பூசணிக்காய் பரோட்டா

பூசணிக்காய் பரோட்டா

பரோட்டா மற்றும் ரொட்டி வகைகள் வட இந்தியர்களின் வீடுகளில் பிரதான உணவாகும். தற்போது சில வருடங்களாக தென்னிந்தியர்கள் ரொட்டி வகைகளை இரவு நேரங்களில் உண்ண துவங்கியுள்ளனர். இரவு உணவுக்கு நிறைய ரொட்டி வகைகள் உள்ளன. இதில் வேறுபாடாக சத்துள்ளதாக செய்ய நான் ரொட்டியுடன் காய்கறிகள் சேர்த்துகொள்வேன். துருவிய காய்கறிகள் (அல்லது அரைத்து), காரம், மசாலா சேர்த்து செய்வதை வட இந்தியர்கள் பரோட்டா என்பார்கள். காய்கறிகளை மாவினுல் வைத்து தேய்த்து செய்வார்கள். இம்முறையில் செய்ய சற்று பழக்கம் வேண்டும். இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வது சமைக்க தொடங்குபவர்களும் எளிய முறையில் செய்யும் முறையாகும்.

இன்றைய சமையல் பூசணிக்காய் (பரங்கிக்காய்) பரோட்டா, இதை கட்டு கா பரோட்டா என்பார்கள். பூசணிக்காய் விழுது கோதுமை மாவு சேர்த்து செய்வதாகும். பூசணிக்காய் விழுது சுவைக்காக மட்டுமில்லாமல் ரொட்டி மிருதுவாக இருக்கவும் உதவுகிறது. பூசணிக்காயை விரும்பாத குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உண்ண வைக்க சுலபமான வழி இதுவாகும். நாம் இதே முறையில் நீர்சத்துள்ள காய்களான சுரக்காய், சுச்சினி போன்றவற்றை தயாரிக்கலாம். பூசணிக்காய் பரோட்டா சுவையானது அதனுடன் ஊறுகாய், காரம் சேர்த்த தயிருடன் உண்ணும் போது இன்னும் சுவைகூடுதலாகும். செய்முறையை காண்போம்.

பூசணிக்காய் பரோட்டா

Prep Time15 minutes
Cook Time30 minutes
Total Time45 minutes
Course: Main Course
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • பூசணிக்காய் விழுது (அரைத்தது) - 1 கிண்ணம்
  • கோதுமை மாவு – 1.5 கிண்ணம்
  • வர மிளகாய் தூள்- 1/ 2 தேக்கரண்டி
  • சீரகத்தூள் – 1/ 4 தேக்கரண்டி
  • ஓமம் – 1/ 4 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் – 1/ 4 தேக்கரண்டி
  • கொத்தமல்லி தழை – 1/ 4 கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
  • உப்பு – 1 தேக்கரண்டி
  • தண்ணீர் – 1 கிண்ணம்
  • எண்ணெய் அல்லது நெய் – பரோட்டா பொரிக்க தேவையான அளவு

Instructions

  • பூசணிக்காயின் தோலை சீவி விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும். நான் இந்தியாவில் கிடைக்கும் மஞ்சள் பூசணி (பரங்கிக்காய்) எடுத்துள்ளேன்.
  • ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  • ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துகொள்ளவும்.
  • ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த பூசணி விழுது, உப்பு, வர மிளகாய் தூள், சீரகத்தூள், ஓமம், கரம் மசாலா தூள் அனைத்தையும் போடவும்.
  • எல்லாவற்றையும் நன்றாக கலந்து கெட்டியான மாவாக பிசைந்துகொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துகொள்ளவும்.
  • பிசைந்த மாவை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக தேய்க்கவும். கல்லில் ஒட்டாமல் வர உலர்ந்த மாவை சேர்த்து தேய்க்கவும்.
  • தோசைகல்லை சூடாக்கி தேய்த்த பரோட்டாவை மெதுவாக கல்லில் வைத்து மிதமான தீயில் வேகவிடவும்.
  • சில நிமிடங்களில் ஒவ்வொரு இடத்தில் உப்பி வரும், அப்பொழுது மறுபக்கம் திருப்பி விடவும். பிரவுன் நிற புள்ளிகள் வரும்வரை வேகவிடவும்.
  • எண்ணெய் அல்லது நெய் பரோட்டாவின் மேலே தடவவும். திருப்பிவிட்டு மறுபக்கமும் அதேபோல நெய் தடவவும்.
  • பரோட்டாவை எடுத்து பரிமாறும் வரை ஹாட் பாக்ஸில் வைக்கவும்.

பூசணிக்காய் பரோட்டா தயாரிக்க விரிவான படிமுறைகள்

பூசணிக்காயை (பரங்கிக்காய்) தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.

பூசணிக்காய் பரோட்டா செய்முறை

ஆற வைத்து அரைத்துகொள்ளவும். (தண்ணீரை வடித்துவிட்டு)

பூசணிக்காய் பரோட்டா செய்முறை

ஓரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த பூசணி விழுது, உப்பு, வர மிளகாய் தூள், சீரகத்தூள், ஓமம், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பூசணிக்காய் பரோட்டா செய்முறை

நன்றாக கலந்து கெட்டியான மாவாக பிசையவும். 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

பூசணிக்காய் பரோட்டா செய்முறை

ஓரு சிறிய உருண்டை எடுத்து வட்டமாக சப்பாத்தி போல தேய்க்கவும். தேய்க்க உலர்ந்த மாவை சேர்த்துகொள்ளவும்.

பூசணிக்காய் பரோட்டா செய்முறை

தோசைகல்லை சூடாக்கி தேய்த்த பரோட்டாவை மெதுவாக கல்லில் போட்டு மிதமான தீயில் வேகவிடவும்.

பூசணிக்காய் பரோட்டா செய்முறை

சில நிமிடங்களில் உப்பி வரும். திருப்பிவிட்டு பிரவுன் நிறம் மாறும் வரை வேகவிடவும்.

பூசணிக்காய் பரோட்டா செய்முறை

எண்ணெய் அல்லது நெய் தடவவும். திருப்பிவிட்டு மறுபுறமும் நெய் தடவவும்.

பூசணிக்காய் பரோட்டா செய்முறை

பரோட்டாவை கல்லில் இருந்து எடுத்து ஹாட் பாக்ஸில் வைக்கவும்.

பூசணிக்காய் பரோட்டா பரிமாற பரிந்துரைப்பது

  • பூசணிக்காய் ப்ரோட்டாவை ஊறுகாய் அல்லது காரக் சேர்த்த தயிர் மற்றும் ஏதேனும் ஓரு கிரேவியுடன் பரிமாறலாம்.

பூசணிக்காய் பரோட்டா



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.