பாகற்காய் பிட்லை
பாகற்காய் பிட்லை பிராமணர்களின் விருப்ப உணவில் ஒன்றாகும். அடிக்கடி அவர்கள் செய்யும் உணவில் இடம்பெறும் ஒன்று. பொதுவாக மோர்குழம்பு செய்யும்போது இதை அவசியம் செய்வர். பாகற்காய் துவர்ப்பு அதிகமாக கொண்டதால் இதுபோன்று செய்தால் துவர்ப்பு தன்மை குறைவாக தெரியும். புளி, வெல்லம் சேர்த்து செய்தாலும் பாகற்காய் சுவையாக இருக்கும். வித்தியாசமாக செய்தால் விரும்பி உண்பார்கள். எனவே நீங்களும் செய்து பாருங்கள்.
பாகற்காய் பிட்லை
Ingredients
- பாகற்காய் (பாவக்காய்) – 1 பெரியது
- துவரம் பருப்பு சிகப்பு உடைத்த பருப்பு – ½ கிண்ணம்
- புளி – சிறிய எலுமிச்சை அளவு
- கொத்தமல்லி விதை – 1 தேக்கரண்டி
- கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
- துருவிய தேங்காய் – 4-5 மேசைக்கரண்டி
- வர மிளகாய் – 2-3
- கருப்பு மிளகு – 4-5
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- எண்ணெய் - 2- 3 மேசைக்கரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள்
- துருவிய தேங்காய் – 1 தேக்கரண்டி
- கடுகு – 1 தேக்கரண்டி
- வெந்தயம் – ¼ தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து
- பெருங்காயத்தூள் – ¼ தேக்கரண்டி
Instructions
- பாகற்காயை கழுவி மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி பாகற்காயை மொறுமொறுப்பாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
- அதே வாணலியில் கொத்தமல்லி விதை (தனியா), கடலைபருப்பு, வர மிளகாய், மிளகு, துருவிய தேங்காய் அனைத்தையும் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- துவரம் பருப்பை குழைவாக வேக வைத்து கொள்ளவும்.
- வாணலியில் பாகற்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிடவும்.
- அரைத்த மசாலா, வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து இதனுடன் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும்.
- பாவக்காய் பிட்லை தயார். மோர் குழம்பு, வெள்ளை சாதம், மற்றும் பப்படத்துடன் பரிமாறலாம்.
புளி சேர்க்கும் முறை விட்டு விட்டீர்கள் (பாகற்காய் பில்லி)