கேரளா நாட்டு கோழி குழம்பு

கேரளா நாட்டு கோழி குழம்பு

கேரள முறையில் தயாரிக்கும் நாட்டு கோழி குழம்பு தென்னிந்தியாவில் மிகவும் பிரசித்தம். இது மிகவும் வாசனையான காரமான குழம்பு வகையாகும். தேங்காய் துண்டுகள், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து செய்வதாகும். இதே முறையில் நான் ஏற்கனவே தேங்காய் பால் சேர்த்த சிக்கன் குழம்பு, வறுத்த தேங்காய் சேர்த்த சிக்கன் குழம்பு ஆகியவற்றை பகிர்ந்துள்ளேன். இருப்பினும் இந்த எளிய வகை குழம்பு சில பொருட்களை கொண்டு தயாரிப்பதால் திருமணமாகாத இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எதுவும் அரைக்க தேவையில்லை.

கேரளா நாட்டு கோழி குழம்பு செய்முறை

கேரளா நாட்டு கோழி குழம்பு

Course: Side Dish
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • நாட்டு கோழி கறி – 1 கிலோ (நடுத்தர துண்டுகளாக நறுக்கியது)
  • வெங்காயம் – 6 (நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக்கியது)
  • இஞ்சி – 2 அங்குலம் (தட்டியது)
  • பூண்டு – 1 முழுபூண்டு (தட்டியது)
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • வெந்தயம் – 1/8 தேக்கரண்டி
  • வர மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டி
  • கொத்தமல்லி தூள் – 2 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • பொடித்த கரம் மசாலா தூள் – 1 பட்டை 2 கிராம்பு, 2 ஏலக்காய், 1 தேக்கரண்டி சோம்பு, 1/ 2 தேக்கரண்டி மிளகு) அல்லது கடைகளில் கிடைக்கும் சிக்கன் மசாலா
  • கருவேப்பிலை – 2 கொத்து
  • தேங்காய் துண்டுகள் – 2-3 மேசைக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவைக்கேற்ப

Instructions

  • அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெடிக்கவிடவும்.
  • அடுப்பை குறைத்து வெந்தயம் சேர்த்து சிறிது நேரம் விடவும்.
  • இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, பொடித்த மசாலா பொடி சேர்க்கவும். இறுதியில் சேர்க்க மசாலா பொடி சிறிதளவு வைக்கவும்.
  • அரை நிமிடம் வதக்கவும்.
  • நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு சேர்த்தால் வெங்காயம் விரைவாக வதங்கிவிடும்.
  • மிதமான தீயில் வைத்து 10- 15 நிமிடங்கள் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், வர மிளகாய் தூள் சேர்க்கவும். நன்றாக கலந்து மசாலா வாசம் வரும்வரை சில நொடிகள் விடவும்.
  • சிக்கன் சேர்த்து மசாலாவுடன் நன்றாக கலக்கும்வரை கிளறவும்.
  • மூடிவைத்து அதில்விடும் தண்ணீரிலேயே 5 நிமிடங்கள் வேகவிடவும்.
  • தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடிவைத்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  • நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து அடுப்பை குறைத்து மூடிவைத்து மேலும் 10 நிமிடங்கள் எண்ணெய் மேலே பிரிந்து வரும்வரை வைக்கவும்.
  • இறுதியாக மீதமுள்ள பொடித்த மசாலா பொடி சேர்த்து கருவேப்பிலை சேர்க்கவும்.
  • அடுப்பை அணைத்து பரிமாறும் வரை மூடி வைக்கவும்.

கேரளா கோழி குழம்பு பரிமாற பரிந்துரைப்பது

சுலபமான, மணமான, சுவையான கேரளா முறையில் தயாரித்த சிக்கன் குழம்பை நெய் சாதம், தேங்காய் சாதம், வெள்ளை சாதம், பத்ரி அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.