தேங்காய் சாதம்

தேங்காய் சாதம்

தேங்காய் சாதம் தென்னிந்திய சமையலில் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு கலவை சாதம் ஆகும். இதில் மற்றொரு முறை ‘தாய் தேங்காய் சாதம்’. இதை மற்றொரு சமயம் பார்ப்போம். தேங்காயை துருவி வறுத்து கொள்ளவும். அதிக அளவு தேங்காய் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும். மதிய உணவிற்கு ஏற்றது. திடீரென வரும் விருந்தினருக்கு ஏற்றது.

தேங்காய் சாதம் செய்முறை

தேங்காய் சாதம்

Course: Main Course
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • வடித்த சாதம் - 1 கிண்ணம்
  • துருவிய தேங்காய் - 3/4 கிண்ணம்

தாளிக்க தேவையான பொருட்கள்

  • எண்ணெய் (தேங்காய் எண்ணெய்) - 1 மேசைக்கரண்டி
  • கடுகு - 1 தேக்கரண்டி
  • கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
  • முந்திரி - 6-8
  • வர மிளகாய் - 2
  • பச்சை மிளகாய் - 2 (தேவைப்பட்டால்)
  • கருவேப்பிலை - 1 கொத்து
  • பெருங்காயம் - 1 சிட்டிகை

Instructions

  • சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி கடுகு வெடிக்கவிடவும்.
  • கடலைப் பருப்பு , உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  • வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
  • துறுவிய தேங்காய் துருவலை சேர்த்து லேசாக சிகப்பாக மாறும் வரை வறுக்கவும். முழுவதுமாக சிவந்து விடாமல் வறுத்துக் கொள்ளவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து வடித்த சாதத்தை சேர்த்து எல்லா பொருட்களும் நன்றாக கலக்கும் வரை கிளறி விடவும். அடுப்பை அணைக்கவும். இப்போது தேங்காய் சாதம் பரிமாற தயார்.

பரிமாற பரிந்துரைப்பது

  • சுவையான தேங்காய் சாதத்தை ஊறுகாய், அப்பளம், சிப்ஸுடன் பரிமாறலாம்.
  • சாதத்திற்கு பதில் அரிசி சேவை, ராகி சேவை, சேமியா, சேர்த்து தேங்காய் சேவை தயாரிக்கலாம்.

தேங்காய் சாதம்



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.