தயிர் இட்லி
தயிர் இட்லி (தெயிர் இட்லி, டஹி இட்லி): குளிரூட்டப்பட்ட தயிர் பொறித்த இட்லியை கலந்து சூடான கோடை மாலையில் ஒரு புத்துணர்ச்சியூட்டும் சிற்றுண்டியாக உண்ணலாம்.
தயிர் இட்லி செய்முறை
தயிர் இட்லி
Servings: 4 people
Ingredients
- மினி இட்லிகள் - 25 அல்லது 6 இட்லிகள் - ஒவ்வொன்றையும் நான்காக வெட்டவும்
- தயிர் - 4 - 5 கிண்ணம்
- பால் (அல்லது தண்ணீர்) - 1 கிண்ணம்
- கொத்தமல்லி - அழகுக்காக
- கேரட் துருவல் - அழகுக்காக
- சக்கரை - ஒரு சிட்டிகை
- உப்பு - தேவையான அளவு
அரைக்க வேண்டியவை :
- முந்திரி - 1 மேசைக்கரண்டி
- தேங்காய் (துருவியது) - 2 மேசைக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
தாளிக்க தேவையானவை :
- கடுகு - 1/4 தேக்கரண்டி
- கருவேப்பிலை - 5 - 6 இலைகள்
- உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 3-4
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
Instructions
- இட்லிகளையை ஆவியில் வேக வைத்து நான்கு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
- தயிரை கடைந்து, அதில் தேவையான அளவு உப்பு, சக்கரை சேர்க்கவும்.
- வாணல் சூடான பின், கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும்.
- தாளித்தவற்றை தயிரில் கலந்து ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும்.
- முந்திரி பருப்பு, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் மூன்றையும் நன்றாக அரைத்து தயிரில் கலக்கவும்.
- இறுதியாக பரிமாறும் அரை மணி நேரத்திற்கு முன் இட்லி துண்டுகளை தயிரில் கலக்கவும்.(இல்லையெனில் குழைந்து போகும்).
- கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்.
- கோடை காலத்தில் குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறலாம்.
Notes
இட்லி துண்டுகளை எண்ணெயில் பொரித்தும் தயிரில் கலக்கலாம். அப்பொது குழைந்து போகாது. ஆனால் நிறம் மாறாமல் பார்த்து கொள்ள வேண்டும்.