மரவள்ளிகிழங்கு தயாரிக்கும் முறை

மரவள்ளிகிழங்கு தயாரிக்கும் முறை

கப்பை கிழங்கு அல்லது மரவள்ளி கிழங்கு, மாவு சத்துள்ள நிலத்தடியில் வளரும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கிழங்கு வகையாகும். இது அடர் பிரவுன் வண்ண தோலும் உள்ளே வெண்மையான நிறத்துடன் கிழங்கும் இருக்கும். எனது மாமா கப்பை கிழங்கில் இரண்டு வகைகள் உள்ளது என்று சொல்வார். ஒன்று கசப்பான சுவையுடனும், மற்றொன்று லேசான இனிப்பு சுவையுடனும் இருக்கும் என்று கூறியுள்ளார். கசப்பு சுவையில் உள்ளது நச்சுத்தன்மை உள்ளது. அவரது கிராமத்தில் இதை தவறுதலாக உண்ணும் மாடுகள் இறந்துவிடும் என்றும் கூறியுள்ளார். தற்போது பல்பொருள் அங்காடிகளில் உட்கொள்ள தகுந்த கிழங்கு வகைகள் மட்டுமே விற்கபடுகிறன.

இது பல வகைகளில் சமைக்கப்படுகிறது. பேக்கிங் செய்வது, வேக வைப்பது, ஆவியில் வேகவைப்பது, வறுப்பது என்று பல வகையாக சமைக்கலாம். மிருதுவாகவும் வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இந்தியாவில் இதை காரமான குழம்பு வகைகளுடனும் அல்லது காரமான அடை, பிரியாணி தயாரிக்கவும் பயன்படுத்தபடுகிறது. இதை இனிப்புகள் தயாரிக்க உதாரணமாக பாயசம், புட்டு செய்யவும் பயன்படுத்துவர்.

மரவள்ளிகிழங்கு சுத்தம் செய்வது சற்று நேரம் எடுத்து செய்யும் வேலையாகும்.தற்போது பதப்படுத்தி சுத்தம் செய்து நறுக்கிய கிழங்கு கிடைக்கிறது. மரவள்ளிகிழங்கு உலரவைத்ததும் கிடைக்கிறது. நீங்கள் நன்றாக சமைப்பவராக இருந்தால் புதிய கிழங்கிற்குள்ள சுவையை அறிந்திருப்பீர்கள். நான் வழக்கமாக புதியகிழங்கையே வாங்கி உபயோகிப்பேன். எனது குறிப்புகளை பார்த்து புதிதாக சமைப்பவர்களுக்காக நான் விரிவாக எப்படி மரவள்ளிகிழங்கை நறுக்கி சமைப்பது என்பதை பகிர்ந்துள்ளேன்.

மரவள்ளிகிழங்கு வேகவைக்கும் வீடியோ வழிமுறைகள்

மரவள்ளிகிழங்கை தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி?

நீங்கள் மரவள்ளிகிழங்கு வாங்கும்போது முதலில் கிழங்கை சுற்றிலும் வேர் ஏதாவது உள்ளதா என்று பார்க்கவேண்டும். மரவல்ளிகிழங்கின் மேல் தோல் மிகவும் இறுக்கமாக இருக்க வேண்டும். கிழங்கை நடுவில் இரண்டாக வெட்ட வேண்டும். அப்போதுதான் உள்ளே எப்படி உள்ளது என்பதை பார்க்கமுடியும். உள்ளே முழுவதும் வெள்ளையாக இருந்தால் புதியது என்றும், ஏதாவது கோடுகள் தெரிந்தால் பழைய கிழங்கு என்றும் தெரிந்துகொள்ளலாம். பழைய கிழங்கு வேகவைத்தால் கெட்டியாக இருக்கும். புதிய கிழங்கு வெண்ணெய்போல மிருதுவாக இருக்கும்.

கப்பைகிழங்கு (அல்லது) மரவள்ளிகிழங்கு செய்முறை

மரவள்ளிகிழங்கு தயாரிக்கும்முறை

Course: Snack
Cuisine: Indian
Author: டாலியா டுவிங்கிள்

Ingredients

  • கப்பைகிழங்கு (அல்லது) மரவள்ளிகிழங்கு

Instructions

கப்பைகிழங்கு (அல்லது) மரவள்ளிகிழங்கு செய்முறை

  • கிழங்கின் இரண்டு முனைகளையும் வெட்டவும். 2-3 அங்குல துண்டுகளாக நீளவாக்கில் வெட்டிகொள்ளவும். இது சுலபமாக தோல் நீக்க உதவும்.
  • ஒவ்வொரு துண்டிலும் உள்ள தோலை நீக்கவும். மரவள்ளிகிழங்கு மேலே மெல்லிய பிரவுன் கலர் தோலும் அடுத்து லைட் ரோஸ் கலரில் கெட்டியான தோலும் இருக்கும். இந்த இரண்டு தோலையும் நீக்கிய பின்னர் வெள்ளையான கிழங்கு இருக்கும். எனது பாட்டி தோலின் மேலே லேசாக கீறி கத்தியால் தோலை நீக்கிவிடுவார்கள். மரவள்ளிகிழங்கு புதியதாக இருந்தால் தோல் எளிதில் கிழங்கில் இருந்து நீக்கவரும்.
  • இன்னொரு முறையில் கிழங்கை காய்கறி நறுக்கும் பலகையில் நேராக வைத்து கூரான கத்தியால் தோலை நீக்கலாம்.
  • தோலை உரித்தபின்னர் கிழங்கை 4-5 அங்குல துண்டுகளாக வெட்டிகொள்ளவும். வெட்டும்போது நடுவில் உள்ள வேர் பகுதியை நீக்கிவிடவும். பெரிய துண்டுகள் வேகவைக்க சரியாக இருக்கும். நீங்கள் பொரியல் போன்று தயாரிக்க வேண்டுமானால் கிழங்கை மசித்து கொள்ளவும். அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
  • நறுக்கிய கிழங்கை குளிர்ந்த நீரில் 3-4 முறை அதில் உள்ள மண் போகும்வரை கழுவிகொள்ளவும். கழுவிய கிழங்கு வெள்ளையாக இருக்கும். இது தற்போது சமைக்க தயார்.
    மரவள்ளிகிழங்கு தயாரிக்கும்முறை

மரவள்ளிகிழங்கு சமைப்பது எப்படி?

  • நறுக்கிய மரவள்ளிகிழங்கு துண்டுகளை ஒரு பெரிய பாத்திரத்தில் அல்லது பிரஷர் குக்காரிலெடுத்துகொள்ளவும்.
    மரவள்ளிகிழங்கு தயாரிக்கும்முறை
  • தண்ணீரை பாத்திரத்தில் கிழங்கு முழுவதும் மூழ்கி அதற்கும் மேலே 2-3 அங்குலத்திற்கு இருக்குமாறு வைத்துகொள்ளவும். மாவு சத்து அதிகமுள்ள கிழங்குவகையானதால் தண்ணீர் அதிகமாக வைத்து சமைக்க வேண்டும்.
  • 1 தேக்கரண்டி உப்பு சேர்க்கவும்.
  • அடுப்பில் தண்ணீரை வைத்து கொதிக்க விடவும். கிழங்கை சேர்த்து அடுப்பை குறைத்து 10-15 நிமிடங்கள் கிழங்கு நன்றாக வேகும் வரை வைக்கவும். பிரஷர் குக்கரில் வைப்பதாக இருந்தால் மூடியை மூடி 2 விசில்கள் விடவும். அடுப்பை அணைத்து குக்கரை இறக்கவும்.
  • அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும்.
    மரவள்ளிகிழங்கு தயாரிக்கும்முறை

பரிமாற பரிந்துரைப்பது

  • வேகவைத்த மரவள்ளிகிழங்கை காரமான கெட்டி சட்னியுடன் பரிமாறலாம். பூண்டு சட்னி, தேங்காய் சம்மந்தி, மிளகாய் சட்னி, புளி சட்னியுடனும் பரிமாறலாம்.
    மரவள்ளிகிழங்கு தயாரிக்கும்முறை
  • இதை சர்க்கரையுடன் பரிமாறலாம். சிலருக்கு துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரையுடன் உண்ண விரும்புவார்கள்.
    மரவள்ளிகிழங்கு தயாரிக்கும்முறை
  • இது மீன் குழம்பு, இறைச்சி குழம்புடனும் உண்பது மிகவும் சுவையாக இருக்கும்.

மரவள்ளிகிழங்கு தயாரிக்கும்முறை



உங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்கவும்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.