு முறைகளில் பரோட்டா தயாரிக்கலாம். அதில் ஒருமுறை வீச்சு பரோட்டா. முக்கோணவடிவில் மடித்து தயாரிப்பதாகும். சில நேரங்களில் முட்டையை உடைத்து மாவின் மேல் ஊற்றி பின்னர் மடித்து தயாரித்தால் உள்ளே அடைத்து (ஸ்டஃப்) செய்வதுபோல இருக்கும். இதை மற்றொரு சமயத்தில் பகிர்ந்துகொள்கிறேன். இதில் உள்ள வேறுவகைகள் சுருள் பரோட்டா வட இந்தியாவில் தயாரிக்கப்படும் லச்சா பரோட்டா போன்று இருக்கும். இது இழுத்து பிசைந்த மாவை உருளைபோல செய்து தேய்த்தால் அடுக்கடுக்காக வரும். மீண்டும் மாவை சிறிது நேரம் வைத்து உருண்டையாக்கி தயாரிப்பார்கள்.
சற்று பொருங்கள், இத்துடன் இது முடியவில்லை. பரோட்டா தயாரித்த பின்னர் இன்னும் ஒரு ஸ்டெப் முக்கியமானது உள்ளது. எண்ணெய் தடவப்பட்ட மேசையின் மேல் பரோட்டாவை வைத்து அடிப்பதாகும். இறுதியாக மிருதுவான, மொறுமொறுப்பான, மிகவும் சுவையான பரோட்டாவை விருப்பமான சால்னா அல்லது குழம்புடன் உண்ண தயார். ஓருமுறை ஓரு துண்டு பரொட்டாவை சுவைத்தால் நீங்கள் எவ்வளவு நேரம் செலவழித்து இதை தயாரித்தோம் என்பதை மறந்துவிடுவீர்கள். எனவே தயாரித்து உண்டு மகிழுங்கள்.
பரோட்டா தயாரிக்க வீடியோ வழிமுறைகள்
மலபார் பரோட்டா செய்முறை
மலபார் பரோட்டா
Ingredients
- மைதா மாவு – 2 கின்ணம்
- உப்பு – ½ தேக்கரண்டி
- சர்க்கரை – 1 தேக்கரண்டி
- வெதுவெதுப்பான தண்ணீர் – ½ கிண்ணம்
- எண்ணெய் (அல்லது டால்டா அல்லது நெய்) - ½ கிண்ணம்
Instructions
- மைதா மாவு, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை நன்றாக கலந்து வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். (விருப்பட்டால் 1 முட்டை சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.)
- கையில் ஒட்டும் பதத்திற்கு மாவு இருக்கும்படி தளர பிசைந்து கொள்ளவும்.
- ஈரமான துணியால் மூடி 1 மணிநேரம் வைக்கவும். அதைவிட அதிகநேரம் வைத்திருந்தால் பரோட்டா இன்னும் மிருதுவாக இருக்கும்.
- எண்ணெய் தடவிய மேசையின் மேல் மாவை வைத்து கையை மடக்கிகுத்தி (பன்ச் செய்து) பிசையவும். 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். பிசையும்போது சிறிது சிறிதாக ¼ கிண்ணம் முழுவதையும் சேர்த்து பிசையவும்.
- தொடர்ச்சியாக 10-15 நிமிடங்கள் மாவு மிருதுவாகவும், எளிதாக இழுத்து பிசையவும் வரும் வரை பிசையவும். கிரைண்டர் அல்லது மிக்ஸியில் மாவு பிசைவதற்கு கொடுத்துள்ளதை கொண்டும் நீங்கள் பிசைந்துகொள்ளலாம்.
- ஒருமுறை மாவு மிருதுவான பின்னர் மாவை கோல்ஃப் பந்து அளவிற்கு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இதில் 5-6 உருண்டைகள் வரும். உருண்டையின் மேல் எண்ணெய் தடவி மேசையின் மேல் மேலும் 10 நிமிடங்கள் ஈரத்துணியால் மூடிவைக்கவும்.
- ஒரு உருண்டையை எடுத்து எவ்வளவு மெல்லியதாக தேய்க்கமுடியுமோ அவ்வளவு மெல்லியதாக தேய்த்துகொள்ளவும். பரோட்டா மாஸ்டர்கள் பரோட்டா செய்யும் மேசையின் மீது அடித்து பரத்திகொள்வார்கள். அனுபவம் குறைவாக உள்ளவர்கள் சப்பாத்திகட்டையில் உருட்டிகொள்வார்கள். மாவு தேய்க்கும்போது சுருண்டுவரும். தேய்க்கும்போது எண்ணெய் தடவி தேய்க்கவும். மாவை உபயோகிக்ககூடாது. மெல்லிய கைகுட்டை போல வரும்வரை தேய்க்கவும். தேய்த்து முடித்தவுடன் தேய்க்கும் பலகை மாவின் வழியாக பார்த்தால் தெரியும். வடிவம் முக்கியமில்லை.
- தேய்த்த மாவின் மேல் முழுவதும் எண்ணெய் தடவவும். ஒரு ஓரத்தில் ஆரம்பித்து விசிறி மடிப்பு போல அல்லது புடவை மடிப்பு போல மடிக்கவும்.
- மாவை இரண்டு கைகளாலும் பிடித்து தேய்க்கும் மேசையின்மீது வைக்கவும். இது மாவை நீளவாக்கில் இழுக்க வஸ்தியாக இருக்கும்.
- இரண்டு முனைகளில் இருந்து சுற்றிகொண்டு வரவும். இரண்டும் நடுவில் சேரும்போது ஒன்றின் அடியில் மற்றொன்றை வைத்து சுருள் போல செய்யவும்.
- இதேமுறையில் மீதமுள்ள மாவை செய்து ஈரத்துணியில் மூடி 10 நிமிடங்கள் வைக்கவும்.
- இதன் பின்னர் பரோட்டா செய்ய ஒருகல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
- சுருளாக செய்துவைத்த மாவில் ஒன்றை எடுத்து எண்ணெய் தடவி மீண்டும் தேய்க்கவும். இம்முறை 4-5 இஞ்ச் அகலத்திற்கு தேக்கவும். சிலர் கைகளால் தேய்த்துவிடுவார்கள்.
- தேய்த்ததை கல்லில் போட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மாவின் மீது பிரவுன் புள்ளிகள் இருபுறமும் வரும்வரை வேகவைக்கவும். இதேமுறையில் மற்றவற்றையும் சுட்டு எடுக்கவும்.
- 2-3 பரோட்டாக்கள் செய்தபிறகு ஒன்றின்மேல் ஒன்றாகவைத்து இரண்டு கைகளாலும் கை தட்டுவதுபோல சேர்த்து தட்டவும். (சூடாக இருக்கும்போது). இதுபரோட்டா நசுங்கி அடுக்கடுக்காய் பிரிந்து வரும்.
- சூடாக உடனே பரிமாறவும். அல்லது ஹாட்பாக்ஸில் போட்டுவைக்கவும்.
பரோட்டா பரிமாற பரிந்துரைப்பது
- சைவப்பிரியகள் பரோட்டாவை வெஜிடபிள் குருமா, உருளைகிழங்கு குருமா மற்றும் பன்னீர் பட்டர் மசாலாவுடன் பரிமாறலாம்.
- அசைவப்பிரியர்கள் சூடான சிக்கன் குருமா, சால்னா, மட்டன் குழம்பு, காரமான சிக்கன் குழம்பு அல்லது சிக்கன் கிரேவியுடன் பரிமாறலாம்.
குறிப்பு
- மீதமுள்ள பரோட்டாவில் நீங்கள் கொத்து பரோட்டா அல்லது சில்லி பரோட்டா தயாரிக்கலாம்.