சமோசா
சமோசா இந்தியாவில் ஒரு பிரபலமான ஒரு சிற்றுண்டி. டொர்டிலா/ ஸ்ப்ரிங்க் ரோல் ஸீட்ஸ் நடுவில் ருசியான உருளைக்கிழங்கு கலவை வைத்து எண்ணெயில் பொரித்த சுவையான சமோசா செய்முறை விளக்கம் பின்வருவது.
டொர்டிலா / ஸ்ப்ரிங்க் ரோல் ஸீட்ஸ் என்பது பல்பொருள் அங்காடியில் கிடைக்கும். உடனடியாக சுலபமாக சமோசா தயாரிக்க இதை பயன்படுத்தலாம். அல்லது வீட்டில் மைதா மற்றும் கோதுமை கொண்டு நாமே மாவு பிசைந்தும் செய்யலாம்.
சமோசா செய்முறை
சமோசா
Ingredients
- டொர்டிலா/ ஸ்ப்ரிங்க் ரோல் சீட்ஸ் - 4
- உருளைக்கிழங்கு - 2 (வெட்டி வேக வைத்தவை)
- கேரட் - 1 (பொடியாக நறுக்கி வேக வைத்தது)
- பச்சை பட்டாணி - 1 கிண்ணம்
- கொத்தமல்லி இலை - கையளவு (நறுக்கியது)
- பச்சை மிளகாய் - 2
- சீரகம் - ¼ தேக்கரண்டி
- இஞ்சி-பூண்டு விழுது -1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- முந்திரி பருப்பு - 6-7
- எலுமிச்சை - 1/2
- உப்பு - தேவைக்கேற்ப
Instructions
- வாணலில் எண்ணெய் சூடான பின், சீரகம், இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், முந்திரி பருப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- வேக வைத்த உருளை துண்டுகள், கேரட், பச்சை பட்டாணி, உப்பு, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி சேர்க்கவும்.
- 2 நிமிடங்கள் ஆன பின் எலுமிச்சை பிளிந்து கிளறவும். தற்போது சுவையான பூரணம் தயார்.
- வெளிபுறம் மூடுதலிற்கு டொர்டிலாவை இரண்டாக வெட்டவும்.
- கூம்பு வடிவில் டொர்டிலாவை உருட்டி, பூரணத்தை அதில் நிரப்பவும்.
- முட்டை அல்லது தண்ணீர் துளிகள் தொட்டு ஓரங்களை ஒட்டி மூடவும்.
- வாணலில் பொரிக்குமளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக சூடான பின் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- அதிகப்படியான எண்ணெயை டிஸ்சு தாளில் ஒத்தி எடுத்து தக்காளி சாஸ்/ புதினா சட்னி உடன் பரிமாறவும்.
குறிப்பு
- இங்கே குறிப்பிட்டுள்ளது ஒரு வகையான பூரணம் தான். எந்த காய்கள் வைத்தும் பூரணம் செய்யலாம். மீதமான பொரியல்களில் கூட செய்யலாம்.
- கொத்துக் கறி கொண்டு அசைவ சமோசாவும் செய்யலாம்.
- டொர்டிலாவிற்கு பதில் சப்பாத்தி/ பூரிக்கு பிசைந்த மாவிலும் செய்யலாம். படத்தில் காண்பிக்கப்பட்டது டொர்டிலா சமோசா செய்முறையாகும்.
படங்களுடன் விளக்கமுறை
டொர்டிலாவை எடுத்து கொள்ளவும்.
டொர்டிலாவை இரண்டாக வெட்டவும்.
கூம்பு வடிவில் டொர்டிலாவை உருட்டவும்.
பூரணத்தை டொர்டிலா கூம்பில் நிரப்பவும்.
சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.