முந்திரி, உலர் திராட்சை, பாதாம், சிறிய தேங்காய் துண்டுகள் - 1/4 டம்ளர்(உங்கள் விருப்பதிற்கேற்ப / எது வீட்டில் உள்ளதோ)
Instructions
குக்கரில் பாசி பருப்பு சேர்த்து எண்ணெய் ஊற்றாமல் 5 நிமிடங்கள் வறுக்கவும்.
அரிசியை நன்றாக கழுவி குக்கரில் சேர்த்து, 4 டம்ளர் தண்ணீர் (விரும்பினால் பால் சேர்த்து), நெய் சேர்க்கவும்.
குக்கரில் 3-4 விசில் விட்டு (அரிசி, பருப்பு நன்றாக மசியும் வரை) வேகவிடவும். இதை கனமான அடிப்பாகம் உள்ள பாத்திரத்திலும், பானையிலும் செய்யலாம்)
அரிசி வேகும் நேரத்தில், வாணலில் 1 மேசைக்கரண்டி நெய்விட்டு முந்திரி, பாதாம் பருப்பு பொன்னிறமாக வறுக்கவும். உலர் திராட்சையை கடைசியாக சூட்டில் சேர்க்கவும்.
கனமான அடிப்பாகம் உள்ள பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லப்பாகு காய்ச்சி (வெல்லம் கரைந்து தண்ணீர் பதம் மாறி சிறிது கெட்டியாகும்) வடிகட்டவும். வெல்லம் சுத்தமாக இருந்தால் வடிகட்ட வேண்டாம்.
குக்கரை திறந்த பின் காய்ச்சிய வெல்லப்பாகை ஊற்றி கலக்கவும். சூட்டோடு நன்றாக கலந்தால் அரிசி, பருப்பு மசியும். தண்ணீராக இருந்தால் அடுப்பை குறைத்து சிறிது கெட்டியாகும் வரை வைக்கவும்.
தாளித்தவற்றை அரிசி, பருப்புடன் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான சக்கரை பொங்கல் தயார்.