கறுப்பு அரிசி புட்டு
கறுப்பு அரிசி என்பது அரிசி சற்று பழுப்பு நிறத்துடன் காணப்படும் ஒரு வகையாகும். இது தமிழ் நாட்டில் செட்டிநாடு பக்கம் காணப்படும். இதை கவுனி அரிசி அல்லது கறுப்பு அரிசி என்று தமிழில் கூறுவர். இந்த வகை அரிசியில் மிகவும் அதிக சத்தான ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் இந்த நிறத்தில் உள்ளது. இதை சமைத்தால் சற்று விரைப்புதன்மையுடன் இருக்கும். இதில் மிகவும் பிரபலமான ஒரு வகை இனிப்பு செட்டிநாட்டில் செய்யப்படுகிறது. மற்றொன்று கவுனி அரிசி புட்டு ஆகும்.
கறுப்பு அரிசி வேக அதிக நேரம் ஆகும் எனவே செய்வதற்கு முன் ஊற வைத்து பின்னர் செய்வர். இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அல்லது குறைந்தது 2 மணி நேரம் ஊறவேண்டும். அப்பொழுதுதான் மிருதுவான புட்டு தயாரிக்கமுடியும். இந்த மாவை நாம் வீட்டில் மிக்ஸியில் அரைத்துகொள்ளலாம். அல்லது அரவை மில்லில் சற்று அதிக அளவு மாவை அரைத்து அதிக நாட்களுக்கு வைத்து உப்யோகித்துகொள்ளலாம். இது நாம் சாதாரணமாக வீட்டில் தயாரிக்கும் புட்டு செய்முறைதான். தற்போது தயாரிக்கும் முறையை பார்ப்போம்.
கறுப்பு அரிசி புட்டு செய்முறை
கறுப்பு அரிசி புட்டு
Ingredients
- கறுப்பு அரிசி – ½ கிலோ
- துருவிய தேங்காய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அள்வு
- தண்ணீர் – தேவையான அளவு
Instructions
கறுப்புஅரிசி மாவு தயாரிக்கும் முறை
- அரிசியை தண்ணீரில் கழுவி இரவு முழுவதும் அல்லது குறைந்தது 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
- அரிசியில் உள்ள தண்ணீரை வடித்துவிட்டு ஒரு சுத்தமான துணியில் உலரவிடவும். 2-4 மணிநேரம் உலர்த்தவும்.
- மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துகொள்ளவும். இல்லாவிடில் மிஷினில் அரைக்கவும்.
- அரைத்த மாவை வெறும் வாணலியில் 3-5 நிமிடங்கள் மாவில் உள்ள ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும். இந்த புட்டு மாவை இறுக்கமாக மூடக்கூடிய பாத்திரத்தில் போட்டுவைத்துகொண்டால் 2 மாதங்கள் வரை உபயோகித்துகொள்ளலாம்.
செய்முறை
- 2 கிண்ணம் மாவை ஒரு தட்டில் போட்டு சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
- கொட்டிய மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவு உதிரியாகவும், ஈர்ப்பதமாகவும் இருக்கும்படி கலந்து கொள்ளவும். மாவை கையில் எடுத்து பிடித்துவிட்டால் உதிரவேண்டும். இதுவே சரியான பதமாகும்.
- நான் இன்று புட்டு செய்யும் குக்கரை பயன்படுத்துகிறேன். குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- புட்டு குழலில் முதலில் துருவிய தேங்காய் 1-2 மேசைக்கரண்டி போடவும். அடுத்து தயார் செய்த புட்டு மாவை நிரப்பவும்.
- புட்டு குழலை மெதுவாக புட்டு குடம் அல்லது குக்கரின் மேலே பொருத்தவும்.
- சில நிமிடங்களில் புட்டு குழலின் வழியாக ஆவி வெளியாகும். சிறிது நேரத்தில் புட்டு வெந்த வாசம்வரும்.
- அடுப்பிலிருந்து எடுத்து தட்டில் கொட்டி பரிமாறவும்.
கருப்பு அரிசி புட்டு தயாரிக்க விரிவான படிமுறைகள்
தேவையான அளவு கறுப்பு அரிசி மாவை தட்டில் போட்டுகொள்ளவும்.
உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து உதிரியாக பிசறிகொள்ளவும்.
விரல்களால் நன்றாக கலந்து எல்லாமாவையும் கட்டியில்லாமல் கலக்கவும்.
குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். புட்டு குழலில் துருவிய தேங்காய் சேர்க்கவும். அடுத்து தயார் செய்தமாவை நிரப்பவும்.
புட்டு குழலை குக்கரில் விசில் பொருத்துமிடத்தில் பொருத்தவும். சிறிது நேரத்தில் ஆவிவர ஆரம்பிக்கும். இன்னும் சிறிது நேரத்தில் புட்டு வெந்த வாசம் வரும். அடுப்பை அணைக்கவும்.
ஆவியில் வேகவைத்த புட்டு உண்ண தயார்.
கறுப்பு அரிசி புட்டு பரிமாறும் முறை
- பாரம்பரியமாக புட்டு சர்க்கரை அல்லது வெல்லத்துடன் உண்பார்கள். ஆனால் நாட்டு சர்க்கரையுடன் உண்பது உடல் நலத்திற்கு ஏற்றது.
- அனைவரும் புட்டுடன் வாழைப்பழம் சேர்த்து உண்பதை விரும்புவார்கள்.
- கேரளாவில் எல்லா புட்டு வகைகளும் கடலை குழம்பு, வேகவைத்த பச்சைபயறு மற்றும் பப்படத்துடன் பரிமாறப்படும்.