கேரளா கடலை கறி
கேரளா கடலை கறி அல்லது கடலை குழம்பு என்பது கருப்பு கடலை மற்றும் தேங்காய் சேர்த்து செய்யும் சுவையான குழம்பு ஆகும். இது பாரம்பரியமாக கேரளாவில் புட்டுடன் பரிமாறப்படும் குழம்பாகும். இது சப்பாத்தி, பூரி, ஆப்பம், தோசை மற்றும் சாதத்துடனும் பரிமாற ஏற்றது. இதே முறையை பயன்படுத்தி தட்டை பயறு, மொச்சை, ஆகியவற்றை கடலைக்கு பதிலாக பயன்படுத்தி குழம்பு செய்யலாம்.
கேரளா கடலை கறி
Ingredients
- கருப்பு கடலை (சுண்டல் கடலை) - 1 கிண்ணம்
- வெங்காயம் – ½ (நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2
- கொத்தமல்லி தூள் – 1.5 தேக்கரண்டி
- வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்
- சிறிய வெங்காயம் - 4
- பூண்டு – 4 பற்கள்
- இஞ்சி – 1 அங்குல துண்டு
- பெருஞ்சீரகம் – ½ தேக்கரண்டி
- கரம் மசாலா – 2 பட்டை 3 கிராம்பு, 2 ஏலக்காய்
- தேங்காய் – ½ கிண்ணம் (குழம்பு அதிகமாக வேண்டுமானால் அதிகம் சேர்த்துகொள்ளலாம்)
- தக்காளி – 1 பெரியது
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் (முக்கியமாக தேங்காய் எண்ணெய்) – 1-2 மேசைக்கரண்டி
- கடுகு – ¼ தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து
- வர மிளகாய் - 2
Instructions
- கடலை இரவு முழுவதும் ஊற வைத்து குக்கரில் உப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வேகவைக்கவும்.(4 விசில்கள் விடவும்)
- இந்த நேரத்தில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்துகொள்ளவும். (தக்காளி தவிர)
- குறைந்த தீயில் வைத்து தேங்காய் சிவக்கும்வரை வறுக்கவும். தீயை குறைக்காவிட்டால் கருகிவிடும்.
- வறுத்தவற்றை ஆற வைத்து தண்ணீர், தக்காளி சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெயைசூடாக்கி கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.
- இதனுடன் வர மிளகாய், அரைத்த மசாலா சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
- மசாலா பொடிகள் சேர்க்கவும் – (வரமிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் தூள்.)
- வேகவைத்த கடலையை சேர்த்து கொதிக்கவிடவும். அடுப்பை குறைத்து வைத்து குழம்பு கெட்டியாகும் வரை வைக்கவும்.
- உப்பு அளவு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும். புட்டுடன் பரிமாறவும்.
பரிமாற பரிந்துரைப்பது
- கேரளாவில் கடலை குழம்பு புட்டுடன் பரிமாறுவார்கள்.
- சப்பாத்தி, பூரி, ஆப்பம், தோசை மற்றும் சாதத்துடனும் பரிமாற ஏற்றது.
மாறுபாடாக பரிந்துரைப்பது
- கடலை கறி என்பதை தமிழ் நாட்டில் கடலை குழம்பு என்று அழைப்பர். கடலைக்கு பதில் தட்டை பயறு, மொச்சை உபயோகித்து இதே முறையில் குழம்பு செய்யலாம். இதனுடன் கத்திரிக்காய் சேர்த்தும் செய்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.