இஞ்சி - பூண்டு – 2 தேக்கரண்டி(அரைத்த விழுது அல்லது துருவியது)
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
ஓமம் – 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா பவுடர் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2
வர மிளகாய் – 1 தேக்கரண்டி
உப்பு – ருசிக்கேற்ப
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை – அலங்கரிக்க தேவையான அளவு
Instructions
காலிஃபிளவர் நடுத்தர அளவில் துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் போடவும். இது காலிஃப்ள்வரில் உள்ள சிறிய புழுக்கள் வெளியேற உதவும்.
தண்ணீரை வடிகட்டி பூக்களை ஓரு டவளில் காயவிடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு வெடிக்கவிட்டு சீரகம், அஜ்வின் சேர்க்கவும்.
துருவிய அல்லது அரைத்த இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். வெங்காயம், மஞ்சள் தூள் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
நறுக்கிய தக்காளி சேர்த்து, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
காலிஃபிளவர் துண்டுகள் சேர்த்து வரமிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
பச்சை பட்டாணி, 1/ 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து மேலும் 5-7 நிமிடங்கள் காய்கறிகள் வேகும் வரை மூடிவைக்கவும்.
தீயை குறைத்து கடைந்த தயிர் சேர்க்கவும். கட்டியாகாமல் இருக்க கிளறிவிடவும். குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைக்கவும்.
இறுதியாக கரம் மசாலா பொடி சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்க்கவும். அடுப்பை அணைக்கவும். சுவையான காலிஃபிளவர் குழம்பு தயார்.