வெந்தய கீரை கோழி குழம்பு (மேத்தி சிக்கன்)
வெந்தய கீரை கோழி குழம்பு தயார் செய்வது வெகு சுலபம். வெந்தய கீரை இலைகளுடன் செய்யப்படும் இந்த கோழிக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்.
வெந்தய கீரை கோழி குழம்பு செய்முறை
வெந்தய கீரை கோழி குழம்பு (மேத்தி சிக்கன்)
Ingredients
- கோழி கறி – 1/2 கிலோ (கடிக்கும் அளவில் வெட்டப்பட வேண்டும்)
- வெந்தய கீரை – 1 கட்டு (2 கப் அளவு)
- வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
- தக்காளி (கூழ்) – 2
- தயிர் – 2 மேசைக்கரண்டி (சிலுப்பியது)
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
- தனியா தூள் – 2 தேக்கரண்டி
- சீரக தூள் – 1/2 தேக்கரண்டி
- சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- சோம்பு – 1/2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
Instructions
- கனமான அடிப்பாகம் உள்ள வாணலில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், சீரகம், சோம்பு தாளிக்கவும்.
- பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும், பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- கோழி கறி, சிலுப்பிய தயிர், உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
- எல்லா தூள்களையும் சேர்க்கவும் (தனியா, சீரகம், மிளகாய், மஞ்சள் and சோம்பு தூள்கள்).
- தக்காளி கூழ் மற்றும் தேவையான தண்ணீர் சேர்க்கவும். வறுவல் போல் வேண்டுமானால் தண்ணீர் குறைவாக சேர்க்கவும் .
- பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும்.
- இறுதியாக வெந்தய கீரை, கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
- ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். சுவையான மேத்தி சிக்கன் தயார்.
பரிமாற பரிந்துரைப்பது
- சூடான மேத்தி சிக்கனை ரொட்டி, புலாவ், இட்லி அல்லது சாதத்துடன் பரிமாறலாம்.
வேறுபாடுகளாக பரிந்துரைப்பது
- வேறு கறி வகைகளில் செய்யலாம் (ஆட்டு கறி மேத்தி, வாங்கோழி மேத்தி செய்யலாம்).
- வேறு கீரை வகைகளில் செய்யலாம் (கீரை சிக்கன், புளித்த கீரை சிக்கன்).