மைதா மாவு, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை நன்றாக கலந்து வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். (விருப்பட்டால் 1 முட்டை சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.)
கையில் ஒட்டும் பதத்திற்கு மாவு இருக்கும்படி தளர பிசைந்து கொள்ளவும்.
ஈரமான துணியால் மூடி 1 மணிநேரம் வைக்கவும். அதைவிட அதிகநேரம் வைத்திருந்தால் பரோட்டா இன்னும் மிருதுவாக இருக்கும்.
எண்ணெய் தடவிய மேசையின் மேல் மாவை வைத்து கையை மடக்கிகுத்தி (பன்ச் செய்து) பிசையவும். 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். பிசையும்போது சிறிது சிறிதாக ¼ கிண்ணம் முழுவதையும் சேர்த்து பிசையவும்.
தொடர்ச்சியாக 10-15 நிமிடங்கள் மாவு மிருதுவாகவும், எளிதாக இழுத்து பிசையவும் வரும் வரை பிசையவும். கிரைண்டர் அல்லது மிக்ஸியில் மாவு பிசைவதற்கு கொடுத்துள்ளதை கொண்டும் நீங்கள் பிசைந்துகொள்ளலாம்.
ஒருமுறை மாவு மிருதுவான பின்னர் மாவை கோல்ஃப் பந்து அளவிற்கு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இதில் 5-6 உருண்டைகள் வரும். உருண்டையின் மேல் எண்ணெய் தடவி மேசையின் மேல் மேலும் 10 நிமிடங்கள் ஈரத்துணியால் மூடிவைக்கவும்.
ஒரு உருண்டையை எடுத்து எவ்வளவு மெல்லியதாக தேய்க்கமுடியுமோ அவ்வளவு மெல்லியதாக தேய்த்துகொள்ளவும். பரோட்டா மாஸ்டர்கள் பரோட்டா செய்யும் மேசையின் மீது அடித்து பரத்திகொள்வார்கள். அனுபவம் குறைவாக உள்ளவர்கள் சப்பாத்திகட்டையில் உருட்டிகொள்வார்கள். மாவு தேய்க்கும்போது சுருண்டுவரும். தேய்க்கும்போது எண்ணெய் தடவி தேய்க்கவும். மாவை உபயோகிக்ககூடாது. மெல்லிய கைகுட்டை போல வரும்வரை தேய்க்கவும். தேய்த்து முடித்தவுடன் தேய்க்கும் பலகை மாவின் வழியாக பார்த்தால் தெரியும். வடிவம் முக்கியமில்லை.
தேய்த்த மாவின் மேல் முழுவதும் எண்ணெய் தடவவும். ஒரு ஓரத்தில் ஆரம்பித்து விசிறி மடிப்பு போல அல்லது புடவை மடிப்பு போல மடிக்கவும்.
மாவை இரண்டு கைகளாலும் பிடித்து தேய்க்கும் மேசையின்மீது வைக்கவும். இது மாவை நீளவாக்கில் இழுக்க வஸ்தியாக இருக்கும்.
இரண்டு முனைகளில் இருந்து சுற்றிகொண்டு வரவும். இரண்டும் நடுவில் சேரும்போது ஒன்றின் அடியில் மற்றொன்றை வைத்து சுருள் போல செய்யவும்.
இதேமுறையில் மீதமுள்ள மாவை செய்து ஈரத்துணியில் மூடி 10 நிமிடங்கள் வைக்கவும்.
இதன் பின்னர் பரோட்டா செய்ய ஒருகல்லை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கவும்.
சுருளாக செய்துவைத்த மாவில் ஒன்றை எடுத்து எண்ணெய் தடவி மீண்டும் தேய்க்கவும். இம்முறை 4-5 இஞ்ச் அகலத்திற்கு தேக்கவும். சிலர் கைகளால் தேய்த்துவிடுவார்கள்.
தேய்த்ததை கல்லில் போட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மாவின் மீது பிரவுன் புள்ளிகள் இருபுறமும் வரும்வரை வேகவைக்கவும். இதேமுறையில் மற்றவற்றையும் சுட்டு எடுக்கவும்.
2-3 பரோட்டாக்கள் செய்தபிறகு ஒன்றின்மேல் ஒன்றாகவைத்து இரண்டு கைகளாலும் கை தட்டுவதுபோல சேர்த்து தட்டவும். (சூடாக இருக்கும்போது). இதுபரோட்டா நசுங்கி அடுக்கடுக்காய் பிரிந்து வரும்.
சூடாக உடனே பரிமாறவும். அல்லது ஹாட்பாக்ஸில் போட்டுவைக்கவும்.