நாட்டு கோழி உப்பு வறுவல்
நாட்டு கோழி உப்பு வறுவல் என்பது செட்டிநாட்டின் மற்றும் ஓரு சுவையான உணவு வகை. செட்டிநாடு உணவுகள் பெரும்பாலும் மசாலா பொருட்கள் அரைத்து செய்வதாக இருப்பினும் இது சற்று மாறுபட்டதாகும். இதில் குறிப்பாக மசாலா பொருட்கள், கரம் மசாலா, கொத்தமல்லி தூள் எதுவும் சேர்க்க போவதில்லை. ஆனால் இறுதியில் இதன் சுவையும், மணமும் அபாரமாக இருக்கும். இதை தயாரிக்க நாம் மிககுறைந்த அளவே பொருட்கள் சேர்க்க போகிறோம். ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள பொருட்கள் அவசியம் சேர்க்க வேண்டும். முக்கியமாக வெங்காயம், இஞ்சி, பூண்டு, வர மிளகாய் சேர்க்கவேண்டும். இவ்வளவு சுலபமான உணவை சமைக்க ஏன் நீங்கள் காத்திருக்க வேண்டும். இப்போதே துவங்குங்கள்.
நாட்டு கோழி உப்பு வறுவல் செய்முறை
நாட்டு கோழி உப்பு வறுவல்
Servings: 4 People
Ingredients
- நாட்டு கோழி – 1/ 2கிலோ
- சாம்பார் வெங்காயம் – 20 (நீளவாக்கில் நறுக்கியது)
- இஞ்சி – 1/ 2 அங்குல துண்டு (தட்டியது)
- பூண்டு பற்கள் – 20 (தட்டியது)
- தக்காளி - 1
- வர மிளகாய் - 10
- மஞ்சள் தூள் – 1/ 2 தேக்கரண்டி
- உப்பு - சுவைக்கேற்ப
- சோம்பு – 1 தேக்கரண்டி
- என்ணெய் – 2 மேசைக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து
- கொத்தமல்லி தழை – 1 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
Instructions
- கோழி கறியை நடுத்தரமான துண்டுகளாக வெட்டிகொள்ளவும். நன்றாக சுத்தம் செய்து கழுவி தண்ணீர் முழுவதையும் வடிக்கவும்.
- சிக்கனில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து மற்றவற்றை தயார் செய்யும் வரை ஊறவிடவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, சோம்பு சேர்த்து, கருவேப்பிலை போடவும்.
- வர மிளகாயை கிள்ளி சேர்க்கவும்.
- நறுக்கிய வெங்காயம் சேர்த்து, தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- நறுக்கிய் தக்காளி சேர்த்து நன்றாக மசியும்வரை வதக்கவும்.
- சிக்கன் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து 1/2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 10-15 நிமிடங்கள் வேகவிடவும்.
- சிக்கன் நன்றாக வெந்தபின்னர் மூடியை எடுத்துவிட்டு தீயை அதிகப்படுத்தி சிக்கனில் உள்ள தண்ணீர் வற்றி பிரவுன் கலர் மாறும் வரை நன்றாக வறுக்கவும்.
- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- அருமையான செட்டிநாடு நாட்டுகோழி உப்பு வறுவல் தயார்.
பரிமாற பரிந்துரைப்பது
- வடித்த வெள்ளை சாதம் ரசத்துடன் அல்லது கோழி ரசத்துடன் பரிமாறவும்.
- எலுமிச்சை சாறு வறுவலின் மேல் பிழிந்து பரிமாறலாம்.
- சாண்ட்விச் தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.