ஆரஞ்சு சிக்கன் (ஆரஞ்சு கோழி குழம்பு)
ஆரஞ்சு கோழி குழம்பு என்பது கோழி குழம்பு செய்முறைகளில் சற்று மாறுபட்டது. இதன் செய்முறை மற்றும் சுவையில் அனைவரும் மிகவும் விரும்பும்விதத்தில் இருக்கும். ஆரஞ்சு பழச்சாறு சேர்ப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ஒரே முறையில் சமைப்பதைவிட ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் சுவையை மாற்றி செய்து கொடுத்தால் குடும்பத்தினரை மகிழ்விக்கலாம். எனது குழந்தைகள் ஆரஞ்சு பழத்தை அதிகம் விரும்புவார்கள். அதனால் ஆரஞ்சு பழத்தை பயன்படுத்தி ஏதேனும் செய்யலாம் என முயற்சித்த போது நான் தயாரித்தில் சுவையானது இந்த ஆரஞ்சு சிக்கன். நீங்களும் முயற்சித்து பாருங்கள். இப்போது ஆரஞ்சு சிக்கன் செய்முறையை காண்போம்.
ஆரஞ்சு கோழி குழம்பு தயாரிப்பு முறை
ஆரஞ்சு கோழி குழம்பு
Servings: 4 People
Ingredients
- கோழி நெஞ்சு கறி – 1/2 கிலோ (2 பெரிய நெஞ்சு பகுதி கறி)
- முட்டை – 1
- உப்பு – 1/2 தேக்கரண்டி
- மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
- சோள மாவு – 2 + 1 தேக்கரண்டி
- தண்ணீர் – 1/4 கிண்ணம்
- பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
- வர மிளகாய் – 4 (விதை நீக்கி கிள்ளி வைக்கவும்)
- எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
சாஸ் கலவை செய்ய தேவையான பொருட்கள்
- ஆரஞ்சு சாறு – 1.5 கிண்ணம் (பிழிந்த்து)
- இஞ்சி – 1/2 தேக்கரண்டி
- பூண்டு – 1 பல் (துருவியது)
- நாட்டு சர்க்கரை – 4 மேசைக்கரண்டி
- சோயா சாஸ் – 2 மேசைக்கரண்டி
- பூண்டு மிளகாய் சாஸ் – 1 மேசைக்கரண்டி
- நல்லெண்ணெய் – 1 மேசைக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
Instructions
- கோழி கறியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- கோழி கறியுடன் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும்
- முட்டை மற்றும் சோள மாவு சேர்த்து சிக்கனுடன் கலக்கவும்.
- கோழி கறி துண்டுகளை பிரவுன் கலர் வருமளவு எண்ணெயில் பொரிக்கவும். அதிகப்படியான எண்ணெயை வடித்துவிடவும்.
- சாஸ் கலவையில் கொடுத்துள்ள அனைத்தையும் கலந்து கொள்ளவும்.
- சாஸ் கலவையை ஒரு வாணலியில் ஊற்றி ஒரு கொதி கொதிக்கவிடவும்.
- 1 மேசைக்கரண்டி சோள மாவை தண்ணீரில் கரைக்கவும். இந்த கரைசலை கொதிக்கும் சாஸில் மெதுவாக சேர்த்து கைவிடாமல் கிளறவும். சாஸ் கெட்டியாகும்.
- கோழி கறி துண்டுகள், வர மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சாஸுடன் சேர்க்கவும்.
- அடுப்பை குறைத்து சில நிமிடங்களில் இறக்கிவிடவும். ஆரஞ்சு தோல், நீளவாக்கில் அல்லது வட்டவடிவமாக வெட்டிய வெங்காயம் கொண்டு அலங்கரிக்கவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- சூடான ஆரஞ்சு கோழி குழம்புபை சாதத்துடன் பரிமாறவும்.