மோரு கூட்டான்
மோரு கூட்டான் எனப்படுவது கேரளாவில் தயாரிக்க கூடிய மோர் குழம்பு வகைககளில் ஒன்று. இது வீட்டில் காய்கறிகள் இல்லாதபோதும் தயிர் அதிகமாக இருக்கும்போதும் உடனடியாக தயாரிக்க கூடிய எளிய ஒரு வகை குழம்பாகும். இதற்கு அப்பளம் மட்டும் பொரித்துவிட்டால் போதுமானது. விருப்பட்டால் கத்திரிக்காய் (வேகவைத்தது), வெண்டைக்காய் (வதக்கி வேகவைத்தது), சேப்பங்கிழங்கு (வேகவைத்தது) சேர்த்து செய்யலாம். இதில் குழம்பை சற்று நீர்க்க வைத்து பருப்பு வடை செய்து சேர்க்கலாம். குழம்பு கெட்டியாக இருந்தால் வடை சேர்க்கும்போது மேலும் கெட்டியாகிவிடும். வடை சேர்த்து செய்யும் மோரு கூட்டான் மிகுந்த சுவையுடன் இருக்கும்.
மோரு கூட்டான் செய்முறை
மோரு கூட்டான்
Ingredients
- துருவிய தேங்காய் – 1/2 மூடி
- பச்சை மிளகாய் – 2 அல்லது காரத்துக்கு ஏற்ப
- தயிர் – 1 கிண்ணம்
- கடுகு – 1 தேக்கரண்டி
- வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிதளவு
- உப்பு – சுவைக்கேற்ப
Instructions
- தேங்காயை பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்க்கவும்.
- கடுகு பொரிந்தவுடன் கருவேப்பிலை சேர்க்கவும். அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- தயிரை கடைந்து தண்ணீர் சேர்த்து கலக்கவும், உப்பு சேர்க்கவும். கொதித்த பின்னர் அடுப்பிலிருந்து இறக்கவும். மோர் கூட்டான் பரிமாற தயார்.
பரிமாற பரிந்துரைப்பது
- வெள்ளை சாதத்துடன், அப்பளம் சேர்த்து பரிமாறலாம். உருளைகிழங்கு வறுவல், கத்திரிக்காய் பொரியல், கொத்தவரங்காய் பருப்பு உசிலி மிகவும் சரியான ஜோடியாக இருக்கும்.