காலிஃபிளவர் குழம்பு (தயிர் கோபி)
குளிர் காலங்களில் ரோட்டோரங்களில் அதிக அளவில் காலிஃபிளவர் பூக்கள் விற்பதை காணலாம். நான் அடிக்கடி வாங்கி காலிஃபிளவர் வறுவல், காலிஃபிளவர் மஞ்சூரியன் போன்றவற்றை சமைப்பேன். இந்த காலிஃபிளவர் குழம்பு, தயிர் கோபி என்றும் அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் இதை ரொட்டி மற்றும் சாதத்துடன் பரிமாறுவர். காலிஃபிளவர் தயிர் மற்றும் மசாலா சேர்த்து சுவையான விதத்தில் சமைக்கப்படுகிறது.
மிகவும் சுலபமான முறையில் தயாரிக்கப்படும் இந்த காலிஃபிளவர் குழம்பு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். மிக குறைவான நேரத்தில் நறுக்கவோ, அரைக்கவோ தேவையில்லாததால் சுலபமாக தயாரிக்கலாம். இறுதியில் இதன் சுவை அனைவரும் விரும்பும் வண்ணம் நிச்சயம் இருக்கும்.
காலிஃபிளவர் குழம்பு செய்முறை
காலிஃபிளவர் குழம்பு
Ingredients
- காலிஃபிளவர் – 1/4 கிலோ (நடுத்தர அளவில் உள்ளது)
- பச்சை பட்டாணி – 1/2 கிண்ணம்
- கடைந்த தயிர் – 1 கிண்ணம்
- வெங்காயம் – 1 (நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 2
- தக்காளி – 2-3 (பொடியாக நறுக்கியது அல்லது அரைத்தது)
- இஞ்சி – பூண்டு – 2 தேக்கரண்டி (அரைத்த விழுது அல்லது துருவியது)
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- ஓமம் – 1/4 தேக்கரண்டி
- கரம் மசாலா பவுடர் – 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2
- வர மிளகாய் – 1 தேக்கரண்டி
- உப்பு – ருசிக்கேற்ப
- எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
- கொத்தமல்லி தழை – அலங்கரிக்க தேவையான அளவு
Instructions
- காலிஃபிளவர் நடுத்தர அளவில் துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் போடவும். இது காலிஃப்ள்வரில் உள்ள சிறிய புழுக்கள் வெளியேற உதவும்.
- தண்ணீரை வடிகட்டி பூக்களை ஓரு டவளில் காயவிடவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு வெடிக்கவிட்டு சீரகம், அஜ்வின் சேர்க்கவும்.
- துருவிய அல்லது அரைத்த இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். வெங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி சேர்த்து, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
- காலிஃபிளவர் துண்டுகள் சேர்த்து வரமிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
- பச்சை பட்டாணி, 1/ 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து மேலும் 5-7 நிமிடங்கள் காய்கறிகள் வேகும் வரை மூடிவைக்கவும்.
- தீயை குறைத்து கடைந்த தயிர் சேர்க்கவும். கட்டியாகாமல் இருக்க கிளறிவிடவும். குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைக்கவும்.
- இறுதியாக கரம் மசாலா பொடி சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும். அடுப்பை அணைக்கவும். சுவையான காலிஃபிளவர் குழம்பு தயார்.
காலிஃபிளவர் குழம்பு தயாரிக்க விரிவான படிமுறைகள்
காலிஃபிளவர் துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் போடவும். தண்ணீரை வடித்துவிட்டு டவளில் காயவிடவும்.
ஓரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு, சீரகம், அஜ்வின் சேர்க்கவும்.
துருவிய இஞ்சி, பூண்டு அல்லது அரைத்த விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி நன்றாக வதங்கும் வரை கிளறவும்.
காலிஃபிளவர் துண்டுகள் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
வர மிளகாய் தூள், உப்பு சேர்த்து பச்சை பட்டாணி சேர்க்கவும். 1 நிமிடம் வதக்கி 1/ 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து மேலும் 5-7 நிமிடங்கள் காய்கறிகள் வேகும் வரை மூடிவைத்து வேகவிடவும்.
அடுப்பை குறைத்து கடைந்த தயிர் சேர்க்கவும். அடிபிடிக்காமல் இருக்க நன்றாக கிளறிவிடவும்.
அடுப்பை குறைத்து மேலும் சில நிமிடங்கள் வைக்கவும். இறுதியாக கரம் மசாலா பவுடர் சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
அடுப்பை அணைக்கவும். சுவையான குழம்பு பரிமாற தயார்.
காலிஃபிளவர் குழம்பு பரிமாற பரிந்துரைப்பது
- சப்பாத்தி, பூரி, லச்சா பரோட்டா அல்லது ஏதேனும் ஒரு ரொட்டி வகையுடன் பரிமாறலாம்.
- சீரக புலாவ் அல்லது வெள்ளை சாதத்துடனும் பரிமாறலாம்.