கார கொழுக்கட்டை
கார கொழுக்கட்டை சத்தான, சுவையான, ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்பட்ட ஒரு சிற்றுண்டி. இது மாலை நேரத்தில் தேநீருடன் அல்லது காலை நேரத்தில் சிற்றுண்டியாக தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம். மற்ற இந்திய உணவு வகை போன்று இது ஆவியில் வேக வைப்பதால் கொழுப்பு சத்து இல்லாதது. கார கடுபு என்பது தமிழில் கார கொழுக்கட்டை என்றழைக்கப்படுகிறது. இதை கணேஷ் சதுர்த்தி (விநாயகர் சதுர்த்தி) போது கார கொழுக்கட்டை, இனிப்பு கொழுக்கட்டை தேங்காய், வெல்லம் சேர்த்ததும் செய்வார்கள்.
நான் ஏற்கனவே கொழுக்கட்டை வகைகள் சிலவற்றை பகிர்ந்துள்ளேன். அதில் பிரசித்தமானது கர்நாடகாவில் உள்ளே உளுத்தம் பருப்பு பூரணம் வைத்து தயாரிக்கப்படும் இந்த கார கொழுக்கட்டையாகும். நான் முதலில் இதை சுவைத்து பார்த்தது எங்கள் குடியிருப்பில் இருக்கும் ஸ்ரீலக்ஷ்மி தயாரித்து எனக்கு கொடுத்த போதுதான். இந்த பூரணம் வைத்து தயாரிப்பதால் நான் இதுவரை சுவைக்காத வித்தியாசமான சுவையில் இருந்தது. மட்டுமல்லாமல் மேல் மாவும் மிகவும் மிருதுவாக இருந்தது. மிக மிருதுவாகவும், விரிசல் இல்லாமலும் இருந்தது. நான் அவரிடம் கேட்ட போது, பச்சரிசி ஊற வைத்து அரைத்து செய்வதாக கூறினார். மற்ற சிலர் அரிசி மாவில் தயாரிப்பது போல் அல்ல. நான் ஆர்வத்துடன் செய்முறையை கேட்டேன். அவர் செய்முறையை கூறியது அல்லாமல் முழு செய்முறையையும் செய்து காட்டினார். அந்த தயாரிப்பு முறையையே கீழே பகிர்ந்துள்ளேன். இது நிச்சயம் கொழுக்கட்டை சரியாக தயாரிக்க தெரியாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கார கொழுக்கட்டை தயாரிக்க வீடியோ வழிமுறைகள்
கார கொழுக்கட்டை தயாரிப்புமுறை
கார கொழுக்கட்டை
Ingredients
- பச்சரிசி – 1 கிண்ணம்
- உப்பு – 1/ 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு பூரணம்
- உளுத்தம் பருப்பு – 1/2 கிண்ணம் (ஊற வைத்தது)
- ரவை – 2 மேசைக்கரண்டி
- கடலை பருப்பு – 2 மேசைக்கரண்டி (ஊற வைத்தது)
- பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி – 1/2 அங்குலம் (பொடியாக நறுக்கியது)
- கருவேப்பிலை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
- உப்பு – 1/2 தேக்கரண்டி (அல்லது தேவைகேற்ப
Instructions
வெளி மாவு தயாரிக்க
- பச்சரிசியை கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குறைந்தது 5 மணி நேரம் ஊற வைக்கவும். நீங்கள் காலையில் தயாரிக்க விரும்பினால், இரவில் கூட ஊற வைத்து கொள்ளலாம். பச்சரிசிக்கு பதிலாக பச்சரிசி பாதி, புழுங்கலரிசி பாதி என இரண்டும் சம அளவு எடுத்து கொள்ளலாம்.
- ஊற வைத்த அரிசியை மிருதுவாக அரைத்து கொள்ளவும். கொரகொரப்பாக இருக்க கூடாது. கொழுக்கட்டை தயாரிக்கும் போது மிருதுவாக இருக்கும்.
- அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தைவிட நீர்க்க இருக்கும், படி நீர் தோசை மாவு போல கரைத்து கொள்ளவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து கரைத்து வைத்த மாவை ஊற்றி குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
- 5 நிமிடங்களில் மாவு கெட்டியாக தொடங்கும். மேலும் சில நிமிடங்கள் கிளறினால் மாவு கெட்டியாகி விடும். அடுப்பை அனைக்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
பூரணம் தயாரிக்க
- உளுத்தம் பருப்பு, கடலை பருப்பை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- உளுத்தம் பருப்பை நைஸாக அரைத்து கொள்ளவும்.
- ரவை, ஊற வைத்த கடலை பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பை அரைத்த மாவுடன் கலக்கவும். உள்ளே வைக்க பூரணம் தயார்.
கொழுக்கட்டை தயாரிக்க
- ஒரு சிறு அளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து தேய்த்து உருண்டையாக்கி கொள்ளவும்.
- ஒரு உருண்டையை பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலையில் வைத்து விரல்களால் அல்லது ஒரு தட்டால் அழுத்தி தட்டையாக்கவும்.
- மெதுவாக தட்டியதை எடுத்து இட்லி தட்டு அல்லது ஸ்டீமர் பிளேட்டில் வைக்கவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே போன்று தயாரித்து வைக்கவும்.
- ஒரு ஸ்பூன் பூரணத்தை எடுத்து தட்டில் வைத்த மாவின் ஒரு பக்கத்தில் வைக்கவும். மாவை மூடி அழுத்தி விடவும்.
- 10 நிமிடங்கள் வேக விடவும். ஆற வைத்து கொழுக்கட்டையை இட்லி தட்டில் இருந்து எடுக்கவும்.
கார கொழுக்கட்டை தயாரிக்க விரிவான படிமுறைகள்
வெளி மாவு தயாரிக்க
பச்சரிசியை கழுவி குறைந்தது 5 மணி நேரம் ஊற வைக்கவும், ஊற வைத்த அரிசியை மிருதுவாக அரைத்தி கொள்ளவும். மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் சேர்த்து நீர் தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு வாணலியில் ஊற்றி அடுப்பில் குறைந்த தீயில் வைத்து கிளறவும்.
5 நிமிடங்களில் மாவு கெட்டியாக துவங்கும். மேலும சில நிமிடங்கள் கிளறி கெட்டியான பின்னர் அடுப்பை அனைக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
பூரணம் தயாரிக்க
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பை தனித்தனியாக 1 மணி நேரம் ஊறவைக்கவும். உளுத்தம் பருப்பை தண்ணீர் சேர்க்காமல் நைஸாக அரைக்கவும். ரவை, ஊற வைத்த கடலை பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி, கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு அனைத்தையும் அரைத்த மாவுடன் கலக்கவும். இப்போது பூரணம் தயார்.
கொழுக்கட்டை தயாரிக்க
மாவு சிறிது ஆறிய பின்னர் சிறு உருண்டைகளாக செய்யவும். உள்ளங்கையில் சிறிது எண்ணெய் தடவி கொண்டு மாவை வைத்து தேய்த்து கொள்ளவும்.
ஒரு உருண்டை மாவை பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலையில் வைத்து விரல்களால் அல்லது ஒரு தட்டால வைத்து அழுத்தி தட்டையாக்கவும்.
தட்டையாக செய்ததை இட்லி தட்டு அல்லது ஸ்டீமர் தட்டில் எடுத்து வைக்கவும்.
மீதமுள்ள மாவை இதே போன்று தட்டி வைக்கவும்.
இரண்டு ஸ்பூன் தயாரித்து வைத்த பூரணத்தை தட்டிய மாவில் ஒரு புறம் வைக்கவும்.
அடுத்த பக்கம் உள்ள மாவால் மூடி, ஓரங்களை அழுத்தி விடவும்.
ஆவியில் வைத்து 10 நிமிடங்கள் வேக விடவும். நான் இட்லி தட்டுகளை குக்கரில் வைத்து வேக வைப்பேன்.
வெந்த பின்னர் ஆற வைத்து கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் இருந்து எடுக்கவும்.
கார கொழுக்கட்டை பரிமாற பரிந்துரைப்பது
மிருதுவான கார கொழுக்கட்டை காலை சிற்றுண்டியாக அல்லது மாலை நேரத்தில் டிபனாக தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.