காலிஃபளவர் குருமா
தென்னிந்தியாவில், சப்பாத்தியை குருமாவுடன் உண்பதை தமிழ் நாட்டில் மிகவும் விரும்புவார்கள். வட இந்தியாவில் வித்தியாசமான சப்ஜி, பருப்பு வகைகள், குழம்பு வகைகள் அதிகமாக சமைப்பார்கள். தமிழ் நாட்டில் உள்ள மக்கள் சப்பாத்தியை குருமாவில் ஊறவைத்து உண்பதை விரும்புவார்கள்.
தென்னிந்திய குருமா மொகலாயர்கள் கொர்மா சுவையிலிருந்து சற்று மாறுபட்டது. மற்ற குருமா வகைகள் தினசரி வழக்கமாக செய்யப்படும் உருளைகிழங்கு குருமா, முட்டை குருமா, பச்சை பட்டாணி குருமா, தக்காளி குருமா, சுரைக்காய் குருமா, சோயா குருமா போன்றவை ஆகும். காலிஃபளவர் குருமா குளிர் காலத்தில் அடிக்கடி செய்யப்படுவது ஆகும். சீசன் நேரமாக இருப்பதால் அதிகமாகவும் விலையும் குறைவாகவும் கிடைக்கும்.
எனது வீட்டினர் காலிஃபளவர் விரும்புவதால் அடிக்கடி சமையலில் சேர்த்துகொள்வேன். குழந்தைகள் காலிஃபளவர் குருமாவின் சுவையை விரும்புவதால் இதை சப்பாத்தியுடன் மட்டுமில்லாமல் இட்லி, தோசை, சாதம், பரோட்டா, ஆப்பம் அனைத்துடனும் பரிமாறலாம். ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் சமைப்பார்கள். இது நான் சமைக்கும் முறை. நீங்களும் சமைத்து பார்த்து உங்களின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
காலிஃபளவர் குருமா செய்முறை
காலிஃபளவர் குருமா
Ingredients
- காலிஃபளவர் – 1 பூ (சிறிய பூக்களாக நறுக்கியது)
- வெங்காயம் – 1 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் நறுக்கியது)
- தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் – 1 மேசைக்கரண்டி
- வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
- கரம் மசாலா – பட்டை- 1, கிராம்பு – 2, அன்னாசி பூ-1, ஏலக்காய் - 2, பிரியாணி இலை – 1
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- கருவேப்பிலை – 5
- கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
அரைக்க தேவையானவை
- துருவிய தேங்காய் - 1 கிண்ணம்
- சோம்பு – ½ தேக்கரண்டி
- கசகசா – 1 தேக்கரண்டி (அல்லது 5-6 முந்திரி)
Instructions
- காலிஃபளவர் பூவை தனித்தனி பூக்களாக நறுக்கி கொதிக்கவைத்த தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா அனைத்தையும் சேர்த்து கருவேப்பிலை தாளிக்கவும்.
- வெங்காயம் சேர்த்து வதக்கி பச்சை மிளகாயுடன் வதக்கவும். கோல்டன் பிரவுன் நிறம் வரும்வரை வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும். குருமா போன்ற அளவில் குழம்பு தேவையெனில் தக்காளியை அரைத்து சேர்க்கவும்.
- வர மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- காலிஃபளவர் துண்டுகளை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
- 1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து மூடிவைத்து 5-7 நிமிடங்கள் வேகவிடவும். கிரேவி அதிகம் தேவையெனில் தண்ணீர் அதிகமாக சேர்க்கவும்.
- துருவிய தேங்காயுடன் சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துகொள்ளவும். அரைத்தவிழுதை காய்கலவையுடன் சேர்க்கவும்.
- அடுப்பை குறைத்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையால் அலங்கரிக்கவும். சுவையான காலிஃபளவர் குருமா தயார்.
வேறுவிதமாக பரிந்துரைப்பது
- தேங்காய் அரைத்து சேர்ப்பதற்கு பதிலாக சில நேரங்களில் நான் தேங்காய் பால் சேர்க்கலாம். அப்போது கசகசாவும், சோம்பும் சேர்க்க தேவையில்லை. இந்த முறையில் தயாரிக்கும் குருமாவும் சுவையாக இருக்கும்.
- காலிஃபளவருடன் வேறு காய்களையும் சேர்த்து செய்யலாம். நான் காலிஃபளவர் உருளைகிழங்கு அல்லது காலிஃபளவர் பச்சை பட்டாணி குருமா தயாரிப்பதை வரும்புவேன்.
பரிமாற பரிந்துரைப்பது
- சப்பாத்தி, ஆப்பம், இட்லி, தோசை, கேரளா பரோட்டா இவற்றுடனும் ராகி சப்பாத்தியுடனும் பரிமாறலாம்.